குலசாமி கோயிலுக்கு போயிட்டு நேரா இங்கே தான் வந்தோம்.. விஜயகாந்த் நினைவிடத்தில் ரோபோ சங்கர் உருக்கம்
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் தன்னுடைய மகளுக்கு திருமணம் முடிந்த பிறகு குலதெய்வ வழிபாடு நடத்தியதும் தான் விஜயகாந்த் நினைவிடத்தில் வழிபாடு நடத்த வந்த போது விஜயகாந்த் குறித்து சில வார்த்தைகளை ரோபோ சங்கர் பகிர்ந்து இருக்கிறார்.
அந்த வகையில் நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கு அவருடைய மாமன் கார்த்திக் உடன் கடந்த வாரத்தில் திருமணம் முடிந்தது. ஆனால் திருமணத்திற்கு முன்பு தொடங்கிய இவர்களுடைய கொண்டாட்டம் இப்ப வரைக்கும் குறைந்தபாடு இல்லை. சமூக வலைதளத்தில் இவர்களுடைய குடும்ப புகைப்படங்களும் வீடியோக்களும் தான் அதிகமாக இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது.

அதிலும் இந்திரஜா ஆரம்பத்தில் இருந்து அதிகமான சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய நிச்சயதார்த்தத்தின் போது தன்னுடைய அப்பா ரோபோ சங்கருக்கு உதட்டில் முத்தம் கொடுத்ததால் அதிகமாக விமர்சிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஹெல்த்தி பங்க்ஷன் வைத்ததும் பெரிய அளவில் பலர் பிரச்சனையை கிளப்பி இருந்தனர்.
இது தமிழ்நாட்டின் மரபை அழிக்கிற மாதிரி இவர்கள் பங்க்ஷன் கொண்டாடி கொண்டிருக்கிறார்கள் என்று இணையத்தில் பலர் விமர்சித்துக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் ரோபோ சங்கரின் மகள் ரிசப்ஷனில் ரோபோ சங்கர் மருமகனும் ரோபோ சங்கரின் மகளும் உதட்டில் முத்தம் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால் தன்னைப் பற்றி வரும் விமர்சனங்களை கண்டுகொள்ளாத ரோபோ சங்கர் அதையெல்லாம் கடந்து போய்க் கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் இன்று சில மாதங்களுக்கு முன்பு காலமான நடிகர் விஜயகாந்தின் நினைவிடத்தில் ஆசிர்வாதம் வாங்குவதற்காக தன்னுடைய மகள் மற்றும் மருமகனை கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார். அது குறித்து அவர் அங்கு பேசுகையில், இன்று கேப்டன் விஜயகாந்தின் நூறாவது நாள்.
இன்றும் அவரைப் பார்க்க கட்டு கடங்காத கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. அதில் நாங்களும் ஒரு ரசிகனாக புதுமண தம்பதிகளை கூட்டிக்கொண்டு ஒரு குடும்பமாக இங்கே வந்திருக்கிறோம். என் பெண்ணிற்கு திருமணமான பிறகு குலசாமியை பார்த்ததும் நேரா கேப்டனை பார்க்க தான் வந்திருக்கோம். இந்த வாய்ப்பை தந்த அண்ணியாருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று ரொம்ப சந்தோஷமான நாள் ஏனென்றால் என்னுடைய அன்பு தம்பி சண்முகபாண்டியனின் பிறந்தநாள். அவருக்கு எங்களுடைய குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல அண்ணியார் எவ்வளவோ வேலைப்பளுவில் இருக்கிறார். ஆனாலும் நாங்கள் இங்கே வருகிறோம் என்று சொன்னதும் எங்களுக்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்தார்.
தமிழ் சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி விஜயகாந்த் போல இன்னொருவர் வரவே முடியாது. அவர் அவருடைய பிள்ளைகள் சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரனை எப்படி நினைக்கிறாரோ, அது போல தான் எல்லாரையும் நினைத்தார். என்னிடம் கூட உனக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் கேளு என்று சொல்லி இருந்தார். அதுபோல இனி ஒருவரை பார்க்க முடியாது என்றும் கேப்டன் எங்களுக்கு குலசாமி அவரை பார்க்க வந்திருக்கிறோம் என்றும் அங்கு செய்தியாளர்கள் சந்திப்பில் ரோபோ சங்கர் பேசியிருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications