என் பையனோட இழப்பிலிருந்து இன்னும் நான் மீளல.. ஆனால்! 23 வயதில் மறைந்த மகன் பற்றி ராஜ்கபூர் உருக்கம்
சென்னை: நடிகர் ராஜ்கபூர் பல திரைப்படங்களை, இயக்கியும் நடித்தும் இருக்கிறார். ஆனால் அவருடைய மகன் 23 வயதில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். அது பற்றி சமீபத்தில் உருக்கமாக பேசியிருக்கிறார்.
வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் பல திரைப்படங்களில் நடிகர் ராஜ் கபூரை பார்த்து இருப்போம். ஆனால் அவர் பல ஹிட் திரைப்படங்களை இயக்கியவர். அவருக்குள் பல சோகங்கள் ஒளிந்து இருக்கிறது என்பதை உருக்கமாக ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

நடிகர் பிரபு, கனகா நடிப்பில் வெளியான தாலாட்டு கேக்குதம்மா என்ற படத்தின் மூலமாகத்தான் ராஜ்கபூர் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதற்கு பிறகு சின்ன ஜமீன், வள்ளல் உட்பட படங்களை இயக்கியிருந்தார். அதோடு நடிகர் அஜித்தை வைத்து அவள் வருவாளா மற்றும் ஆனந்த பூங்காற்றே ஆகிய படத்தையும் இயக்கியுள்ளார்.
அதை தொடர்ந்து உத்தமராசா, சுதந்திரம், என்ன விலை அழகே, குஸ்தி, சமஸ்தானம் உட்பட பல படங்களை இயக்கியிருக்கிறார். ராஜ்கபூர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் வம்பு சண்டை இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. ஆனாலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நேத்ரன் பற்றி சொல்வதெல்லாம் பொய்.. நல்ல மனுஷன்.. அந்த அவார்டு வாங்கும் ஆசை நிறைவேறல! அரவிந்த் உருக்கம்
ஆனந்த பூங்காற்றே, தாஜ்மஹால், ஏழையின் சிரிப்பில், மாயி, வாஞ்சிநாதன், விசில், ஐயா, ஆறு, அரண்மனை 2, மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக என்று பல ஹிட் படங்களில் இவர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அதுபோல சீரியலிலும் நடித்திருக்கிறார். அதிலும் நந்தினி, ராசாத்தி, ரன், அமுதாவும் அன்னலட்சுமியும் போன்ற சீரியல்களில் இவர் நடித்திருந்தார்.
இவருக்கு சைலஜா கபூர் என்ற மனைவியும் ஷாருக் கபூர் என்ற ஒரு மகனும், ஷமிமா கபூர், ஷானியா கபூர் என்று இரண்டு மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் தான் கடந்த 2020 ஆம் ஆண்டு ராஜ்கபூரின் மகன் ஷாருக் கபூர் காலமானார். அவருக்கு ஏற்கனவே மூச்சுத் திணறல் பிரச்சனை இருந்திருக்கிறது.

அப்போது அவர் தன்னுடைய தாயாருடன் புனித பயணத்திற்கு மெக்கா சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு கடுமையாக சளி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது. அதனால் அங்கு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். அவருடைய உடல் மெக்காவிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் ஷாருக்கை சினிமாவில் அறிமுகம் செய்வதற்காக ராஜ்கபூர் வேலைகள் செய்து கொண்டிருந்தார்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த பெரும் இழப்பு ராஜ்கபூர் குடும்பத்திற்கு வந்திருக்கிறது. இது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் ராஜ் கபூர் பேசுகையில், என் பையன் எங்க கூட தான் இருக்கான். என் பையனோட இழப்பிலிருந்து இன்னும் நான் மீளவில்லை. ஆனால் என் பையன் எங்கேயோ ஊருக்கு போயிருக்கான் என்று நான் தான் இதுவரைக்கும் நினைச்சுட்டு இருக்கேன்.

நம்ம கூட இருக்காரு, நம்ம கூட போறாரு... வர்றாருன்னு தான் என் பிள்ளையை இன்னைக்கு வரைக்கும் நினைச்சுட்டு இருக்கோம். என்னால ஒரு ரெண்டு வருஷம் வேலை பார்க்க முடியல.. கொஞ்சம் குழப்பமாக இருந்தது. ஆனால் அடுத்து என்னங்கறது தானே பார்க்கணும் அவன் நம்ம கூட தான் இருக்கான்னு நினைச்சிட்டு இன்னைக்கு வர நான் இருக்கேன் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications