ராஜேஷூக்கு தெரியாதா? அபாண்டமா பேசாதீங்க.. வரிஞ்சு கட்டிட்டு வந்த வடிவுக்கரசி.. நீங்க பார்த்தீங்களா?
சென்னை: ராஜேஷ் சித்த மருந்துகளை சாப்பிட்டுதான் இறந்துபோனார், ராஜேஷ் அலோபதி மருந்தை சாப்பிட்டதால்தான் இறந்துபோனார், ராஜேஷ் ஜோதிடத்தையும், ஜோதிடர்களையும் விளம்பரம் செய்வதற்காக உயர்த்தி பிடித்தார், ராஜேஷ் மரணத்தில் மரணம் இருக்கிறது? துடிதுடித்து இறந்துபோனார்" இப்படியான செய்திகள் இணையத்தில் வலம் வரும்நிலையில், இந்த வதந்திகளை மறுத்துள்ளார் நடிகை வடிவுக்கரசி.
Nakkheeran tv சேனலுக்கு ஸ்பெஷல் பேட்டி தந்துள்ள வடிவுக்கரசி, "ராஜேஷ் துடிதுடித்து இறந்தார் என்கிறார்கள்.. அப்படியெல்லாம் எதுவுமே இல்லை.. அவருக்கு கடைசியாக என்ன நடந்தது என்று நான்கூட கேட்டேன்.. உட்கார்ந்து காபி சாப்பிட்டு, அதற்கப்புறம்தான் மருத்துவமனை கிளம்பியிருக்காரு.. இங்கே எப்படி துடிதுடித்து இறந்தார்?ன்னு சொல்றாங்க..

ராஜேஷ்க்கு ஏதோ நோய் இருந்ததாக சிலர் சொல்றாங்க.. அதுவும் பொய்..அவர் மிகவும் ஒழுக்கமான மனிதர்.. ஒருநோயும் கிடையாது.. வெளிப்படையாக அனைத்தையும் பேசுபவர்..
தன்னுடைய தலைமுறையை எப்படி கருகருவென வைத்து கொள்வார், சருமத்தை எப்படி பாதுகாத்து கொள்வார்? எப்படி 75 வயதிலும் இளமையாக இருப்பேன் என்பதையெல்லாம் வெளிப்படையாக எல்லா யூடியூப்களிலும் பேசியிருக்கிறாரே? அப்படிப்பட்டவருக்கு என்ன நோய் இருந்திருக்க போகிறது?
குடும்பத்தை பாதிக்காதா
ராஜேஷூக்கு 2 பிள்ளைகள், மருமகன், பேரக்குழந்தைகள் இருக்காங்க.. அவர்களுக்கெல்லாம் உங்களது பேச்சுக்கள் எவ்வளவு வலியை தரும் என்று நினைச்சு பார்த்தீங்களா? மீடியாவுல இருக்கிறோம் என்பதற்காகவே எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது..
எத்தனையோ உலக விஷயங்களை ராஜேஷ் பேசியிருக்கிறார்.. ஒரு பாடல் என்றாலும், அதை பற்றின விவரங்களை சொல்லியிருப்பார்.. இதையெல்லாம் நாம் இனியாவது தெரிந்து கொள்வோம்.. அந்த வீடியோக்களை பார்ப்போம்.. மற்றபடி தவறாக பேசுவதை விட்டுவிடுவோம்..
ராஜேஷ் நல்லபடியாக வாழ்ந்து இறந்திருக்கிறார்.. சித்த மருந்து சாப்பிட்டதாலதான் இறந்துட்டாருன்னு சிலர் சொல்றாங்க.. அவர் சித்த மருந்து சாப்பிட்டதை நீங்க அவர்கூட இருந்து பார்த்தீங்களா? அப்படி சாப்பிட்டிருந்தால் நம்ம கிட்டயே சொல்லியிருப்பாரே?
சித்த மருத்துவம்
இத்தனை சித்த புத்தகத்தை பற்றி படிக்கிறீங்களே ஏன் சார்? என்று நானே அவரை பலமுறை கேட்டிருக்கிறேன்.. அதற்கு அவர், "இவர்களை எல்லாம் நான் பேட்டி எடுக்கணும்.. சித்த மருத்துவ புத்தகத்தில் உள்ளது உண்மைதானா? என்பது தெரிய வேண்டும்..
தொழிற்சாலையில் தயாராகும் மருந்து பற்றியும் இந்த புத்தகத்தில் சொல்லி உள்ளது" என்று சொல்லிவிட்டு, அந்த மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைக்கே நேரடியாகவே கிளம்பி செல்வார் ராஜேஷ்..
ஒருவரை பேட்டி எடுப்பதற்கு யாராவது இந்த அளவுக்கு சிரத்தை எடுத்துக் கொள்வார்களா? ஒருவரை பேட்டி எடுப்பதானால் கேள்வி கேட்பார்கள், பதில் சொல்வார்கள்.. மற்றபடி இப்படி ஆராய்ச்சி எல்லாம் செய்ய மாட்டார்கள்..
ஜோதிடம் உண்மையா?
அதேதான் ஜோதிடத்திலும்.. ஒரு ஜோதிடர் உண்மையா என்பதை தெரிந்துகொள்ள, தன்னுடையது என்று சொல்லாமலேயே தன்னுடைய ஜாதகத்தையே தந்து பார்க்க சொல்வார்.. அதில் ஓரளவு நம்பிக்கை வந்தபிறகு, அவரை பேட்டி எடுப்பார்.. அதுவும் மக்களிடம் அவர்களை அறிமுகப்படுத்தவே செய்தார்..
ரஜினி சார் ஒருமுறை சொன்னார், "ராஜேஷ் ஏதாவது ஒன்றை புதிதாக கண்டுபிடித்துவிட்டால், அதன்மூலம் நிறைய பேர் பலனடைய வேண்டும் என்று நினைப்பார்" என்றார்.. அதுதான் ராஜேஷ்..
சுயபரிசோதனை
தண்ணீர் குடிக்கும்போதுகூட, உடற் கழிவுகளை அகற்றக்கூடிய தண்ணீரை குடிக்க சொல்வார்.. இதெல்லாம் மார்க்கெட்டிங்குக்காக அவர் செய்யவில்லை.. தானே சுயபரிசோதனை செய்து, அதில் நிறைவு தந்தால், அதனுடைய பலன் மக்களுக்கும் போய் சேரட்டும்
என்றுதான் ஒவ்வொன்றையும் சொன்னார்..
அதனால் அந்த மருந்து சாப்பிட்டார், இந்த மருத்துவத்தை பின்தொடர்ந்தார் என்றெல்லாம் சொல்லாதீர்கள்.. அப்படி சாப்பிட்டிருந்தால், அவர் வாயில் எதுவுமே நிற்காது.. தயவுசெய்து ராஜேஷ் பற்றி தவறாக பேசவேண்டாம்" என்று கேட்டுக் கொண்டார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications