நெஞ்சில் ரித்தன்யா! என் மகாராணியின் தந்தை என்பதே என் மகிழ்ச்சி! என் தங்கமே.. புகழ் உருக்கமான பதிவு
சென்னை: தனது குழந்தையின் பெயர் பதித்த டீசர்ட்டை அணிந்துக் கொண்டு என் நெஞ்சில் நிறைந்திருக்கிறாய் என நடிகர் புகழ் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார்.
குக் வித் கோமாளியில் காமெடியில் கலக்கிய நடிகர் புகழ் பென்ஸியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் இரு வீட்டார் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

அந்த ஷோவில் இளம் நடிகைகளான ரம்யா, தர்ஷாகுப்தா, பவித்ரா லட்சுமி, சிருஷ்டி டாங்கே உள்ளிட்டோருடன் இவர் அடித்த லூட்டி இருக்கே அப்பப்பா! அவர்களும் புகழின் கிண்டல் கேலிகளை ஜாலியாக எடுத்துக் கொள்வார்கள். இந்த நிலையில் புகழ் ஏற்கெனவே ஒரு பெண்ணை காதலித்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து இருவரும் கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயிலில் திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் நடந்தது. இதில் விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பென்ஸி கர்ப்பமானார். அவருக்கு சில மாதங்களுக்கு முன் வளைகாப்பு நடந்தது.
இருவரும் நீல நிற ஆடை அணிந்து கொண்டு வளைகாப்பு விழாவை சிறப்பாக நடத்தினர். இந்த நிலையில் புகழின் மனைவி பென்ஸி பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கடந்த மாதம் இறுதியில் (செப்டம்பர் 27) பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தையின் பாதங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு அவர் கூறுகையில் இரு முறை தாய் வாசம் தெரியவேண்டும் எனில் பெண் பிள்ளையை பெற்றெடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த மற்றொரு தாய் என் மகள் அல்ல எங்கள் மகாராணி பிறந்து இருக்கிறார். என் மகளே, தாயும் சேயும் நலம் என உருக்கமாக பதிவு வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் தனது மகளுக்கு என்ன பெயர் வைத்துள்ளார் என்பதையும் அவர் அறிவித்தார். அந்த பதிவில் "என் வாழ்வை புன்னகையால் இன்புறச் செய்ய தவமாய் கிடைத்த அழகியடி நீ.. கம்பன் இன்றிருந்தால் உனக்கென தனிக்கவிதையே வடித்திருப்பானடி... ஊரே கண் வைக்கும் அளவிற்கு, பிரம்மன் வடித்த காவியம் நீயடி என் செல்ல மகளே... கவிதைக்கு தனிப்பெயர் தேவையில்லை..., இருந்தாலும், எங்கள் வாழ்வை வசந்தமாக்கிய எங்கள் தேவதை தனித்து தெரியவே, இன்று முதல் நீ, பு.ரித்தன்யா என்று அழைக்கப்பட இருக்கிறாய் அன்பு மகளே..
எங்களின் மகாராணிக்கு பு.ரித்தன்யா என்ற பெயரை வைத்துள்ளோம் என்பதை என் அன்பு உறவுகளுக்கு தெரிவித்து கொள்கிறேன்" என பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் புகழ் தனது இன்ஸ்டாவில் மற்றொரு பதிவை நேற்று போட்டிருக்கிறார். அதில் ரித்தன்யா அப்பா என பெயர் பொரித்த டீசர்ட்டை அணிந்திருக்கிறார்.
அவர் அந்த பதிவில் கூறியிருப்பதாவது: என் நெஞ்சில் நீ நிறைந்திருப்பதற்கு உதாரணமாக உன் பெயர் பதித்த உடை... என் மகாராணியின் தந்தை என்பதிலேயே எனக்கு மகிழ்ச்சியடி... என் தங்கமே... என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் நடிகர் புகழின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications