அலற விட்ட ஆர்த்தி போஸ்ட்.. பாடகி கெனிஷா, நடிகர் ரவி மோகனுக்கு இனி சக்ஸஸ்தான் பாருங்க: பிரபலம் ஆரூடம்
சென்னை: நடிகர் ரவிமோகன், ரவி மோகன் ஸ்டுடியோ என்ற புதிய படக்கம்பெனியை துவங்கியிருக்கிறார்.. இதுதான் கோடம்பாக்கத்தில் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.. இந்நிலையில், பிரபல எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான ராஜகம்பீரன், ரவிமோகன் இந்த புதிய முயற்சியில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரவி மோகன் ஸ்டுடியோ துவங்கியதுமே, அவரது மனைவி ஆர்த்தி இன்ஸ்டா ஸ்டோரிகளை பதிவிட்டிருந்தார்.. அதில், "நீங்கள் கடவுளை முட்டாளாக்க முடியாது. மற்றவர்களை வேண்டுமானால் முட்டாளாக்கலாம். ஏன் உங்களையே கூட முட்டாளாக்கிக்கொள்ளலாம். ஆனால் கடவுளை மட்டும் முட்டாளாக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

ஆர்த்தி போட்ட இன்ஸ்டா பதிவுகள்
இரண்டாவது இன்ஸ்டா ஸ்டோரியில் 'பேரன்டிங் குறித்து எனக்கு கிடைத்த சிறந்த அறிவுரை எது தெரியுமா?. எப்பொழுதும் உங்கள் பிள்ளைகள் பக்கம் இருங்கள். அந்த அப்பாவிகளுக்கு உங்களின் அன்பும், நேரமும் தேவை. எது நடந்தாலும் உங்கள் பிள்ளைகளின் மன அமைதியை காப்பாற்றுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சினிமா விமர்சகர் ராஜகம்பீரன், "தொடரும்போது இருக்கும் காதல், வாழ்க்கை முழுவதும் இருக்குமா தெரியாது.. 2 குழந்தைகள் வளர்ந்த பிறகும், பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதும், ஜெயம் ரவியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக ஆர்த்தி மீது கூறப்படுகிறது.. இது ஜெயம் ரவிக்கு சங்கடத்தையும் தந்திருக்கிறது..
டாமினேட், பறிபோன சுதந்திரம்
இதற்கு பிறகுதான், தன்னுடைய சுதந்திரம் பறிபோய்விட்டதாகவும், தன்னை டாமினேட் செய்வதாகவும் ஜெயம் ரவி சொல்லியிருந்தார்.. இந்த நேரத்தில் தோழியாக கெனிஷா அறிமுகமானார்.. அது காதல் வாழ்க்கையாகவும் இருக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. அதற்காக ஒளிந்து மறைந்து வாழாமல், உறவை உறுதிப்படுத்துவதற்காகவே, போட்டோக்களை பதிவிடுகிறார்கள்.
தற்போது ஆர்த்தி - ஜெயம் ரவியின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.. ஒருமுறை அபிப்பிராயம் மாறிவிட்டால், அதனை பழைய மாதிரி மாற்ற முடியாது.. கறந்த பால் மடி புகாது என்பதுபோல வெறுப்பாகிவிடும்.. அதிலும் தன்னுடைய இமேஜை டேமேஜ் செய்துவிட்டபிறகு, அதனை மன்னிக்க முடியுமா தெரியவில்லை..
நொறுங்கியது
எப்போதுமே பொதுவெளியில் கருத்து வேறுபாடுகள் வந்துவிட்டால், அதனை ஒட்டவைப்பது மிகவும் கடினம். உடைந்த கண்ணாடி துண்டுகளை ஒட்ட வைக்கவும் முடியாது.
மனம் கசந்து திருமண வாழ்க்கையிலிருந்து வெளியேறிவிட்டதாக பகிரங்கமாக ஜெயம் ரவி அறிவித்து விட்டார்.. எனவே இதற்கு மேல் ஒருவரின் தனிமனித வாழ்க்கையை யாரும் கொச்சைப்படுத்த முடியாது. அதற்கு வழிவிடுவதுதான் சரியானது.
இன்று பொதுவெளியில் இவ்வளவு புகார்களை கொடுக்கும் ஆர்த்தி, அன்று அதனை சரிசெய்யும் வாய்ப்புகளை தவறவிட்டுவிட்டார்.. உணர்வுகள் புரியவில்லை என்றால் உடைந்துவிடும்.. எனவே அவரவர் பாதையில் செல்லக்கூடிய கட்டாயத்துக்கு இருவரும் வந்துவிட்டனர்..
சக்ஸஸ் ரவிமோகன்
அதேபோல ரவிமோகன் இனி படங்களை இயக்க போகிறார், தயாரிக்கவும் போகிறார்.. அதில் வெற்றி பெறுவார் என்று நினைக்கிறேன்.. ஒரு நடிகர் இயக்குநராவது என்பது புதிய பரிணாமம்.. கமல்ஹாசன், எம்ஜிஆர் பல நடிகர்கள் டைரக்டர்களாக மாறியிருக்கிறார்கள்.. அதுபோல ஜெயம் ரவியும் அடுத்தக்கட்டத்துக்கு நகர்கிறார்.. இதற்காக சக நண்பர்களும் ஜெயம் ரவியை பாராட்டி வாழ்த்தி கொண்டிருக்கிறார்கள்.
சினிமா துறையில் ஜெயம் ரவிக்கு அனுபவமும் நிறையவே உள்ளது.. பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.. பல வருட காலங்களாக சினிமா பற்றின நுணுக்கங்களையும் நன்றாக தெரிந்தவர் ஜெயம் ரவி.. அதனால் நிச்சயம் வெற்றி பெறுவார்.. சினிமா பற்றி என்ன ஏதென்றே தெரியாமல் புதிதாக வருபவர்கள்தான், படங்களை எடுத்து தோற்று போவார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications