சிவாஜியில் சொன்ன கதையே வேறு.. சாலமன் பாப்பையா இப்போ நடிக்காததற்கு காரணம்? ராஜா சொன்ன விளக்கம்
நடிகர் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படத்திற்குப் பிறகு சாலமன் பாப்பையா எந்த திரைப்படத்திலும் நடிக்காத காரணம் பற்றி நடிகர் ராஜா கூறியிருக்கிறார்.
சென்னை: பட்டிமன்ற பேச்சாளராக இருக்கும் சாலமன் பாப்பையா சிவாஜி திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்காத காரணம் பற்றி பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பல தகவல்களை கூறியிருக்கிறார்.
சிவாஜி திரைப்படத்தில் சாலமன் பாப்பையாவிற்கு ஆரம்பத்தில் சொன்ன கதை வேறு ஆனால் அந்த திரைப்படத்தில் எடுக்கப்பட்ட கதை வேறு விதமாக இருந்ததால் அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார் என்று கூறியிருக்கிறார்.
சாலமன் பாப்பையா பற்றிய சர்ச்சைக்கு ராஜா பதில் கொடுத்திருக்கிறார்

சிவாஜி திரைப்படம்
நடிகர் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படம் சங்கர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்து. இந்தப் படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரேயா ,சுமன் விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படத்தில் ஆக்சன் மட்டும் அல்லாமல் காமெடியும் ரசிகர்களை ரசிக்க வைத்தது. அந்த வகையில் அங்கவை சங்கவை காமெடி பலருடைய கவனத்தையும் ஈர்த்தது. அதில் அங்கவை, சங்கவையின் அப்பாவாக இந்த திரைப்படத்தில் பட்டிமன்ற பேச்சாளராக இருக்கும் சாலமன் பாப்பையா நடித்திருப்பார்.

உருவ கேலி
இந்த திரைப்படம் வெளியான பொழுது இந்த காமெடி அதிகமாக பலரால் பாராட்டப்பட்டு ரசிக்கப்பட்டு இருந்தாலும், தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. நிஜத்தில் வெள்ளையாக இருக்கும் பெண்களை காமெடி என்கிற பெயரில் கருப்பாக மாற்றி அவர்களை வைத்து காமெடி செய்திருப்பது உருவ கேலி செய்வது போன்று தான் இருக்கிறது என்றும் இந்த திரைப்படத்தில் இந்த காட்சியை எப்படி சங்கர் வைத்தார் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் சாலமன் பாப்பையா போன்ற நபர் எப்படி இப்படி உருவ கேலி காமெடியில் நடித்தார் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

சொன்ன கதை
இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தில் ஸ்ரேயாவின் அப்பாவாக நடித்த பட்டிமன்ற பேச்சாளர் ராஜா ஒரு பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் சிவாஜி படத்தில் சாலமன் பாப்பையாவை நடிக்க அழைத்தபோது அவருக்கு கூறிய கதை வேறு. ஆனால் அங்கு எடுக்கப்பட்ட கதை வேறு. அவரிடம் சொல்லும் போது கருப்பு நிறத்தில் இரண்டு பிள்ளைகள் இருக்கும் அவர்களுக்கு மாப்பிள்ளை கிடைக்காமல் அவதி படும் தகப்பன், அதேபோல கருப்பாக இருக்கும் கதாநாயகன் அவருக்கு சிகப்பாக இருக்கும் கதாநாயகி. இப்படி இருக்கையில் படத்தின் முடிவு கருப்பாக இருக்கும் கதாநாயகனுக்கு சிவப்பாக இருக்கும் மனைவி கிடைப்பார். அதுபோல கருப்பாக இருக்கும் அந்த பெண்களுக்கும் சிவப்பாக இருக்கும் மணமகன்கள் கிடைப்பார்கள். இதன் மூலம் நிறம் என்பது மோசமானது அல்ல என்ற கருத்துள்ள கதை என்று சொன்னதால்தான் அந்த திரைப்படத்தில் சாலமன் பாப்பையா நடிக்க ஒத்துக் கொண்டார்.

எழுந்த சர்ச்சை
ஆனால் படத்தில் 3 மணி நேரம் இவர்களுக்கான அந்த கதையை விட்டுவிட்டு படம் வேறு வழியில் சென்று விட்டது. அங்கவை, சங்கவை என்ற பெயர்களை அவமானப்படுத்தி விட்டார்கள் என்ற சர்ச்சை எழுந்தது. ஆனால் எந்த இலக்கியத்திலும் அங்கவை சங்கவை பெயர் பாரி மகளுக்கு இருந்ததாக இலக்கிய சான்று இல்லை. பின்னால் வந்த கதைகளில்தான் இருக்கிறது. அதேபோல படத்தில் சாலமன் பாப்பையாவின் பெயர் தொண்டைமானை தவிர பாரி கிடையாது. பொதுவாக பல நபர்களின் பெயர் ராஜா என இருக்கிறது அதற்காக ராஜா என ஏன் பெயர் வைத்தீர்கள் என்று கேட்க முடியுமா? அதுபோலத்தான் இதுவும் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

நடிக்க வராத காரணம்
அது மட்டும் அல்லாமல் இந்த படம் வெளியே வந்ததும் மிகவும் கேவலமாக திட்டினார்கள். சாலமன் பாப்பையா தொடர்ந்து 13 வருடங்கள் திருக்குறள், சங்க இலக்கியம் என பல மேடைகளில் பேசியிருக்கிறார். அதற்கெல்லாம் பாராட்ட மனமில்லாத நம்ம மக்கள் டிவியில் அங்கவை, சங்கவை என்று வந்தவுடன் திட்டுகிறார்கள். அதைத் தொடங்கிய பிறகு முதலில் சொன்னது போன்று தான் சூட்டிங் இருந்தது. ஆனால் தான் அவர் நடித்தார் ஆனால் கதை பிறகு மாறிவிட்டது. இதில் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று தங்களுடைய ஆதங்கத்தை ராஜா கொட்டி இருக்கிறார். இந்த அனுபவத்தினால் தான் அதற்குப் பிறகு அந்த மாதிரியான கதை வந்தால் அவர் ஏற்றுக் கொள்வதில்லை. அதுபோல சாலமன் பாப்பையா வீட்டிலும் இந்த சம்பவத்திற்கு பிறகு கடுமையாக எதிர்த்தார்கள். எனவேதான் அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்று நடிகர் ராஜா கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications