ராஜேஷ் எப்படி வாழ்ந்தாருனு சாட்சியே இதுதான்! வெளிப்படையாக பேசிய ரஜினிகாந்த்! கண் கலங்கிய சிவகுமார்
சென்னை: நடிகர் ராஜேஷ் நேற்று முன்தினம் (மே 29)ல் உடல்நல குறைபாட்டால் காலமானார். அவருடைய உடலுக்கு திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதுபோல ராஜேஷின் நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்த் ராஜேஷ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்து இருக்கிறார். அதோடு ராஜேஷ் குறித்து பல விஷயங்களை வெளிப்படையாக ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். அதுபோல ராஜேஷ் உடன் பல திரைப்படங்களில் நடித்த நடிகர் சிவகுமாரும் அஞ்சலி செலுத்தி கண்கலங்கி அழுது இருக்கிறார்.
திரைத்துறையில் 45 வருடங்களில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான ராஜேஷ் இறப்பு செய்தி தான் இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பலரையும் ஃபீல் பண்ண வைத்துக் கொண்டிருக்கிறது. 75 வயதில் இவர் மரணம் அடைந்தாலும் இவருடைய மகனின் திருமணம் விரைவில் நடக்க இருந்தது. அடுத்த வாரம் ராஜேஷ் மகனின் எங்கேஜ்மென்ட் நடக்க இருந்தது அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இவருடைய திடீர் இழப்பு அவருடைய குடும்பத்தை மட்டுமல்லாமல் சினிமா துறையினரையும் வருத்தம் அடைய வைத்திருக்கிறது.

நடிகர் ராஜேஷ் மறைவு
சினிமா துறையில் பலருடைய நன்மதிப்பை பெற்ற ராஜேஷின் மறைவிற்கு இரண்டு நாட்களாக அவருடைய நண்பர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் ராஜேஷ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி இருந்தார். ராஜேஷின் இறுதி சடங்குக்கான ஆயத்த பணிகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் ரஜினிகாந்த் ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு செய்தியாளர்களிடம் பேசி இருந்தார்.
நெருங்கிய நண்பர்
அப்போது, "எனக்கு மட்டுமல்ல ராஜேஷ் சினிமா துறையில் நிறைய பேருக்கு நெருங்கிய நண்பர். அவர் ஒரு பெரிய ஹீரோவோ, குணசித்திர நடிகரோ, டைரக்டரோ, அரசியல்வாதியோ கிடையாது. இருந்தாலும் முதலமைச்சரிலிருந்து இளையராஜா தொடர்ந்து எல்லா பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தியிருக்கிறாங்க. "இது அவர் எப்படி வாழ்ந்தார் என்பதற்கு ஒரு சான்று". "ஆடாதொடை இலை" போன்று ராஜேஷ் வாழ்ந்துட்டு போயிருக்கிறார். அந்த செடியில் எல்லா பாகமும் மருத்துவ குணம் உள்ளது. அதேபோல ராஜேஷ் எல்லா விதத்திலும் பலருக்கும் நன்மையை கொடுத்து இருக்கிறார்.
வருத்தம் தெரிவித்த ரஜினிகாந்த்
ராஜேஷுக்கு தெரியாத விஷயங்களே கிடையாது. உலக சினிமா, அரசியல், விஞ்ஞானம், ஆன்மீகம் என எல்லாமே அவருக்கு தெரியும். அவர் அவ்வளவு தேடிக் கொண்டே இருப்பார். அவருக்கு தெரிந்ததை எல்லாருக்கும் தெரிய வேண்டும் என பாடுபடுவார். அந்த அளவுக்கு நல்ல மனிதராக வாழ்ந்தார். என்னை அடிக்கடி வந்து சந்திப்பார். ஆரோக்கியமாக வாழ்வதற்கு என்னென்ன சாப்பிடணும் என்று எனக்கு சொல்லிக் கொண்டே இருப்பார்.
ரஜினியின் இரங்கல் பதிவு
அவர் இப்போது திடீர்னு இல்லைன்னு சொல்றது பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. அவருடைய இழப்பு பேரிழப்பு. அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்" என்று ரஜினிகாந்த் பேசி இருந்தார். அதுபோல ராஜேஷின் இறப்பு செய்தியை கேட்டதும் தன்னுடைய எக்ஸ் தளத்திலும் ராஜேஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ரஜினிகாந்த் பதிவிட்டு இருந்தார்.
அஞ்சலி செலுத்திய சிவகுமார்
சினிமா பிரபலங்கள் பலரும் ராஜேஷ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல நடிகர் சிவகுமாரும் ராஜேஷ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி இருந்தார். அப்போது ராஜேஷ் பற்றி எதுவும் பேச முடியாமல் சிவகுமார் கண்கலங்கி அழுதிருந்தார். ராஜேஷின் மகனுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் சிவக்குமார் அழுத வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications