வேட்டையன்- கங்குவா ரிலீஸ்! ரஜினியை கண்டு அன்றே கலங்கிய சிவக்குமார்! சூர்யாவாவது டஃப் கொடுப்பாரா?
சென்னை: வேட்டையன்- கங்குவா ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவதை போல் 1970 களில் ரஜினிகாந்தும் சூர்யாவின் தந்தை சிவக்குமாரும் நடித்த படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்ற சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: வேட்டையன்-கங்குவா க்ளாஷ்.... வேட்டையனும் கங்குவாவும் ஒரே நேரத்தில் ரிலீஸாகிறது. 1977ல் கவிக்குயில்னு ஒரு படம். அதில் நாயகன் சிவகுமார். அதில் முருகன் என்கிற குலத்தில் தாழ்ந்ததாக சொல்லப்படும் முருகன் என்கிற கதாபாத்திரம். முருகனாக புதிய வரவு ரஜினிகாந்த். இருவரும் அந்தப்படத்தில் நடித்தனர்.

பிறகு புவனா ஒரு கேள்விக்குறி. இதில் சிவக்குமாருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம். இந்த கவிக்குயில், புவனா ஒரு கேள்விக்குறி படங்களுக்கு பணியாற்றிய பஞ்சு அருணாச்சலம் 'ப்ரியா' படத்துக்கு சிவக்குமார்-ரஜினி இரட்டை ஹீரோக்களை புக் செய்தார். இரண்டு மொழிகளில் தமிழில் சிவா-ரஜினி, கன்னடத்தில் அம்பரீஷ்-ரஜினி. பாடல்கள் பதிவாகி ஷூட்டிங் தொடங்கும் நேரத்தில் சிவக்குமார் படத்திலிருந்து விலகிக் கொள்கிறார்.
இப்போது சிவக்குமார் விலகியதால் ரஜினி என்கிற ஒற்றை மனிதரின் மேல் முழுப்படத்தின் பாரமும் விழுகிறது. இதனால் பஞ்சு கதையை மாற்றுகிறார். சிவக்குமாரின் பாடல்களுக்கு ரஜினி நடிப்பதற்காக கதையில் துப்பறியும் வக்கீலான கணேஷ், ரஜினி நடிகனாக மாறுவதாக கதையை கலைத்துப் போடுகிறார்.
எப்படியோ ஒட்டி வெட்டி படம் வந்தாலும் ரஜினி என்கிற ஒற்றை மனிதராலும், இளையராஜாவின் அற்புதப் பாடல்களாலும் படம் பெரும் வெற்றி பெறுகிறது. எனக்குத் தெரிந்து 'டார்லிங்' என்கிற வார்த்தை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அறிந்தது இப்படத்தின் பாடலால் எனலாம்.
சிவக்குமார் ஸ்டெடியான ஹீரோவாக தன் பாதையில் சென்று கொண்டிருக்க அதிரடியாக ரஜினி அவரை முந்திச் சென்று கொண்டிருக்கிறார். வெள்ளிக்கிழமை விரதம், ஆட்டுக்கார அலமேலு என சிவக்குமாரின் வெற்றிப் படங்களுக்குப் பிறகு தேவர், ரஜினியை தனது படத்து நாயகனாக்குகிறார். அது 'தாய் மீது சத்தியம்'. ரஜினி - கமல் நடித்த 'இளமை ஊஞ்சலாடுகிறது' படத்தின் ரிலீஸான அதே நாளில் சிவக்குமாரின் 'சிட்டுக் குருவி' ரிலீசாகிறது.
இரண்டுமே ராஜாவின் பாடல்களால் பட்டி தொட்டியென புகழ் பெற்றாலும் இளமை ஊஞ்சலாடுகிறது முந்துகிறது. ப்ரியா என்கிற ஆக்ஷன் படங்கள் வெளிநாடுகளில் எடுத்து பெரும் வெற்றி பெற்றதால் அதே பாணியில் சிவக்குமாரை வைத்து 'ராமன் பரசுராமன்' படத்தை எடுக்கின்றனர்.

அந்தப் படம் ரிலீசான அதே நாள் ரஜினியின் காளி படம் வெளியாகிறது. இரண்டுமே சுமார் வெற்றி தான்.
சிவக்குமாரின் ஆனந்தராகம் படமும், ரஜினியின் போக்கிரி ராஜா படமும் மோதுகின்றன 1982ல். ஆனந்த ராகம் சுமாரான வெற்றி. தேவரின் தாய் வீடு படத்தோடு சாட்டை இல்லாத பம்பரம் என்கிற சிவாவின் படம் மோதுகிறது. நான் மகான் அல்ல படத்தோடு சிவக்குமாரின் குவாகுவா வாத்துக்கள் படம் ஒரே நாளில் ரிலீசாகின்றன.
படிக்காதவன் சிவாஜி - ரஜினி நடிக்க, குருநாதர் கே.பியின் சிந்து பைரவி சிவா நடிக்க ஒரே நாளில் வெளியாகி இரண்டுமே பெருவெற்றி பெறுகின்றன. அதேப் போல் கலைஞரின் பாடாத தேனீக்கள் படமும், பாரதிராஜாவின் கொடி பறக்குது படமும் ஒரே நாளில் ரிலீசான வரலாறும் உண்டு. பொதுவாக பார்த்தால் நிறைய ரஜினி - சிவக்குமார் படங்கள் பத்து நாள் இடைவெளியில் நிறைய படங்கள் ரிலீசாகி இருக்கின்றன.
அக்னி சாட்சி என்கிற படத்தில் ரஜினி கௌரவ வேடத்தில் ரஜினிகாந்தாகவே நடிக்கிறார். குருநாதர் கே.பியின் மார்க்கெட்டிங் உத்தி. காலம் எப்படியெல்லாம் மாற்றிப் போடுகிறது. இன்று இதே சிவக்குமாரின் மகன் சூர்யாவின் படத்தோடு ரஜினியின் படமும் ரிலீசாகிறது என்றெல்லாம் சிவக்குமார் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications