விஜயகாந்த் கூட நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்! அதற்கு காரணமே இதுதான்! நடிகர் ராமராஜன் உடைத்த ரகசியம்
சென்னை: நடிகர் ராமராஜன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் விஜயகாந்த் உடன் நடிக்க தனக்கு வந்த இரண்டு வாய்ப்பை தான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார். புகழின் உச்சத்தில் இருந்த விஜயகாந்த் உடன் தான் ஏன் நடிக்க மாட்டேன் என்று ராமராஜன் சொன்ன காரணத்திற்கு அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது.
அந்த வகையில் நடிகர் ராமராஜன் 80ஸ் காலத்தில் தொடங்கி 90களின் காலத்தில் கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் புகழின் உச்சத்தில் வலம் வந்தவர். அவரை அவ்வளவு சீக்கிரமாக ரசிகர்கள் மறந்து விட முடியாது. அதிலும் மக்கள் நாயகனாக அதிகமான கிராமப்புற கேரக்டர்களில் நடித்து வந்த ராமராஜனின் படங்கள் அந்த நேரத்தில் முன்னணியில் இருந்த ரஜினி, கமல் போன்றவருக்கு போட்டியாக நூறு நாட்களுக்கு மேலாக தியேட்டரில் அதிகமாக ஓடியிருக்கிறது.

ஆனாலும் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவை விட்டு விலகி இருந்த ராமராஜன் இப்போது சாமானியன் திரைப்படத்தின் மூலமாக ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார். இவருடைய திரைப்படம் தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் தனக்கு நடிக்க வாய்ப்பு வந்த பிறகும் தான் எதனால் அந்த வாய்ப்பை நிராகரித்தேன் என்பது பற்றி ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
நடிகர் விஜயகாந்த் முன்னணி நடிகராக இருக்கும்போது பல நடிகர்களுக்கு அண்ணனாகவும், அப்பாவாகவும் நடித்திருக்கிறார். விஜய், சூர்யா, லிவிங்ஸ்டன், பிரபுதேவா என்று பலருக்கும் அண்ணனாக நடித்து அவர்களுடைய வாழ்க்கையை மாற்றி வைத்தவர் ஆனால் அவரோடு ராமராஜன் நடிக்க மறுத்திருக்கிறார். அது பற்றி ராமராஜன் பேசுகையில், நான் நடித்த நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படம் வெளியாகி பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
அந்த திரைப்படம் வெற்றி அடைந்ததும் அந்த திரைப்படத்தின் இயக்குனர் எனக்கு போன் போட்டு ராமராஜன் படம் நல்லாவே வந்திருக்கு. நல்ல வரவேற்பு பெற்றுவிட்டது. அடுத்ததாக சிங்கப்பூருக்கு போறோம்.. அடுத்த படத்துக்கு ரெடியாகு.. என்று சொன்னார். நானும் சந்தோஷம் சார் என்று சொன்னேன். அதோடு படத்தில் யார் நடிகை என்று கேட்டேன். அதற்கு நதியா தான் ஹீரோயினி இன்னொரு நடிகர் விஜயகாந்த் என்று சொல்ல எனக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது.
அவருடன் நான் சொன்னேன் சார் நீங்க எனக்கு “நம்ம ஊரு நல்ல ஊரு” படம் எடுக்கும்போது என்ன சொன்னீங்க? இந்த படத்தில் 70 சீன் உன்னை வச்சி இருக்கு. நீ இல்லாத 10 சீனும் உன்னை பத்தி தான் பேசுவாங்கன்னு சொன்னீங்க. இப்படி என்னை ஒரு ஹீரோவா முதல் படத்தில் அறிமுகப்படுத்திட்டு இரண்டாவது படத்திலேயே செகண்டு ஹீரோவா மாத்துறீங்கன்னு கேட்டேன். உடனே இயக்குனரும் சரின்னு விஜயகாந்திடம் பேசாமல் விட்டுவிட்டார்.
அதுபோல பிறகு ஒரு சில வருடங்கள் கழித்தும் ஒரு படத்தில் விஜயகாந்த் உடன் நடிக்க வாய்ப்பு வந்தது. நான் அப்போதும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். காரணம் அப்போது அவர் முக்கிய நடிகராக இருந்தார். அவரோடு நடிக்கும் போது நாம இரண்டாவது ஹீரோவாகத்தான் இருப்போம் என்று தான் நான் மறுத்தது. நான் விஜயகாந்த் என்னுடைய படத்தில் வேண்டாம் என்று சொன்ன விஷயம் அவருடைய காதிற்கு போய் இருக்கும்... ஆனாலும் அதை பற்றி அவர் என்னிடம் கேட்டது கிடையாது.. என்று அந்த பேட்டியில் ராமராஜன் பேசியிருக்கிறார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications