நான்கு வருடமாக போராடிய தேவா.. நடிகர் ராமராஜன் சொன்ன வார்த்தை.. வாழ்க்கையே மாறியதாம்..!
சென்னை: இசையமைப்பாளர் தேவா தன்னுடைய பெயர் எப்படி தேவா என மாறியது என்பது பற்றி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
நான்கு வருடங்களாக எப்படி பெயரை வைக்கலாம் என்று குழப்பத்தில் இருந்த நிலையில் எனக்கு ஒரு நல்ல ஒரு அறிவுரையை சொன்னது ராமராஜன் தான் என்று தேவா கூறி இருக்கிறார்.
கானா பாடகர் மற்றும் இசை அமைப்பாளராக இருக்கும் தேவா இந்த 20 வருடங்களாக பல ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார். கிராமியப் கானா பாடல்களை சினிமாவிற்குள் அறிமுகப்படுத்தியவர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் தேவா.
இசையமைப்பாளர் தேவாவின் பாடல்களுக்கு எப்போதுமே ஒரு மவுசு இருக்கிறது. அவர் இசையமைத்த காலகட்டத்தில் அவருடைய பாடல்கள் பலராலும் முணுமுணுக்கப்பட்டு வரும்.. தற்போது கூட பல பேருந்துகளில் அவருடைய பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

வேலூர் மாவட்டத்தை சார்ந்த தேவா பல கானா பாடல்களை எழுதி, அந்த பாடல்களை தானே பாடியும் இருக்கிறார். அவருடைய பாடல்கள் பெரும்பாலும் சென்னை தமிழில் இருக்கும். ஆனால் இவர் மேற்கத்திய கருவிகளை கையாளும் மாஸ்டர் தன்ராஜ் இடம் மேற்கத்திய இசையையும் பயிற்சி பெற்று இருக்கிறார். தேவாவிற்கு தேனிசை தென்றல் என்ற ஒரு சிறப்பு பெயரும் இருக்கிறது.
தேவாவின் உண்மையான பெயர் தேவா கிடையாதாம். தமிழ் சினிமாவில் உள்ள பல நட்சத்திரங்களின் பெயர் உண்மையான பெயர் கிடையாது. அது பலருக்கும் தெரிந்ததுதான். நடிகர்களாக இருந்தாலும் சரி பாடகர்களாக இருந்தாலும் சரி சினிமாவிற்குள் அறிமுகமாகும் போது ஒரு பெயரில் இருப்பார்கள். அதற்குப் பிறகு வேறு பெயரில் மாறி இருப்பார்கள் அந்த மாதிரி தான் தேவாவும் மாறி இருக்கிறார்.
தேவா அப்போது நியூமராலஜி ரொம்பவே நம்புவாராம். அதனால் அதற்கு தகுந்த மாதிரி ஒரு பெயர் வைக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் மனோரஞ்சன் என்கிற பெயரை தேர்ந்தெடுத்து இருக்கிறார். ஆனால் அந்தப் பெயர் அவருக்கே பிடிக்கவில்லையாம். பிறகு நாடோடி சித்தன் என்கிற பெயரை தேர்ந்தெடுத்து அதில் அறிமுகமும் ஆகி இருக்கிறார்.
நாடோடி சித்தன் என்கிற பெயரில் ஒரு படத்திற்கு அவர் இசையமைத்திருக்கிறார். ஆனால் அந்த திரைப்படம் அவ்வளவு வெற்றியைப் பெறவில்லையாம். அதனால் இந்த பெயரும் ராசியாக இல்லை என்று விட்டுவிட்டாராம். பிறகு மற்றொரு படத்திற்கு தேவா பிரதர்ஸ் என்கிற பெயரில் இசை அமைத்திருக்கிறார். அதுவும் அவ்வளவு ராசியாக இல்லையாம்.பிறகு அப்படியே நான்கு வருடம் போயிருக்கிறது.
அப்போதுதான் ராமராஜனின் படத்திற்கு இசையமைப்பதற்கான வாய்ப்பு தேவாவிற்கு கிடைத்திருக்கிறது. அப்போது சி. தேவா என்கிற பெயரில் ராமராஜன் படத்தில் இசையமைக்க இருந்திருக்கிறார். ஆனால் ராமராஜன் சி தேவா என்பதை விட, வெறும் தேவா நன்றாக இருக்கிறது என்று பரிந்துரைத்திருக்கிறார். தேவா என வையுங்கள் நன்றாக வருவீர்கள் என்றும் சொன்னாராம்.
நடிகர் ராமராஜன் சொன்ன வார்த்தையை கேட்டு மனம் மாறிய தேவா அதற்கு பிறகு தான் அவருடைய பெயரை தேவா என்கிற பெயரில் இசையமைக்க தொடங்கினாராம். அது அவருக்கு நல்ல ராசியான பெயராகவும் தெரிந்திருக்கிறது. அந்த பெயர் இப்ப வரைக்கும் அவருக்கு அடைமொழியோடு மாறி இருக்கிறது என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
-
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications