இப்படி ஆகி மூன்று வருஷம் ஆகிடுச்சு..கூடவே இரும்மா..உருக்கமாக பதிவு வெளியிட்ட ரோபோ சங்கர் மனைவி
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் மனைவி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தன்னுடைய அம்மாவோடு எடுத்த புகைப்படத்தை அவர் பதிவிட்டிருக்கிறார்.
அம்மாவின் மறைவு தினத்தில் ரோபோ சங்கர் மனைவி செய்த செயல் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக அசத்தலான ஸ்டாண்ட் அப் காமெடியால் அறியப்பட்டவர் தான் ரோபோ சங்கர். இவர் மிகவும் பிரபலமாகியது என்றால் விஜய் டிவி நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவருக்கு பல திரைப்பட வாய்ப்புகளும் குவிய தொடங்கியது.
உழைப்பும் தனித்துவமான திறமையின் மூலமாக காமெடி மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்து நடிகர் ரஜினிகாந்த், கார்த்தி, சிவாஜி கணேசன் போன்ற பல முன்னணி நடிகர்களின் குரல்களில் மிமிக்ரி செய்து பலரையும் ரோபோ சங்கர் வியக்க வைத்திருக்கிறார்.

விஜய் டிவியில் இவருடைய காமெடிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து வெள்ளி திரையில் காமெடி நடிகராக பல முன்னணி நடிகர்களோடு பல ஹிட் திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். ரோபோ சங்கர் மட்டுமல்லாமல் அவருடைய மனைவி மகள் என இருவருமே தொலைக்காட்சியில் பிரபலமானவர்கள் தான். ஒரு சில திரைப்படங்களிலும் தலைகாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் ரோபோ சங்கர் பற்றி சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியான தகவல்களும் பரவி வருகிறது. ரோபோ சங்கர் திடீரென உடல்எடை குறைந்தது குறித்து பலரும் பல்வேறு தகவல்களை பரப்பி வருகிறார்கள். ஆனால் அப்படி எல்லாம் இல்லை அவர் படத்திற்காக உடல் எடை குறைத்து இருக்கிறார் என்று சமீபத்தில் ரோபோ சங்கர் மனைவி கூட விளக்கம் கொடுத்திருந்தாரர்.

இந்த நிலையில் உடல் எடை குறைந்திருக்கும் ரோபோ சங்கர் மீண்டும் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கி வருகிறார். இந்த நிலையில் ரோபோ சங்கர் மனைவி கொரோனா காலத்தில் இறந்த தனது அம்மா இறந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டதாகவும் அவரது நினைவு நாள் என்றும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படங்களில் நீ எங்க இருந்தாலும் பரவாயில்லை அம்மா, எப்போதும் என் கூடவே இருமா.. என்னோட பலம், பலவீனம் எல்லாம் ஆகவே இருந்து வழி நடத்தனுமா. என்றும் உலகத்திற்கு தான் கொரோனா நோய் வந்து லாக்டவுன் போட்டப்போ உனக்கு மட்டும் போடலயம்மா எங்கம்மா இருக்க?.. மூணு வருஷமா தேடிட்டு இருக்கேன் ரொம்ப மிஸ் பண்ணுறேன்மா. உன்னை என்று உருக்கமாக பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications