ராஜ்கிரண் எனக்கு வாய்ப்பு தரல! நான் தான் அவருக்கு 2 முறை வாய்ப்பு கொடுத்தேன்.. நடிகர் ராமராஜன் ஓப்பன்
சென்னை: நடிகர் ராமராஜன் ராஜ்கிரண் உடனான கருத்து மோதல் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். பல வருடங்களாகவே இவர்கள் இருவருக்கும் பிரச்சனை இருந்த நிலையில், என்ன நடந்தது என்பதை பற்றி ராமராஜன் விரிவாக அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
நடிகர் ராமராஜனுக்கு அறிமுகமே தேவையில்லை. 80ஸ், 90ஸ் கதாநாயகர்களில் ஒருவராக இடம் பிடித்த ராமராஜன் மற்ற நடிகர்கள் போல விதவிதமான கெட்டப்களில் நடிக்கவில்லை என்றாலும் அரை டவுசரும், கலர் சட்டையும் போட்டு மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருந்தார்.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக சில வருடங்களாகவே சினிமாவை விட்டு விலகி இருந்த நிலையில் இப்போது சாமானியன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் நிலையில் அந்த திரைப்படமும் திரை அரங்குகளில் வெளியாகி இருக்கிறது. ராமராஜன் தொடர்ச்சியாக பல youtube சேனல்களில் பேட்டி கொடுத்து கொண்டிருக்கிறார். அதில் ராஜ்கிரணோடு ராமராஜனுக்கு எதனால் பிரச்சனை ஏற்பட்டது இருவருக்கும் என்ன கருத்து வேறுபாடு என்பதை பற்றி பேசி இருக்கிறார்.
அதில் ராமராஜன் பேசுகையில், ராஜ்கிரண் என்னை வைத்து படம் தயாரித்து எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. நான் தான் அவருக்கு கால் சீட் கொடுத்து படம் தயாரிக்க சொன்னேன். அப்போதுதான் எனக்கு திருமணம் ஆகி இருந்தது. அந்த நேரத்தில் தயாரிப்பாளர் டி.கே போஸ் தயாரிப்பில் "என்னை விட்டுப் போகாதே" என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தேன்.
டி கே போஸும், ராஜ்கிரணும் நண்பர்கள். இந்த நிலையில் டி.கே போஸ் ஒருமுறை ராஜ்கிரணை என்னுடைய வீட்டிற்கு கூட்டிட்டு வந்திருந்தார். அப்போது அவர் ராஜ்கிரண் சில படங்களுக்காக கடன் வாங்கி கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் நீ ஒரு படம் பண்ணி கொடு என்று என்னிடம் கேட்டுக் கொண்டார்.
நானும் சரி என்று சொன்னேன். அதற்காக ராஜ்கிரணிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு "ராசாவே உன்ன நம்பி" படத்தில் நடித்துக் கொடுத்தேன். அந்த படத்தில் சரிதா எனக்கு அண்ணியாகவும் ,ராதாரவி என்னுடைய அண்ணனாகவும் நடித்திருப்பார். அந்த திரைப்படத்தின் கதைப்படி ராதா ரவி மிலிட்டரியில் இருக்கும்போது சரிதா கர்ப்பமாக மாறுவார்.
அப்போது ராதாரவி என்னை சந்தேகப்பட்டு அடித்து விடுவார். அண்ணன் என்னை அடித்து விட்டாரே என்று நான் மனமுடைந்து அழுவேன். அப்போது இளையராஜா அந்த தருணத்திற்கு பாட்டு ஒன்று இசை அமைத்திருந்தார். அந்த பாடல் “சீதைக்கு ஒரு ராவணன் தீக்குளிக்க தேதி வச்சான்" என்ற பாட்டு வரும். அந்த பாடலை ராஜ்கிரண் பாட ஆசைப்படுவதாக என்னிடம் டி கே போஸ் சொன்னார்.
அதற்கு எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனாலும் சரி அவர் ஆசைப்படுகிறாரே என்று பாட்டு பாடிட்டு போகட்டும் என்று விட்டுக் கொடுத்து விட்டேன். அந்த படம் சிறுமலையில் முடிந்தது. ராஜ்கிரண் என்னிடம் வந்து கை கொடுத்தார். நானும் கை கொடுத்து நன்றாக இருங்கள் என்று சொன்னேன். அப்போது அவர் அடுத்து சிராசஜ் தான் டைரக்ட் செய்கிறார். படத்தின் பெயர் என்னை பெத்த ராசா என்று சொன்னார். அந்த பெயரை சொன்ன உடனே நான் அப்படியே ஷாக் ஆகி நின்றேன்.
அந்த படத்திற்கு மியூசிக் டைரக்டர் யார் என்று கேட்டேன். அவர் இளையராஜா என்று சொன்னார். அந்த படத்திற்கு உடனே ஓகே சொல்லிவிட்டேன். பூஜை தொடங்கியது. பத்திரிகை எல்லாம் அடித்துவிட்டார்கள். பத்திரிக்கையை பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் அதில் இரண்டு கதாநாயகிகள் இருந்தார்கள் உடனே நான் சிராஜிடம் கதையை வந்து வீட்டில் சொல்லுங்க என்று சொல்லிவிட்டேன்.
அவர் வீட்டிற்கு வந்து என்னிடம் கதை சொன்னார். அப்போது கதையில் ஒரு பெண்ணை நீங்க காதலித்து இன்னொரு பெண்ணோடு கல்யாணம் செய்கிறீர்கள் என்று சொன்னார். இதை கேட்டு எனக்கு கோபம் வந்துடுச்சு. வாழ்க்கையில் ஒரு பொண்ணை காதலிச்சி அவளையே திருமணம் செய்து கொண்டு இருப்பவன் நான். படத்தில் மட்டும் அப்படி எப்படி நடிக்க முடியும் என்று சொல்லி ஒரு கதாநாயகியை தூக்கி விடுங்கள் என்று சொன்னேன்.
அதை தொடர்ந்து ஒரு கதாநாயகியை நீக்கிவிட்டு படத்தை தொடங்கினார்கள் அந்த படமும் நன்றாகப் போனது. அதைத்தொடர்ந்து மீண்டும் "பெத்தவ மனசு" என்ற படத்தில் நானும் ராஜ்கிரணும் இணைந்தோம். அந்த படத்தில் தன்னுடைய பெயரை டைரக்டராக போட்டுக்கொள்ள ராஜ்கிரண் கேட்டார். முதலில் தயங்கினேன்... பிறகு சரி என்று சொல்லிவிட்டேன்.
அதில் துணை இயக்குனராக கே எஸ் ரவிக்குமார் வேலை பார்த்தார். இதற்கிடையே கே எஸ் ரவிக்குமாருக்கு வேறு படம் இயக்க வாய்ப்பு கிடைத்ததும் அவர் சென்று விட்ட நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக படம் நின்று போய்விட்டது. அதற்கு பிறகு எனக்கு சில படங்கள் டிராப் ஆனது. இதைத் தொடர்ந்து ராஜ்கிரண் தொடங்கிய அந்த படத்திற்கு கஸ்தூரிராஜா டைரக்டர் என்று சொல்லி ராஜா அண்ணனை இசையமைக்க சொல்ல, அதற்கு அவர் முதலில் படத்தை எடுத்துட்டு வாங்க பிறகு இசையமைக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.
அதைத் தொடர்ந்து படத்தை எடுத்து விட்டு அண்ணனிடம் போட்டு காண்பித்தால் அவருக்கு படம் பிடித்து விட்டது. ஆனால் அந்த படத்தை ராஜ்கிரண் ரிலீஸ் செய்யவில்லை. காரணம் நான் மீண்டும் திரைத்துறையில் மேலே வந்து விடுவேன் என்று வேண்டுமென்றே அதை ரிலீஸ் செய்யாமல் வைத்து விட்டார். இதுதான் நடந்தது... அதனால் ராஜ்கிரண் எனக்கு படம் கொடுக்கவில்லை. நான் தான் அவருக்கு படத்திற்கு இரண்டு படம் பண்ணி கொடுத்தேன் ஆனால் அவர் சில இடங்களில் எனக்கு படம் கொடுத்ததாக சொல்லி இருக்கிறார். என்று ராமராஜன் பேசியிருக்கிறார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications