நேத்ரன் பற்றி சொல்வதெல்லாம் பொய்.. நல்ல மனுஷன்.. அந்த அவார்டு வாங்கும் ஆசை நிறைவேறல! அரவிந்த் உருக்கம்
சென்னை: மறைந்த நடிகர் நேத்ரன் பற்றி சீரியல் நடிகர் அரவிந்த் பல தகவல்கள் உருக்கமாக பேசியிருக்கிறார். நேத்ரனின் கடைசி சில மாதங்கள் எவ்வளவு கொடுமையாக இருந்தது என்று அரவிந்த் கண்ணீரோடு பேசி இருக்கிறார்.
சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைக்கும் விதமாக கடந்த செவ்வாய்க்கிழமை சீரியல் நடிகர் நேத்ரனின் இறப்பு செய்தி வந்தது. நேத்ரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அவருடைய மகள் எமோஷனலாக ஒரு போஸ்ட் போட்டு இருந்தார்.

அப்போது தன்னுடைய அப்பாவிற்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று ரிசல்ட் வந்திருக்கிறது, அப்பாவுக்கு ஆபரேஷன் நடைபெற்று விட்டது. ஆனாலும் ஐசியுவில் இருக்கிறார். அப்பாவுக்காக எல்லோரும் வேண்டிக் கொள்ளுங்கள் என்று அதில் பேசி இருந்தார்.
நேத்ரன் சீரியல் நடிகை தீபாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு அபிநயா, அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் அபிநயா நேத்ரன் உடன் பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அதுபோல பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய தந்தையோடு சேர்ந்து டான்ஸ் ஆடி இருக்கிறார்.
இந்த நிலையில் நேத்ரன் இறப்பு குறித்து அவருடைய நண்பர் சீரியல் நடிகர் அரவிந்த் சில தகவல்களை பேசி இருக்கிறார். அதில் நேத்ரனுக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டது என்று செய்தி தெரிந்ததும் நாங்கள் எல்லோருமே அதிர்ந்து போனோம். நேத்ரன் ஒர்க் அவுட் செய்து உடம்பை நன்றாக கவனித்து வந்தார்.
ஆனால் அவருக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்ட பிறகு கடந்த ஆறு மாதங்களாக அவரால் சரியாக பேசக்கூட முடியவில்லை. நேத்ரனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அவர் புகைபிடித்து, மது அருந்தியும் நான் பார்த்தது கிடையாது. அவரோடு எனக்கு 10 வருடங்களாக பழக்கம் இருக்கிறது. ஆனால் அவருக்கு இந்த நிலைமை வந்துவிட்டதே என்று எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
நேத்ரன் எப்போதும் ஜாலியாக இருக்கும் நபர். அதுபோல தன்னுடைய குடும்பத்தின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருப்பார். ஷூட்டிங் முடிந்ததும் நேராக வீட்டிற்கு சென்றுவிடுவார். ஜிம்மிற்கு மட்டும் தான் அதிகமாக வெளியே வருவார். அதோடு தன்னுடைய குழந்தைகள், மனைவி மீது அதிகமான காதல் வைத்திருந்தார்.
எப்போதும் தன்னுடைய குடும்பத்தை பற்றி தான் பேசிக் கொண்டிருப்பார். அவருடைய மறைவிற்கு பிறகு அவருடைய குடும்பத்தினர் உடைந்து போய்விட்டார்கள். அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் அவருடைய வீட்டிற்கு சென்றேன். அவருடைய கண்கள் மூடாமல் தான் இருந்தது. அவரை பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது.
அந்த அளவிற்கு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு எலும்பும் தோலுமாக மாறி இருந்தார். அதனாலேயே யாரும் தன்னை பார்க்க வர வேண்டாம் என்று சொல்லி இருந்தார். அவருடைய மனைவியிடம் பேசும் போது நேத்ரன் ஆஸ்கார் அவார்டு வாங்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டு கொண்டிருந்தார் அது நிறைவேறலை என்று கண்கலங்க பேசி இருந்தார்.

நேத்ரன் ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்பட்டிருந்தாலும் இப்போதுதான் ஒரு நல்ல நிலைமைக்கு வந்து கொண்டிருந்தார். அதற்குள் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது. அவருடைய மனைவியும் ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. நேத்ரனால் கடைசி நேரத்தில் சரியாக பேசக்கூட முடியல.
அவருடைய உடலில் மட்டுமல்ல குரலிலும் அதிக மாற்றம் இருந்தது. நேத்ரன் தனக்கு வந்த வயிறு வலியை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றுதான் தெரிகிறது. அவர் ஆரம்பத்திலேயே அதற்கு சரியான ட்ரீட்மென்ட் பார்த்திருக்க வேண்டும் என்று வருத்தமாக இருக்கு என்று கண் கலங்க அரவிந்த் பேசியிருக்கிறார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications