மேடையில் நடந்த அசிங்கம்.. கமல்ஹாசன் என் கையை பிடித்து கெட்ட வார்த்தை பேசி.. ராதா ரவி ஓபன்
சென்னை: நடிகர் ராதாரவி பேட்டி ஒன்றில் பேசும் போது நடிகர் கமல்ஹாசனுக்கும் தனக்கும் நடந்த வாக்குவாதம் ஒன்றை பற்றி பேசி இருக்கிறார். மேடையில் பேசும்போது நடந்த அவமானத்தால் கமல்ஹாசன் தன்னை கெட்ட வார்த்தையால் பேசி கையைப் பிடித்து சண்டை போட்டாரு என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அதற்கான காரணத்தை பற்றி பார்க்கலாம்.
நடிகர் எம்.ஆர் ராதாவின் மகனான ராதா ரவி பல வருடங்களாகவே திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதோடு நடிகர் சங்கத்தில் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். 80ஸ் காலகட்டத்தில் தொடங்கி இப்ப வரைக்கும் முன்னணி நடிகர்கள் பலரோடும் அவர் நடித்திருக்கிறார். பல திரைப்படங்களில் பாசிட்டிவ்வான கேரக்டர்களில் நடித்திருந்தாலும் அதிகமான திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார்.

அதுபோல எந்த இடங்களிலும் தன்னுடைய மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். அது சில நேரங்களில் அவருக்கே பிரச்சனையாக வந்திருக்கிறது. ஆனாலும் அதை பற்றி கவலைப்படாமல் எந்த நடிகரைப் பற்றி பாராட்ட வேண்டும் என்றாலும் முகத்துக்கு நேராகவே பாராட்டி விடுவார். அல்லது அவர்கள் செய்த செயலை பற்றி சொல்ல வேண்டும் என்றாலும் பேட்டிகளாக இருந்தாலும் சரி மேடையாக இருந்தாலும் சரி வெளிப்படையாகவே பேசி விடுகிறார்.
இதை பலர் பாராட்டியும் வருகிறார்கள் சிலர் விமர்சித்தும் வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் குறித்து சாய் வித் சித்ரா என்ற சேனலில் ராதாரவி பேசியது பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் ராதா ரவி பேசுகையில் ரஜினிகாந்த் சாருக்கு உழைப்பாளி திரைப்படம் டைமில் ரெட் கொடுத்துட்டாங்க. அப்போ நான் நடிகர் சங்கத்தில் இருந்ததால் ஒரு மீட்டிங் வைத்திருந்தேன்.
அங்கு கமல்ஹாசன் வந்திருந்தார். அவர் மேடையில் பேசும்போது சேம்பர் அவர்களே, ரஜினிகாந்த் அவர்களே, விஜயகாந்த் அவர்களே என்று சொல்லிட்டே வந்தாரு. கடைசியில் ராதாரவி.. எல்லாருக்கும் என்னுடைய வணக்கம் என்று சொல்லி முடித்து விட்டார். அதற்குப் பிறகு நான் மைக்கை பிடித்து பேசும் நேரம் வந்தது அப்போது நான் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களே, சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களே என்று அங்கிருந்த பலரை சொல்லிக் கொண்டு கடைசியில் கமல்ஹாசன் அவர்களே என்று சொல்லிவிட்டேன்.

நானும் குசும்பு பிடிச்சவன் தானே அதனால் டக்கு என்று அவர் பாணியில் அவரைப் பார்த்து பேசி விட்டேன். அதற்குப் பிறகு கமல்ஹாசன் மேடையில் ஏறினார். அந்த மேடையில் பின்னாடி தான் எல்லோரையும் இறங்க வைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது என்னை கையைப் பிடித்து கமல்ஹாசன் இழுத்தார், சும்மாவே நானும் கமல்ஹாசனும் சகஜமா பேசும்போது ரெண்டு பேரும் அதிகமா கெட்ட வார்த்தைகள் கூட பேசிக்கொள்வோம்.
அப்போது என்னிடம் அந்த நேரத்தில் கோபப்பட்டு நான் என்ன உனக்கு அவ்வளவு கேவலமாகிட்டேனா? என்னை மட்டும் கமல்ஹாசன் என்று சொல்லுற என்று கேட்டார். அதற்கு நான் நடிகர் சங்க தலைவராக தானே இருக்கிறேன் அப்போ அதெல்லாம் விட்டுட்டு என்னை மட்டும் ராதா ரவின்னு சொல்லுற என்று கேட்டேன். அதற்கு கமல்ஹாசன் நீ என்னுடைய நண்பன் என்று சொன்னார். அதற்கு நான் அப்ப நீயும் எனக்கு நண்பன் அதனால் நான் உன்னை மாதிரியே பேசினேன் என்று சொன்னேன். இப்படி பல சம்பவங்கள் எங்களுக்குள் நடந்திருக்கிறது என்று அந்த பேட்டியில் ராதாரவி பேசியிருக்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications