உண்மைய சொல்ல தைரியம் வேண்டும்.. சூர்யாவிடம் மைனஸ் இருக்கு.. நடிகர் ராதாரவி பளிச்
சென்னை: நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி சூர்யா பற்றி சில விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார். சூர்யா தான் நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்த போது தான் அவருடைய முகத்துக்கு நேராக சொன்ன வார்த்தைகளை குறித்து ராதாரவி இத்தனை வருடம் கழித்து இப்போது பேசி இருக்கிறார்
பொதுவாக சினிமாவில் பல திரை பிரபலங்களின் வாரிசுகள் அடுத்தடுத்து அறிமுகம் ஆகி கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் சிவகுமாரின் இரண்டு மகன்கள் இப்போது சினிமாக்களில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் சிவகுமாரின் மூத்த மகன் சூர்யா பெரிய அளவில் நடிப்பதற்கு கஷ்டங்களை பட்டிருந்தாலும் இப்போது அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் அளவிற்கு இந்த துறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

கடந்த வாரத்தில் தான் சூர்யாவின் பிறந்தநாள் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. நடிகராக மட்டுமல்லாமல் சமூக ஆர்வலராகவும் பலருக்கும் பல்வேறு உதவிகளை சூரியா குடும்பத்தினர் செய்து வருகிறார்கள். சமீபத்தில் இவர்கள் அகரம் பவுண்டேஷன் மூலமாக பல மாணவ மாணவிகளின் படிப்புக்கு உதவி செய்திருந்தனர்.
இது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி சூர்யா குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இதுதான் இப்போது இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ராதாரவியை பொறுத்தவரை மனதில் பட்டதை டக்கென்று பேசி விடுவார்.
மேடை என்று வந்தால் இதைத்தான் பேச வேண்டும் இதை பேசக்கூடாது என்று அவர் எதையும் பார்க்காமல் எல்லா விஷயத்தையும் கொட்டி விடுவார். அதனாலேயே அவருக்கு பல்வேறு பிரச்சனைகள் வந்திருக்கிறது. ஆனாலும் நான் இப்படித்தான் இருப்பேன் என்று ஒவ்வொரு இடத்திலும் அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் சூர்யாவின் 49 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டபோது அதில் கலந்து கொண்ட ராதாரவி நான் இதுவரைக்கும் எந்த நடிகர்களின் பிறந்தநாள் பங்க்ஷன்களிலும் கலந்து கொண்டது கிடையாது. ஆனால் சூர்யாவில் பிறந்தநாள் பங்க்ஷனில் கலந்து கொண்டிருக்கிறேன் என்றால் எனக்கு சூர்யாவை ரொம்பவே பிடிக்கும். அதற்காகத்தான் நான் இதில் கலந்து கொண்டேன். பிரெண்ட்ஸ் படத்தில் சூர்யா என்னோடு நடித்திருந்தார்.
அப்போது நான் சூர்யாவை கவனித்திருக்கிறேன்... அவர் டான்ஸ் ஆட ரொம்பவும் சிரமப்பட்டார். நான் எல்லாவற்றையும் முகத்துக்கு நேராக பேசி விடுவேன் அதுபோலத்தான் அப்போது நடந்த விஷயத்தையும் சொல்லப்போறேன். யாரும் தப்பா நினைச்சுக்காதீங்க என்று சொல்லிக்கொண்டு அந்த படத்தில் விஜய் நன்றாக டான்ஸ் ஆடினார் ஆனால் சூர்யாவுக்கு ஆடவே வரல... உடனே நான் சூர்யாவை கூப்பிட்டு சூர்யா நீ சிவகுமார் அண்ணன் மகன் டா ஆட வரலைன்னு நினைக்காத உன்னால முடியும்.
வருங்காலத்தில் தமிழ் சினிமாவே தேடப்படும் நடிகராக மாறுவாய் என்று சொன்னேன். அதுபோல இன்று தமிழ் சினிமாவே கொண்டாடப்படும் நடிகராக மாறி இருக்கிறார். சூர்யா அதுபோல சூரியா ஆரம்பத்தில் ஒரு பத்திரிக்கைக்கு செய்திகள் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது நான் சொன்ன அந்த விஷயத்தையும் அதில் எழுதி இருக்கிறார். ராதாரவி என்னிடம் உனக்கு டான்ஸ் ஆட வரவில்லை என்று சொன்னார்.
அதோடு நீ சிவகுமார் மகன் உனக்கு கண்டிப்பாக டான்ஸ் ஆட வரும் என்று எனக்கு அப்போது சொன்னார் என சூரியா அந்த பத்திரிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மாதிரி வெளிப்படையா சொல்றதுக்கு ஒரு தைரியம் வேண்டும். எந்த ஒரு நடிகரும் இப்படி சொல்ல மாட்டாங்க.. நான் சொன்னதாக அந்த செய்தியில் சூர்யா எழுதியது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது என்று ராதாரவி புகழ்ந்து பேசி இருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications