நடிகர் ராமராஜனுக்கு பேரன் காட்டிய சந்தோஷம்.. அதுவும் வெளிநாட்டில் அந்த போஸ்டராமே..ஜொலிக்குது உழைப்பு
சென்னை: நடிகர் ராமராஜன் 80ஸ், 90ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் கதாநாயகனாக பிரபலமானவர்கள் தான்.
அவர் நடித்த பல திரைப்படங்கள் பலருடைய மனம் கவர்ந்திருந்த நிலையில் இவர் நடித்து பல வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் வெளிநாட்டிலும் இப்போதும் இவர் நடித்த திரைப்படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கிறதாம்.
அந்த போஸ்டரை பார்த்த ராமராஜனின் பேரன் அவருக்கு வீடியோவில் சொன்ன வார்த்தையை கேட்டு ராமராஜன் சந்தோஷத்தில் பூரித்து போய்விட்டாராம்.
நடிகர் ராமராஜனுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். அந்த காலகட்டத்தில் அவருடைய நடிப்பும் நடனமும் அதிகமான ரசிகர்களை கவர்ந்தது. இவருக்கு இருந்த ரசிகர்களின் அளவைப் பார்த்து தான் இவர் அரசியலில் தைரியமாக காலூன்றி இருந்தார். எத்தனையோ நடிகர்கள் அரசியலில் இறங்கினாலும் அதில் எல்லாராலும் ஜெயிக்க முடியவில்லை ஆனால் ராமராஜன் நடிப்பில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தனக்கென்று ஒரு முத்திரையை பதித்திருக்கிறார்.
1977 ஆம் ஆண்டு தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ராமராஜன் ஆரம்ப காலகட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் தான் நடித்திருக்கிறார். மண்ணுக்கேத்த பொண்ணு என்னும் திரைப்படத்தின் மூலமாக இவர் இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார். ஒரு சில திரைப்படங்களில் ராமராஜன் நடித்துக் கொண்டிருக்கும் போது பெரிய அளவில் இவருக்கு அறிமுகத்தையும், ரசிகர்களையும் கொடுத்தது "கரகாட்டக்காரன்" திரைப்படம் தான்.

இந்த திரைப்படம் 25 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேலே ஓடியது. ஏழு எட்டு தியேட்டர்களில் ஒரு வருடத்திற்கு மேலே ஓடி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் 4 திரையரங்குகளில் 400 நாட்கள் ஓடி இருக்கிறது. கரகாட்டக்காரன் திரைப்படம் ராமராஜனுக்கு 18 வது திரைப்படம் தான்.
இவருடைய எதார்த்தமான நடிப்பு இவர் நடிக்கும் பல படங்களில் இவருக்கு வெற்றியை கொடுத்துக் கொண்டிருந்தது.
ஆரம்ப காலகட்டத்தில் பக்கத்து வீட்டு பையன் போல யதார்த்தமான தன்னுடைய நடிப்பை நடித்து வந்த ராமராஜன் அப்போது நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருடன் இவருடைய திரைப்படங்களும் அடிக்கடி போட்டி போட்டுக் கொண்டிருக்கும் .அரை டவுசர் போட்டு கொண்டு நடித்தாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்த கதாநாயகனாக அப்ப மட்டும் அல்லாமல் இப்ப வரைக்கும் ராமராஜன் இருந்து வருகிறார்.
திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது உச்ச நிலையில் இருந்த ராமராஜன் ஒரு சில வருடங்களாக திரைப்பட நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு 2012 இல் மேதை திரைப்படத்தில் இவர் நடித்தார். இந்த திரைப்படம் இவர் எதிர்பார்த்த அளவில் இவருக்கு வெற்றியை கொடுக்காமல் தோல்வியடைந்து விட்டது.
அதற்கு பிறகு தற்போது சாமானியன் என்ற தலைப்பில் மூன்று கதாநாயகர்களின் ஒருவராக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் கரகாட்டக்காரன் திரைப்பட அனுபவங்கள் குறித்து செய்தி சேனல் ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், நான் அதிகமாக படங்கள் நடிச்சதில்லை. இப்பதான் 45வது படம் பண்ணிக்கிட்டு இருக்கிறேன். ஆனா நான் நடிச்ச படம் கடல் கடந்து பேசுறாங்க, கொண்டாடுறாங்கனு நினைக்கிறப்போ சந்தோசமா இருக்கு என்று கூறியிருக்கிறார்.
அதுபோல எனக்கு ஒரு பையனும் பொண்ணும் இருக்கிறாங்க. என்னுடைய பையன் அருண் இப்ப ஸ்காட்லாந்துல ஆடிட்டராக இருக்காரு. உலக அளவில் டீல் பண்ணக்கூடிய ஆடிட்டராக இருக்கார். அவர் குடும்பத்தோட டின்னர் சாப்பிட ஒரு முறை இத்தாலியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு போய் இருக்கிறார். அந்த ஹோட்டலில் தமிழ் பட போஸ்டர்கள் சில இருந்திருக்கிறது. அதுல "கரகாட்டக்காரன்" திரைப்பட போஸ்டர் மட்டும் ஹைலைட்டா வெச்சிருந்திருக்காங்க.
அத பார்த்து ஆச்சரியமான என்னுடைய மகன் அந்த ஹோட்டல் ஓனர் கிட்ட பேசி இருக்கார். அவர் தமிழ்ல பேசி இருக்கிறார். பிறகு இருவரும் விசாரிச்சு இருவரும் மதுரை பக்கத்தில் சேர்ந்த சொக்கம்பட்டி என்று சொல்ல, இரண்டு பேரும் ஒரே ஊர்காரங்கன்னு ரொம்ப சந்தோஷமா பேசி இருக்காங்க. அப்போ தான் அவரு நீங்க ராமராஜன் மகனா? அப்பா மாதிரியே இருக்கீங்க என்று அவரும் பெருமையா பேசிக்கிட்டு இருந்தாராம்.
அந்த நேரத்தில் அங்கு ஒட்டப்பட்டு இருந்த போஸ்டரை என்னுடைய பேரன் எனக்கு வீடியோவில் எடுத்து அனுப்பி வச்சிருக்கான். இதுக்கு முன்னாடி "செண்பகமே செண்பகமே" பாட்டை பார்த்ததிலிருந்து என்னை "COW தாத்தா" என்று செல்லம்மா கூப்பிடுவான். வெளிநாட்டில் என்னுடைய போஸ்டரை பார்த்ததும் என் பேரனுக்கு அவ்வளவு சந்தோசம். அந்த வீடியோவை பார்த்த எனக்கும் சந்தோஷம்.
ஏன்னா நான் நடிச்சது கொஞ்சம் படங்கள் அந்த படங்கள் வெளிநாடு வரைக்கும் பரவி இருக்கு அதுதான் என்று நெகிழ்ச்சியோடு பேசி இருக்கிறார். தற்போது இதை ராமராஜனின் ரசிகர்கள் அதிகமானோர் பகிர்ந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications