காமலீலை.. முனீஸ் ராஜாவுக்காக அந்த பெண்ணிடம் அப்படி பேசினேன்.. அந்தரங்கத்தை லீக் செய்த ராஜ்கிரண் மகள்
சென்னை: பிரபல நடிகர் ராஜ்கிரண் வளர்ப்பு மகளான பிரியா தான் காதலித்து திருமணம் செய்த சின்னதிரை நடிகர் முனீஸ் ராஜாவை பிரிந்த பிறகு அது பற்றி பிரியா பேசி வரும் வீடியோ தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆரம்பத்தில் முனீஸ் ராஜாவை பிரிந்து விட்டேன் என்று சொல்லி இருந்த பிரியா இப்போது அவர் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கிறார்.
அதில் ஏற்கனவே முனீஸ் ராஜாவுக்கு இரண்டு திருமணம் ஆகி இருந்தது. என்னை திருமணத்திற்கு பிறகும் கூட்டிட்டு வந்து அடித்து துன்புறுத்தினார் என்றெல்லாம் பேசி இருந்த நிலையில் இப்போது முனீஸ் ராஜா ஏற்கனவே காதலித்த பெண் ஒருவருக்கு என்னை போன் பண்ண சொல்லி டார்ச்சர் செய்தார். முனீஸ்வரனுக்காக நான் சில வேலைகளை செய்தேன் என்றும் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா முனீஸ் ராஜா என்ற சின்னத்திரை நடிகரை தான் திருமணம் செய்து விட்டதாக திடீரென்று வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் அதற்கு ராஜ்கிரண் தரப்பில் இருந்து ஒரு நீண்ட பதிவு கொடுக்கப்பட்டது. அதில் பிரியா என்னுடைய மகள் கிடையாது. அவர் என்னுடைய வளர்ப்பு மகள் தான். அதோடு இனி எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தார்.
இப்படியான நிலையில் இதை தொடர்ந்து சில மாதங்கள் ராஜ்கிரண் தரப்பில் இருந்து பிரியா மற்றும் முனீஸ் ராஜா மீது போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்டிருந்தது. அதுபோல முனீஸ் ராஜா மற்றும் பிரியா தம்பதியும் ராஜ்கிரண் மற்றும் அவருடைய மனைவி மீது போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தனர். இப்படியான நிலையில் சில மாதங்களாக இவர்களுடைய பிரச்சனை அமைதியாக இருந்த நிலையில் இப்போது சில தினங்களுக்கு முன்பு பிரியா ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அதில் தான் முனீஸ் ராஜாவை பிரிந்து விட்டேன் என்றும் தனக்கு பல உதவிகளை செய்த தன்னை காப்பாற்றிய தந்தை ராஜ்கிரணுக்கு ரொம்பவே நன்றி என்றும் அதில் பேசியிருந்தார் .அதைத் தொடர்ந்து சில youtube சேனல்களுக்கு பிரியா பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் கொடுத்த ஒரு பேட்டியில் முனீஸ் ராஜாவை நான் பிரிந்ததற்கு பல காரணங்கள் இருக்கிறது. அவருடைய சுயரூபம் எனக்கு திருமணம் ஆன சில நாட்களிலேயே தெரிய ஆரம்பித்து விட்டது.
நாங்கள் திருமணத்திற்கு பிறகு அவருடைய வீட்டிற்கு போய் இருந்தோம். அப்போது அவருடைய வீட்டில் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவருடைய குடும்பத்தினர் ஏதோ 100 பவுன் நகை கொண்டு வந்து இருக்கிற மாதிரி உட்கார்ந்து சாப்பிட்டு இருக்கா பாரு என்று என்னை பற்றி பேசி இருக்கிறார்கள். அதை முனீஸ் ராஜா என்னிடம் சொல்லி அவங்க இப்படி சொல்றாங்க இதுக்கு நீ என்ன பண்ண போற என்று என்னிடம் கேட்டார்.
அதற்கு நான் உங்களை தானே நம்பி வந்தேன். என்னுடைய அப்பா அம்மா வேண்டாம் என்று தானே வந்தேன். பிறகு நீ என்ன பண்ண போறன்னு என்கிட்ட கேக்குறீங்க. நீங்கதான உங்க குடும்பத்திடம் சொல்ல வேண்டும் என்று சொன்னேன். அன்றிலிருந்து தான் எங்களுக்கு பிரச்சனை தொடங்கியது. அதோடு முனீஸ் ராஜாவுக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் முடிந்தது எனக்கு திருமணத்திற்கு பிறகு தான் தெரிந்தது.
அதோடு முனீஸ் ராஜா ஒரு நாள் அவருடைய முன்னாள் காதலி ஒருவரை என்னால் மறக்க முடியவில்லை அவரை பார்க்க வேண்டும் போல எனக்கு தோணுகிறது அதனால் நீ போன் பண்ணி அவளை நம்ம வீட்டுக்கு வர சொல்லு என்று சொன்னார். அந்த பொண்ணுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் இருக்கிறது. நான் போன் பண்ண முடியாதுன்னு முதலில் மறுத்தேன் பிறகு இவர் என்னதான் முடிவில் இருக்கிறார் என்று தெரிந்து கொள்வதற்காக அந்த பொண்ணுக்கு போன் பண்ணி பேசினேன்.
ஆனால் அந்த பொண்ணு என்னை திட்டி விட்டது. இப்படி பல விஷயங்களை நான் அவருக்காக பொறுத்து பொறுத்து பார்த்து செய்திருந்தேன். ஆனால் அவர் திருந்தவே இல்லை. இரவு நேரத்தில் பல பெண்களோடு போனில் பேசிக்கொண்டே இருப்பார். அவர்களுக்கு வெட்கமே இல்லாமல் ஐ லவ் யூ என்றும் ஆபாசமாகவும் அந்த பெண்களிடம் பேசி கொண்டு இருப்பார்.
அதோடு எப்போதும் என்னை பார்த்து உன்னை கல்யாணம் பண்ணி எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்று என் மனம் நோகும்படி பேசிக் கொண்டே இருப்பார். அதனால் தான் நான் அவரை பிரிந்தேன் என்று அந்த பேட்டியில் பிரியா பேசியிருக்கும் நிலையில் இது பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications