அந்த நேரத்தில் நடந்த உரையாடலை டயலாக்கா மாற்றிய நடிகர் ரஜினிகாந்த்.. இது 90ஸ்களின் பேவரைட் ஆச்சே
சென்னை: ரஜினிகாந்த் படங்கள் அன்று முதல் இன்று வரை ஹிட் ஆவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவரது படங்களில் வரும் பஞ்ச் டயலாக்குகள் முக்கிய காரணமாகும்.
பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை வெகுஜன மக்களிடம் அவரது படங்களை எளிதில் ரீச் செய்ததில் அவரது படங்களின் பஞ்ச் டயலாக்குகளுக்கு பெரும் பங்கு உண்டு. அப்படி ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து கேங்ஸ்டர் வகையிலான திரைப்படங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் பாட்ஷா.

அந்தப் படத்தில் ரஜினிகாந்த் பல டயலாக்குகள் பேசி இருந்தாலும் அவர் பேசிய "நான் ஒரு தடவை சொன்னா.. நூறு தடவை சொன்ன மாதிரி"..என்கின்ற வசனம் செம மாஸ் ஆக அந்த நேரத்தில் பேசப்பட்டது. இப்பொழுதும் அன்றாடம் வாழ்க்கையில் பலரால் விளையாட்டாக பேசப்பட்டு வரும் இந்த வசனம் உருவான விதம் குறித்த சுவாரசியமான தகவல்கள் இணையத்தில் சூடாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
"நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" இந்த வசனம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வசனம் இல்லை ஒருவரை திட்டியதால் உருவான வசனம் என்ற தகவல் பலருக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பாலகுமாரன் வசனத்தில் உருவான திரைப்படம் பாட்ஷா. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த சமயத்தில் சுரேஷ் கிருஷ்ணாவின் அசோசியேட் இயக்குனராக இருந்த திருப்பதி சாமி செட்டிங்ஸ் அமைப்பாளரிடம் சென்று மறுநாள் ஷூட்டிங்குக்கானா செட் ரெடி ஆகிவிட்டதா என்று பார்க்க சென்றுள்ளார்.
ஆனால் அந்த நேரத்தில் அந்த செட் வேலை முடியாமல் இருந்துள்ளது. இதை பார்த்த அசோசியேட் இயக்குனர் திருப்பதி சாமி செட்டிங்ஸ் அமைப்பாளரிடம் ஏன் இன்னும் ரெடியாகவில்லை..? என கேள்வி எழுப்பியுள்ளார்.பெரிய ஸ்டார் படம் என்பதால் நாம் ஏதோ தவறு செய்து விட்டோமோ என்று சற்று யோசித்த செட்டிங்ஸ் அமைப்பாளர் திருப்பதி சாமி இடம் சார் நீங்கள் ஒரு தடவை தான் கூறினீர்கள் மறுபடியும் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை என்பதால் மெதுவாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லியுள்ளார்.
இதனால் சற்று கடுப்பான அசோசியேட் இயக்குனர் திருப்பதி சாமி என்ன சார் நீங்க இவ்வளவு மெதுவாக வேலை பார்க்கிறது நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி நினைச்சு உடனே வேலை பார்த்து இருக்க வேண்டாமா என கேட்டுள்ளார். சரிங்க சார் உடனே ரெடி பண்ணுகிறோம் என்று செட்டிங் அமைப்பாளர் புயல் வேகத்தில் வேலை பார்த்து செட்டிங் வேலையை முடித்துக் கொடுத்திருக்கிறார்.
இந்த உரையாடல்கள் சாதாரணமாக நிகழ்ந்திருந்தாலும் இந்த உரையாடல்கள் நடந்த இடத்தின் பக்கத்து அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார். அசோசியேட் இயக்குனர் திருப்பதி சாமி நிறைய பேசியிருந்தாலும் அவர் பேசிய 'நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி நினைச்சு வேல பாருங்க' என்று கூறிய வசனத்தில் ஏதோ ஈர்ப்பு இருப்பதை உணர்ந்த ரஜினிகாந்த் உடனே அறை கதவைத் திறந்து கொஞ்சம் தொலைவில் சென்று கொண்டிருந்த திருப்பதி சாமி அழைத்து செட் அமைப்பாளருடன் நடந்த உரையாடல்கள் குறித்து கேட்டுள்ளார்.
செட் அமைப்பாளரிடம் தான் பேசிய விதம் ரஜினிகாந்த்தை தொந்தரவு செய்து விட்டதோ என பயந்த திருப்பதி சாமி,வேறு ஒன்றும் இல்லை சார் நாளைய படப்பிடிப்பிற்கான செட்டிங்ஸ் இன்னும் ரெடியாகவில்லை, அதைத்தான் சீக்கிரம் ரெடி பண்ண சொல்லி கொண்டிருந்தேன் என பதட்டத்துடன் கூறியுள்ளார். திருப்பதி சார் நீங்கள் செட் அமைப்பாளரிடம் பேசிய வசனங்களை அப்படியே கூறுங்கள் என தனக்கே உரிய துரு துரு ஆர்வத்துடன் கேட்டுள்ளார் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் ஆர்வத்தை கொஞ்சம் தாமதமாக புரிந்து கொண்ட திருப்பதி சாமி தான் திட்டிய வார்த்தைகளை மறுபடியும் கூறியுள்ளார்.
இந்த வசனத்தை பற்றி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் பாட்ஷா படத்திற்கு வசனம் எழுதிய பாலகுமாரனிடம் பகிர்ந்த ரஜினிகாந்த் இதை நம்முடைய படத்தில் வைத்தால் நன்றாக இருக்கும் என தன் கருத்தை தெரிவித்துள்ளார். இதை உடனே ஒப்புக்கொண்ட இருவரும் படத்தில் அந்த வசனத்தை வைக்க சம்மதித்துள்ளனர்.கொஞ்ச நேரத்தில் ஷாட் ரெடியானதும் ஆட்டோ டிரைவர் யூனிஃபார்ம் உடன் வந்த ரஜினிகாந்த் "நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" என்ற டயலாக்கை கேமரா முன்பு ஆக்ரோஷமாகவும் ஸ்டைலாகவும் பேசியுள்ளார்.

ரஜினிகாந்த் அந்த டயலாக்கை பேசிய விதத்தை பார்த்து ஒரு நிமிடம் ஷாக் ஆனா படப்பிடிப்புக் குழு, ஷாட் முடிந்ததும் கைதட்டி ஆர்ப்பரித்துள்ளனர். அன்றைய நாள் படப்பிடிப்பு முடிந்து கிளம்பும் பொழுது படப்பிடிப்புக் குழுவினர் அனைவரையும் அழைத்து ரஜினிகாந்த் இன்றைக்கு இந்த சீன் நன்றாக வந்ததற்கும்,டயலாக் நன்றாக இருக்கவும் காரணம் திருப்பதி சாமி தான் என்று கூறி அனைவர் முன்பும் அவரை பாராட்டி உள்ளார்.
அது மட்டுமின்றி அந்த நேரத்தில் தான் எப்போது வைத்திருக்கும் பையில் கையை விட்டு கையில் வந்த கொஞ்சம் நோட்டு கட்டுகளை எடுத்து திருப்பதி சாமி இடம் கொடுத்து பெரிய இயக்குனராக வாழ்த்தியுள்ளார்.ரஜினிகாந்தின் வாழ்த்தும் பொய்க்கவில்லை.திருப்பதி சாமி தெலுங்கில் இரண்டு மிகப்பெரிய வெற்றி படங்களையும் பெரிய ஹீரோக்களை வைத்தும், தமிழில் கேப்டன் விஜயகாந்த் வைத்து நரசிம்மா என்ற மிகப்பெரிய கமர்சியல் படத்தையும் எடுத்து நல்ல இயக்குனராக பெயரெடுத்தவர்.
ஆனால் தன்னுடைய இளம் வயதில் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். தமிழ் சினிமா நல்ல கமர்சியல் இயக்குனர் மட்டும் இன்று சிறந்த வசன கர்த்தாவையும் இழந்திருக்கிறது என்று அப்பொழுது ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications