கில்லி படம் பார்த்துட்டு காதலிக்கிறேன்னு மிரட்டிய லேடி.. பக்கத்தில் புருஷன்.. பிரகாஷ்ராஜ் ஓப்பன்
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் 20 வருடங்களுக்கு முன்பு வெளியான கில்லி திரைப்படம் இப்போது மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு தியேட்டரில் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜ் கில்லி திரைப்படத்தில் தான் நடித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அதில் பிரகாஷ்ராஜ் முத்துப்பாண்டியாக திரிஷா பின்னாடி சுற்றிக்கொண்டு அவருக்காக எதையும் செய்யும் நபராக இருப்பார். ஆனால் அந்தத் திரைப்படத்தில் முத்துப்பாண்டியின் கேரக்டரை பார்த்து ஒரு பெண் நான் உன்னை காதலித்தேன் என்று கணவர் முன்பே பிரகாஷ் ராஜை மிரட்டினாராம். அது குறித்து பிரகாஷ்ராஜ் நடந்த விஷயத்தை வெளிப்படையாக பேச இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வகையில் தற்போது புது ட்ரெண்ட் உருவாகி இருக்கிறது. அதிலும் பல வருடங்களுக்கு முன்பு ரசிகர்களின் மனம் கவர்ந்த திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி எல்லோரையும் கவர்ந்து வருகிறது. இதற்கு அடித்தளமாக பெரிய அளவில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தது கில்லி திரைப்படம் தான். இந்த திரைப்படத்திற்கு முன்பு எத்தனையோ திரைப்படங்களை ரிலீஸ் செய்திருந்தாலும் அதில் எல்லாம் வராத வசூல் கில்லி திரைப்படத்திற்கு அதிகமாக வந்திருக்கிறது.
இப்போது நடித்து வெளியான திரைப்படங்களை விடவும் கில்லி திரைப்படத்திற்கு மக்கள் கூட்டம் குவித்து கொண்டிருக்கின்றனர். குறித்து மக்கள் மத்தியில் மீண்டும் பேசப்பட்டு வருகிறது. அதில் "ஹாய் செல்லம்" என்று ட்ரெண்டை செட் பண்ணிய பிரகாஷ்ராஜ் கில்லி திரைப்படம் நடித்த பிறகு தன்னுடைய நிஜ வாழ்க்கையில் நடந்த நிகழ்வு குறித்து பேசி இருக்கிறார்.
அதில் ஒரு நாள் நான் ஹோட்டலுக்கு சாப்பிட போயிருந்தேன். சாப்பாடு ஆர்டர் பண்ணி சாப்பிட்டு இருந்தோம். என்னுடைய நண்பர்களும் என்னோடு இருந்தார்கள். எல்லோரும் சாப்பிட்டபடியே பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண் தன்னுடைய குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டு செல்போனை தூக்கிக்கொண்டு வந்து என்னை வீடியோ எடுத்தார். எனக்கு தர்ம சங்கடமாக போய்விட்டது.
அந்த லேடிக்கு 40 வயது இருக்கும். அவங்களிடம் அம்மா நான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் இப்போ வீடியோ எடுக்குறீங்களே சாப்பிட்டு முடித்த பிறகு கூட போட்டோ எடுத்துக்கலாமே என்று சொன்னேன். அதற்கு அந்த லேடி கோபம் ஆயிட்டாங்க. நான் கில்லி படம் பார்த்து உன்ன ஆறு வருஷமா காதலிச்சேன். நீ கிடைக்கமாட்ட என்பதால் இவரை கல்யாணம் பண்ணி இந்த பிள்ளையும் பெத்துக்கிட்டேன்.
இப்போ நீ கிடைச்சிருக்க இந்த வீடியோ கூட எடுக்க கூடாதா? என்று கோபப்பட்டார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பக்கத்தில் அவருடைய கணவரும் இருந்தார். நானும் வேறு வழி இல்லாமல் சரி வீடியோ எடுத்துக்கோங்க என்று சொல்லிவிட்டேன். வில்லனாக இருந்தாலும் முத்துப்பாண்டியின் காதல் எவ்வளவோ பெரியது என்று இப்போதும் பல மீம்ஸ்கள் பரவி வருகிறது. அதை பார்க்கும் போது எனக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது என்று அந்த பேட்டியில் பிரகாஷ்ராஜ் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications