நாங்கள் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கவில்லை..அந்த ஒரு பதிவால்!? ராஜ்கிரண் வளர்ப்பு மகள் கூறிய உண்மை
நாங்கள் முறைப்படி வீட்டில் சொல்லிவிட்டு தான் பிறகு திருமணம் செய்து கொண்டோம் என்று ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் கூறி இருக்கிறார்.
சென்னை: நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியாவை சின்னத்திரை நடிகர் முனீஸ் ராஜா சமீபத்தில் திருமணம் செய்திருந்தார்.
தாங்கள் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளவில்லை வீட்டில் அனைவரிடமும் சொல்லிவிட்டு தான் அவர்கள் சம்மதிக்காததால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம் என்று முனீஸ் ராஜா மற்றும் பிரியா தம்பதி தெரிவித்து இருக்கின்றனர்.
அது மட்டுமில்லாமல் நடிகர் ராஜ்கிரண் வெளியிட்ட ஒரு பதிவால் தங்களுடைய வாழ்க்கையில் எந்த அளவிற்கு பிரச்சனை ஏற்பட்டது என்பது பற்றியும் முனீஸ் ராஜா கண்ணீரோடு பேசி இருக்கிறார்.

உறுதியான காதல்
சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலின் மூலமாக சின்ன திரையில் அறிமுகமான நடிகர் முனீஸ் ராஜா வெள்ளித்திரை நடிகராக இருக்கும் ராஜ்கிரண் மகளான பிரியாவை காதலித்து வந்திருக்கிறார். அதாவது பிரியா ராஜ்கிரணின் இரண்டாவது மனைவியின் மகள்தான்.
பிரியா மற்றும் முனீஸ் ராஜா இருவரும் facebook மூலமாகத்தான் அறிமுகம் ஆகி இருக்கின்றனர். ஆரம்பத்தில் நட்பாக பழகி பின்பு இருவரும் காதலிக்க தொடங்கி இருக்கின்றனர். இவர்களுடைய காதல் பிரச்சனை முதலில் இரு வீட்டாருக்கும் தெரிய வந்ததும் பிரச்சனை ஏற்பட்டதால் முனீஸ் ராஜா பிரியாவை பிளாக் செய்து விட்டாராம். ஆனாலும் தொடர்ந்து பிரியா முனீஸ் ராஜா தான் வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்து வந்தாராம்.

காதலுக்கு எதிர்ப்பு
அதுமட்டுமல்லாமல் முனீஸ் ராஜா மற்றும் பிரியா இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் இருவருடைய வீட்டிலும் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்புதான் கிளம்பி இருக்கிறது. ஆரம்பத்தில் முனிஸ் ராஜாவின் அம்மா இது சரிப்பட்டு வராது என்று கூறிவிட்டாராம். ஆனால் தொடர்ந்து பிரியா திருமண விஷயத்தில் உறுதியாக இருந்த நிலையில் பிறகு சம்மதம் தெரிவித்து விட்டார்களாம். அதே நேரத்தில் பிரியாவின் அம்மா இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில் தான் தனக்கு பிடித்த வாழ்க்கையை தான் தேடி போவதாக வீட்டில் கூறி விட்டு தான் இவர் வேறு வழி இல்லாமல் முனீஸ் ராஜாவோடு வந்துவிட்டதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

நடிகர் ராஜ்கிரண் பதிவு
இந்த நிலையில் முனீஸ் ராஜா மற்றும் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் உடைய திருமணம் சமூக வலைதளத்தில் பரவியதை தொடர்ந்து ராஜ்கிரண் ஒரு விரிவான விளக்கம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அதில் பிரியா என்னுடைய மகள் இல்லை என்றும் என்னுடைய வளர்ப்பு மகள் தான் என்றும், என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்னுடைய பெயரை கெடுக்க வேண்டும் என்று தான் அந்த சின்னத்திரை நடிகர் என்னுடைய வளர்ப்பு மகளை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார் என்றும் என்னுடைய பெயரை எந்த இடத்திலும் அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் பெரிய விளக்கமான ஒரு அறிக்கை கொடுத்திருந்தார்.

பதிவால் வந்த பிரச்சனை
ராஜ்கிரண் வெளியிட்ட அந்தப் பதிவு தங்களுடைய வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது என்று முனீஸ் ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய அம்மா ஒரு சுகர் பேசன்ட் அவர் தொடர்ந்து இந்த பிரச்சனையால் இன்சுலின் எடுத்துக் கொள்ளாமல் இருந்ததால் கிட்னி ஃபெயிலியர் ஆகிவிட்டது. அதனால் நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டோம் அது மட்டும் இல்லாமல் அவர் என் மீது அவ்வளவு பெரிய குற்றச்சாட்டுகளை வைத்ததற்கு என்னை கூப்பிட்டு அடித்திருந்தால் கூட நான் அதை ஏற்றுக் கொண்டிருப்பேன். என்னுடைய வாழ்க்கையில் இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று நான் நடக்கவே இல்லை. எந்த சூழ்நிலையும் நான் பிரியாவை விட்டுக் கொடுக்க மாட்டேன் அவளுக்காக இனி காலம் முழுக்க இருப்பேன் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.

காதல் வாழ்க்கை
பிரியா வீட்டை விட்டு வெளியே வரும்போது தான் ஒரு அறை எடுத்து தங்கி இருந்த வீட்டிற்கு வந்தார். அந்த வீட்டில் படுப்பதற்கு ஒரு கட்டிலோ, சமைப்பதற்கான பொருட்களோ எதுவும் பெரிய அளவில் கிடையாது. ஆனாலும் அவர் அந்த வாழ்க்கையை மனதார ஏற்றுக்கொண்டார். ஆனால் நடிகர் ராஜ்கிரணின் வீட்டில் பிரியாவிற்கு பெரிய அளவில் எல்லா வசதிகளும் செய்து கொடுத்திருந்தார்கள். அவர் என்ன நினைத்தாலும், ஆசைப்பட்டாலும் அதை வாங்கி கொடுத்து தான் வைத்திருந்தார்கள். ஆனால் பிரியா என்னை நம்பி வந்துவிட்டார். இப்போதுதான் நான் அவருடைய பெயரில் ஒரு வீடு கட்ட ஆரம்பிச்சி இருக்கிறேன் என்றும் அவருக்கு ஒரு பிசினஸ் ஒன்று வைத்து கொடுக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன் என்றும் முனீஸ் ராஜா கூறி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் அதிகமான ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications