ராஜ்கிரணின் நிலைமை.. உச்சத்தை தொட்டு சரிந்த கதை.. சொல்லி காட்டிய வடிவேலு? யாரந்த நடிகை? கிரேட் தனுஷ்
சென்னை: தன்னுடைய அப்பாவுக்கு முதல் பட வாய்ப்பை தந்தவர் ராஜ்கிரண் என்பதால்தான், பவர்பாண்டி படத்தில், ராஜ்கிரணுக்கு தனுஷ் வாய்ப்பு தந்தார் ராஜ்கிரண் மீது தனிப்பாசம், மரியாதை தனுஷூக்கு உண்டு. அதேபோல தனுஷ் தம்பி என்றுதான் பாசமாக ராஜ்கிரண் கூப்பிடுவார் என்று, பிரபல நடிகர் ராஜ்கிரண் பற்றி மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு புகழ்ந்து கூறியிருக்கிறார்.
Aagayam tamil யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள செய்யாறு பாலு, "90களில் உச்சத்தில் இருந்தார் ரஜினிகாந்த்.. அவரது சம்பளத்தை யாராலுமே தொட முடியாதபோது, ராமராஜன் வந்து தொட்டுவிட்டார்.. ரஜினியைவிட 1 ரூபாய் அதிகமாக வாங்கினார்.. இதை சினிமா துறையே ஆச்சரியத்துடன் பார்த்தது.. அதற்கு பிறகு ராமராஜனுக்கு சரிவு ஏற்படவும், மீண்டும் முன்னணிக்கு வந்தார் ரஜினி..

இப்படிப்பட்ட சூழலில் ராஜ்கிரணும் ரஜினியை தாண்டி ஒரு சம்பளம் பெற்றார்.. இத்தனைக்கும் ஹீரோவுக்கான உருவம் இல்லை, வசீகரம் இல்லை.. முரட்டுத்தனமான உருவத்தில், காதல் காட்சியிலும் நளினம் இல்லாத ராஜ்கிரணை அனைவருமே மலைத்து பார்த்தனர்.. அவரது இயற்பெயர் அப்துல் காதர்.. இவர் சினிமா விநியோகிஸ்தர். ராமநாதபுரத்தை சேர்ந்தவர்..
இளையராஜா பக்தர்
இளையராஜாவின் தீவிரமான பக்தர்.. இளையராஜா படங்கள் என்றால் மட்டும்தான், அந்த படத்தை விநியோகஸ்தர் உரிமை பெறுவார்.. சொந்தமாக படத்தை தயாரிக்கலாமே? என்று ஒருமுறை இளையராஜா கேட்கவும், "உங்கள் கால்ஷீட் கிடைத்தால், படம் எடுக்க தயார்' என்றார் ராஜ்கிரண். ராமராஜன் படத்தை தயாரித்தார் ராஜ்கிரண்.. அதில்தான், வடிவேலுவையும் அறிமுகப்படுத்தினார்..
இதற்கு பிறகு கஸ்தூரி ராஜா கதையை சொல்லி, , இளையராஜா இசையில், அதை தயாரிக்க முடிவு செய்கிறார் ராஜ்கிரண்.. ஆனால், அந்த படத்தின் கதையை அனைத்து முன்னணி நடிகர்களிடம் சொல்லியும், யாருமே படத்தில் நடிக்க விரும்பவில்லை.. இறுதியில், ராஜ்கிரணை ஹீரோவாக வைத்து கஸ்தூரி ராஜாவிடம் இளையராஜா சொல்லிவிட்டார்..
ராஜ்கிரண் நடிப்பு
அப்படி நடித்ததுதான் என் ராசாவின் மனசிலே.. மாயாண்டி என்ற கேரக்டருக்கேற்றவாறு ராஜ்கிரண் மாறினார்.. சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட் என்ற பெயரை பெற்றார் ராஜ்கிரண்.. இளையராஜா இசை, ராஜ்கிரண் நடிப்பு, மீனாவின் அறிமுகம் என இதெல்லாம் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.. வரிசையாக ஹிட் படங்கள் தரவும், ரஜினியை தாண்டி சம்பளம் கிடைத்தது.
ஆனால், சரிவை ஏற்படுத்திய படம் மாணிக்கம்.. அந்த படம் நன்றாகவும் இருந்தது. எதற்காக அந்த படம் ஓடவில்லை என தெரியவில்லை.. அந்த படத்திலிருந்து ராஜ்கிரணுக்கு சறுக்கல் கிடைத்தது... இதற்கு நடுவில், ஒரு நடிகையின் வீட்டிலேயே ராஜ்கிரண் இருந்ததாக சொல்வார்கள். ஆனால், ஆதாரமில்லாமல் எதையும் நான் புகாராக சொல்லக்கூடாது.
ராஜ்கிரண் சரிவு
"ஒரே மாதிரியாக அனைத்து படங்களிலும் நடித்துவிட்டேன்.. அதற்கு மேல் என்னால் செய்ய முடியவில்லை.. இதுகூட சரிவுக்கு காரணமாக இருக்கலாம்" என்று ராஜ்கிரண் ஒருமுறை சொன்னார்.. இதுவும் நியாயமான காரணமாக தெரிந்தது. ஒருகட்டத்தில் ராஜ்கிரணுக்கு படங்களே இல்லை.. பிறகு வடிவேலு சென்று ராஜ்கிரணுக்கு உதவி செய்தார்.. ஆனால், அந்த உதவியையும் சொல்லி காட்டினார் வடிவேலு..
உச்சத்தில் இருக்கும்போது ஆயிரம் பேர் வருவாங்க, கீழே விழுந்தால் தூக்கிவிட யாரும் வரமாட்டார்கள் என்ற யதார்த்தத்தை ராஜ்கிரண் புரிந்து கொண்டார்.. பிறகுதான் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மாறினார்..
பவர்பாண்டி - தனுஷ்
தன்னுடைய அப்பாவுக்கு முதல் பட வாய்ப்பை தந்தவர் ராஜ்கிரண் என்பதால்தான், பவர்பாண்டி படத்தில், ராஜ்கிரணுக்கு தனுஷ் வாய்ப்பு தந்தார் ராஜ்கிரண் மீது தனிப்பாசம், மரியாதை தனுஷூக்கு உண்டு. அதேபோல தனுஷ் தம்பி என்றுதான் பாசமாக ராஜ்கிரண் கூப்பிடுவார்.
தனக்கு பிடித்த கதை, வயதுக்கேற்ற கேரக்டர் இருந்தால் மட்டுமே நடிக்கிறார் ராஜ்கிரண்.. அது பக்குவத்தின் வெளிப்பாடு.. இமேஜ் பற்றி அவர் கவலைப்பட்டதில்லை.. காசுக்காக கண்மூடித்தனமாக அனைத்து படங்களிலும் நடிப்பதில்லை. அதனால்தான் தனக்கான இடத்தை வலுவாக இன்றுவரை தக்க வைத்துள்ளார்" என்றார்.












Click it and Unblock the Notifications