ஜெயிலர் குறித்து வெங்கடேஷ் பட் வெளியிட்ட பதிவு.. அந்த வார்த்தை சொல்லி திட்டிய ரசிகர்..கிடைத்த பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் இன்று உலகெங்கும் வெளியாகி கொண்டு இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றும் தொடர்ச்சியாக தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Actor Rajinikanth Jailer Movie Venkatesh Bhatts post about Jailer and fans command

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் செஃப் வெங்கடேஷ் பட் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் ஜெயிலர் திரைப்படம் பற்றி வெளியிட்ட கருத்துக்கு ரசிகர் ஒருவர் திட்டி கமெண்ட் கொடுக்க, அதற்கு வெங்கடேஷ் பட் பதிலடி கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. திரையுலகமும் சரி, ரஜினி ரசிகர்களும் சரி பெரிய அளவில் இந்த திரைப்படத்திற்காக காத்திருந்தனர். அதற்கு ஈடு செய்யும் வகையில் ஜெயலர் திரைப்படம் அமைந்திருக்கிறது என்று அதிகமான ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ச்சியாக இணையத்தில் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் பற்றிய பஞ்சாயத்து பெரிய அளவில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஜினி ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி மூலமாகத்தான் தன்னை யார் என்று நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். ஒரு பக்கம் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஜெயிலர் திரைப்படம் மொக்கையாக இருக்கிறது என்று கூறி வந்தாலும் அதிகமான ரசிகர்கள் இந்த திரைப்படத்தை இப்போது பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் செப் வெங்கடேஷ் பட் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நேற்று," நாளைக்கு ஜெயிலர் ஒரு மணிக்கு தலைவா. எனக்கு விசில் அடிக்க தெரியாது. அதுக்காகவே 10 பேர் கூட வராங்க. நாளைக்கு சம்பவம்டா..." என்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். இதற்கு அதிகமான ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தனர்.

Actor Rajinikanth Jailer Movie Venkatesh Bhatts post about Jailer and fans command

இந்த நிலையில் ஒரு ரசிகர் "ரொம்ப முக்கியமான தகவல். உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா த்தூ" என்று கூறியிருக்கிறார். அதற்கு "கண்டிப்பா இல்ல" என்று வெங்கடேஸ் பட் பதில் கொடுத்திருக்கிறார். இது தற்போது சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் இந்த கருத்துக்கு அதிகமான ரசிகர்கள் எதற்காக இப்படி சமூக வலைத்தளத்தில் சிலர் தப்பாக பேசுகிறார்கள்? வெங்கடேஷ் பட் அவருடைய விருப்பத்தையும் மனதில் இருப்பதையும் பற்றி சொன்னார். அது யாரையும் புண்படுத்தும் படி இல்லையே? எதற்காக இப்படி தப்பாக கமெண்ட் போடணும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

அதே நேரத்தில் விசில் அடிக்க தெரியவில்லை என்று சொன்ன வெங்கடேசப்பட்டுக்கு சிலர் அறிவுரைகளை கொடுத்து இருக்கின்றனர். அதில் விசில் அடிக்க தெரியவில்லை என்றால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். 10 பேரை கூட்டிட்டு போறதுக்கு பதிலா ஒரு குக்கரும் ஸ்டவ் அடுப்பையும் கொண்டுட்டு போங்க, அங்க போய் பாலை பொங்க வச்சிருங்க. அதுவா விசில் அடிச்சுட்டே இருக்கும். அது போதும் என்று கலாய்த்து இருக்கின்றனர். இப்படியாக அதிகமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+