"பேரழகன்” படம் ஞாபகம் இருக்கா? நடிகர் பொன்னம்பலம் வாழ்க்கையில் நடந்த அதே சோகம்..அட பாவமே இப்படியா?
சென்னை: நடிகர் பொன்னம்பலம் ஒரு வில்லன் நடிகராக பல திரைப்படங்களில் பலரையும் மிரள வைத்திருக்கிறார்.
ஆனால் நிஜ வாழ்க்கையில் நான் அப்படியெல்லாம் இல்லை. என்னுடைய ஆரம்ப காலம் ரொம்பவே வலி நிறைந்தது என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பல ரகசியங்களை உடைத்து இருக்கிறார்.
அந்த வகையில் தான் பெண் பார்க்க போகும்போது நான் தான் மாப்பிள்ளை என்பதை தெரிந்த ஒரு பெண் தூக்கு மாட்டிக்கொள்ள முயற்சி செய்ததாக கூறியிருக்கிறார்.
சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி அதில் நடிப்பவர்களின் கேரக்டரை அப்படியே உண்மை என்று நம்புபவர்கள் இப்பவும் அதிகமானார் இருந்து கொண்டிருக்கின்றனர். அதுவும் 90ஸ் கிட்ஸ் காலகட்டத்தில் சொல்லவே வேண்டாம் திரையில் வருவதை உண்மை என்று அப்படியே நம்பிக்கொண்டிருந்தவர்கள் ஏராளம்.

அந்த மாதிரி தான் நடிகர் பொன்னம்பலம் திரைப்படங்களில் வில்லனாக நடித்து பலரையும் மிரட்டியதை உண்மை என்று நம்பி அவருக்கு நிஜத்தில் பெண் கொடுக்க யாருமே முன்வரவில்லையாம். இவர்தான் மாப்பிள்ளை என்று தெரிந்தால் அந்த மணப்பெண்கள் கூட எங்களுக்கு வேண்டாம் என்று அலறி ஓடி விட்டார்களாம்.
ஆரம்ப காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் வில்லனாக நடித்து பிரபல பிரபலம் அடைந்த பொன்னம்பலம் "கபாலி" என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்தார். அந்த நேரத்தில் தான் ஒரு முறை இவர் ஒரு வீட்டிற்கு பெண் பார்க்க போயிருந்தாராம்.அங்கு இவர்தான் அந்த மாப்பிள்ளை என்று தெரிந்ததும் அந்தப் பெண் ஓடி வீட்டிற்குள் சென்று தூக்கு மாட்டிக்கொள்ள போய்விட்டாராம்.
அதுமட்டுமில்லாமல் அங்கு ஒரு காமெடியும் நடந்திருக்கிறது. அது என்னன்னா பொன்னம்பலம் அந்த வீட்டிற்குள் போய் உட்கார்ந்தும் அந்த நாற்காலியே உடைந்து விட்டதாம். பார்ப்பதற்கு கொஞ்சம் கரடு முரடாக இருப்பதால் அந்த பெண்ணிற்கு பொன்னம்பலத்தை பிடிக்கவில்லையாம். உடனே பொன்னம்பலம் அவருடைய அம்மா மற்றும் உறவினர்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பி விட்டார்களாம்.
அதுமட்டுமில்லையாம் இவர் இப்போது கல்யாணம் முடித்து இருக்கும் பெண்ணுக்கும் கூட முதலில் பொன்னம்பலத்தை பிடிக்கவில்லையாம். முதல் ஒரு வாரத்திற்கு பொன்னம்பலத்திடம் அவர் பேச கூட இல்லையாம். அதற்கு பிறகு தான் பொன்னம்பலம் கொஞ்சம் கொஞ்சமாக பேசி அவரிடம் தன்னைப் பற்றி புரிய வைத்தாராம்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் நடிகர் பொன்னம்பலத்தின் உடல்நிலை திடீரென்று இந்த அளவிற்கு மோசம் அடைந்ததற்கு காரணம் அவருடைய உடலில் ஸ்லோ பாய்சன் இருந்ததால்தான். அது அவருக்கு தெரியாமலேயே அவருடைய சகோதரர் அவர் குடிக்கும் ஆல்கஹாலில் ஸ்லோ பாய்சனை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து வந்தாராம். இது பொன்னம்பலத்திற்கு தெரியாமல் இருந்ததால் அவருடைய உடலில் அதிகமாக பாதிக்கப்பட்டு விட்டது என்று கூறி இருக்கிறார்.
அந்த நேரத்தில் இப்படியே போய்கிட்டு இருந்தா நம்மளால எல்லோருக்கும் கஷ்டம் தான் என்று நினைத்த பொன்னம்பலம் இரண்டு முறை தற்கொலை முயற்சியும் செய்தாராம். பிறகுதான் என்ன நடந்தது என்று கண்டறிந்து தனக்கு நெருக்கமானவர்கள் செய்த உதவியில் தான் நான் இன்னைக்கு உட்கார்ந்து இருக்கேன் என்றும் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
"கொலை மிரட்டல்... பாலியல் வன்கொடுமை மிரட்டல்... திரையுலகை அதிரவைத்த நடிகை பார்வதி பரபரப்பு பேச்சு -
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications