எம்ஜிஆருக்கே "சம்பளம்" கொடுத்த அப்பா.. பொன்னம்பலத்திற்கு செய்த கொடுமை.. சாகும் போதும் கூடவா?
சென்னை: கடந்த 40 வருடங்களாக தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் வில்லன் மற்றும் காமெடி கதாபாத்திரத்தில் நடிகர் பொன்னம்பலம் நடித்து வருகிறார்
அதுபோல சின்னத்திரையின் மோஸ்ட் வான்டட் நிகழ்ச்சியாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் இரண்டு திரைகளிலும் தனது முத்திரையை பதித்துள்ள நடிகர் பொன்னம்பலம் தனது தந்தை குறித்து பகிர்ந்துள்ள தகவல்கள் ஆச்சரியம் அளிப்பதோடு மட்டுமின்றி அதிர்ச்சிகரமாகவும் இருந்து வருகிறது.
சினிமாவில் அதிகமான படங்களில் வில்லனாகவே நடித்து முரட்டு மனிதராக அறியப்பட்ட பொன்னம்பலம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பின்பு தான் அவரது உண்மையான வெகுளித்தனம் மக்களுக்கு தெரிய ஆரம்பித்தது.சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சில நடிகர்கள் உதவியுடன் மீண்டு வந்த பொன்னம்பலம் சிறுவயதில் தான் வில்லத்தனமாக இருந்திருக்கிறார்.அதற்குக் காரணம் அவரது தந்தை தான் எனவும் சமீபத்தில் கூறியிருக்கிறார்.

தனது குடும்பத்தில் தான் தான் திரையில் தோன்றிய முதல் நடிகராக இருந்தாலும், தனது குடும்பத்தில் சிலர் திரைக்குப் பின்னால் எடிட்டிங் மற்றும் ஸ்டுடியோ நிர்வாகம் போன்ற திரைத்துறை சம்பந்தப்பட்ட பணியிலேயே இருந்துள்ளதாக கூறியுள்ளார். அந்த காலத்தில் தன்னுடைய தந்தை வாகினி ஸ்டுடியோ மேலாளராக இருந்ததாகவும், ஸ்டுடியோ மேலாளர் தான் அந்த காலத்தில் அனைத்து நடிகர் ,நடிகைகளுக்கும் சம்பளம் கொடுக்கும் பழக்கம் இருந்ததால் அந்த பழக்கத்தின் படி தன்னுடைய அப்பா தான் எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா போன்ற முன்னணி நடிகர் நடிகைகளுக்கும் தன் கையால் சம்பளம் கொடுத்ததாகவும் பெருமையுடன் கூறியுள்ளார்.
தன்னுடைய தந்தை கண்ணப்ப நாயக்கர் மிகவும் கண்டிப்பானவர் என்று கூறியுள்ள பொன்னம்பலம், தனது அப்பா எதற்கெடுத்தாலும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அடித்து கொடுமை படுத்துவார் என்றும், எப்பொழுது டா நம்ம அப்பா சாவார்... இவர் சீக்கிரம் சாகவேண்டும் ஆண்டவா... என்று தனது அப்பாவை குறித்து கடவுளிடம் வேண்டிக் கொண்டதாகவும் அதிர்ச்சிகரமாக கூறியுள்ளார்.
நாட்டாமை படத்தில் வந்த வில்லன் கதாபாத்திரத்தை தனது அப்பாவையே மனதில் வைத்து நடித்ததாகவும் தெரிவித்துள்ளார். தனது அப்பா இறந்த அன்று மிகவும் மகிழ்ச்சியாக அருகில் உள்ள ஹோட்டலுக்கு சென்ற பிரியாணி சாப்பிட்டதாகவும் பொன்னம்பலம் கூறியுள்ளது தான் செம ட்விஸ்ட்..
பொன்னம்பலத்தின் தந்தையார் சாகும் தருவாயில் பொன்னம்பலத்தை அழைத்து.. நான் சீக்கிரம் இறந்து விடுவேன், நீதான் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சத்தியம் செய்யச் சொல்லி உள்ளார். என்னதான் அப்பா மீது கோபம் இருந்தாலும்,கடைசி ஆசையாக தன்னிடம் சத்தியம் கேட்டதால் அந்த சத்தியத்தை பொன்னம்பலம் செய்து கொடுத்துள்ளார். அந்த சத்தியத்தை காப்பாற்றுவதற்காகவே, சினிமா பக்கம் மட்டும் போய் விடாதே என்ற தனது தாயின் பேச்சையும் மீறி தான் சினிமாவில் நடிக்க வந்ததாகவும் கூறியுள்ளார்.
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications