பேரன் ஆசைப்பட்டாரு! ஆனால் விஜய் போட்ட நிபந்தனை! அதற்கு பிறகு நான் சந்திக்க விரும்பல! ராதாரவி ஆதங்கம்
சென்னை: நடிகர் ராதாரவி சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் விஜய் சொன்ன ஒரு நிபந்தனையால் நான் அவரை சந்திப்பதை தவிர்த்து விட்டேன் என்று ஆதங்கப்பட்டு பேசியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
நடிகர் விஜய் இப்போது அரசியலிலும் காலடி எடுத்து வைத்திருக்கும் நிலையில் சில வருடங்களாகவே பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெரும் மாணவ மாணவிகளை சந்தித்து அவர்களுக்கு உதவித்தொகை மற்றும் பரிசுகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் வரும் தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி பெயரில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு விஜய் புதியதாக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய பொழுது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விஜய் கட்சியின் சார்பாக போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் விஜய் இப்போதைக்கு நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தொடர்ச்சியாக தன்னுடைய அரசியல் பாதையில் சென்று கொண்டிருக்கும் நடிகர் விஜய் குறித்து நடிகர் ராதாரவி பேசிய வீடியோ தான் இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில் ராதாரவி பேசுகையில், நான் விஜய்யுடன் சர்க்கார் திரைப்படத்தில் நடித்திருந்தேன். விஜய் மீது என்னுடைய பேரன் ரொம்ப வெறியா இருப்பான். அவன் குழந்தையா இருக்கும் போது விஜய்யோடு சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்டான். இப்போ அவனுக்கு 11 வயசு ஆகிடுச்சு குழந்தையா இருக்கும் இப்போது கேட்டதை, நல்லா பேச தெரிஞ்ச பிறகாவது செஞ்சு கொடுக்கணும் என்று நான் சர்க்கார் படத்தில் விஜய்யுடன் நடித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய பேரனும் குடும்பமும் உன்னோடு போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுறாங்க என்று சொன்னேன்.
அப்போது விஜய்யும் வர சொல்லி இருந்தார். ஆனால் அவருடைய பிஏ சார் இப்போ மேக்கப்பில் இருக்கிறார். அதனால் இப்போ போட்டோ எடுக்க முடியாது கொஞ்சம் நேரம் ஆகும் என்று சொல்ல என்னுடைய குடும்பத்தினரும் காத்திருந்தார்கள். பிறகு மேக்கப் எல்லாம் ரிமூவ் பண்ணிட்டு விஜிமா வந்தாரு அவர் கூட என் குடும்பம் எல்லாரும் போட்டோ எடுத்துக்கிட்டாங்க.
அதற்குப் பிறகு சர்க்கார் படத்தின் பாடல் இசை வெளியீட்டு விழாவில் எனக்கு லோ பிரஷர் ஆகி மயக்கம் போட்டு விழுந்துட்டேன். அந்த நேரத்தில் விஜய் தான் என்னை பிடித்துக் கொண்டார். அப்போது எனக்கு கொஞ்சம் உதவியாகவும் இருந்தார். அதனால் அதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று இரண்டு மூன்று நாட்கள் கழித்து நான் விஜய்யை பார்க்க வேண்டும் என்று விஜய் உடைய பிஏவிற்கு போன் போட்டேன்.
அப்போ அவர் நீங்கள் விஜய்யை பார்க்க வரலாம். ஆனால் ஏற்கனவே கூட்டிட்டு வந்த மாதிரி கூட்டத்தை கூட்டிட்டு வந்துராதீங்க என்று சொன்னார். எனக்கு வின் என்று ஆகிவிட்டது. அவருக்கு வேண்டுமென்றால் அது கூட்டமாக தெரியலாம்.. ஆனால் அது என்னுடைய குடும்பம், என்னுடைய உறவுகள். இவர் எப்படி இதை சொல்லலாம்? என்று எனக்கு கோபம் வந்ததால் நானும் சரி நான் வரவில்லை என்று போனை கட் பண்ணி வைத்துவிட்டேன். அதற்குப் பிறகு விஜய்யை சந்திக்கவே இல்லை என்று அந்த பேட்டியில் ராதாரவி பேசி இருக்கிறார். இது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications