"எங்க அப்பா ரோபோ சங்கர் வாழ்கிறார்!" குபேரர் கோயிலில் 'யானை' காணிக்கை! கண்ணீருக்கு மத்தியில் பேசிய மகள்
சென்னை: திரை உலகில் பலரையும் சிரிக்க வைத்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் திடீர் மறைவு, தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், அவரது குடும்பத்திற்கும் பேரிழப்பாக அமைந்தது. அவருடைய மறைவுக்குப் பிறகு, குடும்பத்தினர் கண்ணீரும் பெருமையுமாக இப்போது அவரை நினைவு கூர்ந்துள்ளனர்.

ரோபோ சங்கர் பயோகிராபி
ரோபோ சங்கர் (சங்கர்) தனது ஆரம்ப கால வாழ்க்கையில், நடனக் கலைஞராகவும், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாகவும் தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார். அவரது ரோபோ டான்ஸ் மற்றும் தனித்துவமான உடல்மொழி காரணமாகவே அவர் ரோபோ சங்கர்' என்று அழைக்கப்பட்டார்.
சின்னத்திரை மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற பிறகு, அவர் தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துப் பிரபலமானார்.
மனைவியின் உருக்கமான பதிவு
ரோபோ சங்கரின் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி பிரியங்கா சங்கர் சமூக ஊடகங்களில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "30 நாட்களுக்குப் பிறகு உன்னுடன் ஒரு காணொளியில் உரையாடல் & குரல் கேட்கிறேன் சங்கரம்மா. சீக்கிரம் ஷூட்டிங்கை முடிச்சிட்டு வந்திடுமா. நம்ம பேரன் நட்சத்திரனும் நானும் காத்திருக்கிறோம்" என்று தனது மறைந்த கணவரை நினைத்து உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார். இந்த உருக்கமான பதிவு, ரோபோ சங்கரின் இழப்பை குடும்பத்தினர் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை உணர்த்தியது.
ரோபோ யானை
ரோபோ சங்கர் மறைந்து 30 நாட்கள் ஆன நிலையில், அவருடைய குடும்பத்திற்குப் பெருமை சேர்க்கும் ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது. ரோபோ சங்கரின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் அவரது குடும்ப உறுப்பினரான சோனியா போஸின் தம்பி டிங்கு சித்தப்பா ஒரு அரிய காணிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்.
செங்கல்பட்டு அருகே உள்ள ரத்தினமங்கலம் குபேரர் கோயிலில் 'ரோபோ சங்கர்' என்று பெயரிடப்பட்ட ஒரு ரோபோடிக் யானையை அவர் காணிக்கையாக வழங்கியுள்ளார். நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவரது பெயரில் இந்த ரோபோடிக் யானையை உருவாக்கி, கோயிலுக்கு வழங்கியுள்ளனர். அந்த யானை சென்னை, செங்கல்பட்டு அருகே ரத்தினமங்கலத்தில் உள்ள குபேரர் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.
மகளின் பெருமிதம்
ரோபோ சங்கரின் மகள் மற்றும் மருமகன் கார்த்திக் இருவரும் இணைந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் சிரித்த முகமாகப் பெருமையுடன் பேசியதாவது: " இன்னைக்கு எங்க அப்பா மறைந்து முப்பது நாள் ஆகிவிட்டது. ஆனால் அதே நாளில் ஒரு நல்ல விஷயமும் நடந்து இருக்கிறது. நமது டிங்கு சித்தப்பா, எங்க அப்பா ரோபோ சங்கர் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பின் காரணமாகத்தான் இந்தப் பெயரில் ஒரு ரோபோடிக் யானையைச் செய்து கோயிலுக்குக் காணிக்கை கொடுத்திருக்கிறார். இப்போது குபேரர் கோயிலலில் இந்த யானை இருக்கிறது. நிறைய மக்கள் இந்த ரோபோ யானையைப் பற்றிப் பேசுவதைப் பார்க்கும்போது, அவர் இன்றும் எங்க அப்பா ரோபோ சங்கர் வாழ்கிறார் என்பது போலவும், அதிகமான மக்களும் அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது போலவும் எங்களுக்குச் சந்தோசத்தைக் கொடுத்திருக்கிறது!"
ரோபோ சங்கர், உடல் ரீதியாகப் பிரிந்தாலும், ஒரு ரோபோடிக் யானையின் பெயரால் இன்றும் ரசிகர்களின் நினைவிலும், குடும்பத்தினரின் இதயத்திலும் அவர் வாழ்ந்து வருகிறார் என்பதை இந்த உணர்வுபூர்வமான நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது. அவரது கலை மூலம் கொடுத்த மகிழ்ச்சியைப்போலவே, மறைவுக்குப் பிறகும் அவர் குடும்பத்திற்குப் பெருமையைக் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications