ரோட்டில் நின்று உடைமாற்றிய மீனா.. அந்த நேரத்தில் என்ன நடந்தது? மனம் திறந்த பிரபல நடிகர்
சென்னை: நடிகை மீனா பற்றி அவரோடு நடித்த நடிகர் ராஜ்கிரண் பல சுவாரசியமான தகவல்களை கூறி இருக்கிறார்.
அந்த வகையில் தன்னோடு 16 வயதிலேயே ஜோடியாக நடித்த மீனா அந்த திரைப்படத்தில் எப்படி எல்லாம் நடித்திருந்தார் என்பது பற்றி அதில் பேசியிருக்கிறார்.
என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் நடிக்கும் போது ஒரு பாடல் காட்சிக்காக நடிகை மீனா ரோட்டு ஓரத்தில் நின்று உடை மாற்றியதாக ராஜ்கிரண் கூறியிருக்கிறார்.

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, கதாநாயகியாக பல முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்திருக்கிறார். அந்த வகையில் அவரோடு நடித்த நடிகர் ராஜ்கிரண் மீனா பற்றி பல ரகசியங்களை கூறியிருக்கிறார்.
மீனா முதல் முதலாக 1991 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானது என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான். இந்த திரைப்படத்தில் நடிக்கும்போது மீனாவுக்கு 15 இல்லனா 16 வயது தான் இருக்குமாம். இந்த படத்தை இயக்குனர் கஸ்தூரி இயக்கி இருக்கிறார். அதுவரைக்கும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மீனா முதல் திரைப்படத்திலேயே கர்ப்பமாக இருப்பது போலவும் நடித்திருந்தார்.
இந்த படத்துல நடிக்கும் போது சின்ன வயசா இருக்கே எப்படி கர்ப்பமா இருக்குற மாதிரி நடிக்குது என்று யோசிக்காமல் மீனா அதை நடித்து முடித்து இருக்கிறார். இதைப்பற்றி ராஜ்கிரண் பேசும்போது படத்தில் மட்டும் தான் மீனா என்ன பார்த்து பயந்ததா எல்லாரும் நெனச்சிட்டு இருந்தாங்க. ஆனா நிஜத்திலயும் மீனா என்ன பார்த்து ரொம்பவே பயந்தாங்க. படம்பிடிப்பு தொடங்கிய முதல் நாளிலிருந்து அவர் என்கிட்ட பேசவே இல்ல.

அதுபோல நடிப்புன்னு வந்துட்டா கால நேரம் எல்லாம் மீனா பார்க்க மாட்டாங்க. எந்த சூழ்நிலையா இருந்தாலும் நடிக்க தயாராகிடுவாங்க. அப்போ இப்ப மாதிரி எல்லாம் கேரவன் போன்ற வண்டிகள் எல்லாம் கிடையாது. அதனால் ஏற்பட்ட அனுபவமும் எனக்கு வியப்பா இருந்துச்சு. என்னன்னா ஒருமுறை பாடல் காட்சிக்காக வேகமாக ஆடை மாற்ற வேண்டி இருந்துச்சு.
உடனே மீனா ரோட்டோரமாக காரை நிறுத்தி அதன் மறைவில் நின்று ஆடையை மாத்திட்டு வந்துட்டாங்க. இப்ப உள்ள நடிகைகளிடம் அதையெல்லாம் நாம எதிர்பார்க்க முடியாது. அந்த அளவிற்கு நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்று மீனாவை பற்றி பெருமையாக பேசியிருக்கிறார்.
-
Vadivelu: இதனால் தான் விவேக் இறப்புக்கு கூட போகல.. கண்கலங்க பேசிய நடிகர் வடிவேலு -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications