ஆர்எஸ் சிவாஜி கடைசியாக உருக்கமாக பேசிய வீடியோ.. அன்றே கணித்து இருக்கிறாரே
சென்னை: நடிகர் ஆர் எஸ் சிவாஜி இன்று (செப்டம்பர் 2) அன்று காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாக சொல்லப்படுகிறது.
ஆர் எஸ் சிவாஜி பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், காமெடி கேரக்டர்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

அவருடைய மறைவிற்கு பல பிரபலங்களும் ரசிகர்களும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆர் எஸ் சிவாஜி கடைசியாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அது குறித்து பார்க்கலாம்.
நடிகர் ஆர்எஸ்எஸ் சிவாஜி பன்னீர் புஷ்பங்கள் என்ற திரைப்படத்தில் மூலம் நடிகராக அறிமுகமாகி பிறகு நடிகர் கமல்ஹாசனின் ஆஸ்த்தான நடிகரில் ஒருவராக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதுவும் விக்ரம் திரைப்படத்தில் தொடங்கி அபூர்வ சகோதரர்கள், சத்யா, மைக்கேல் மதன காமராஜர், குணா, உன்னைப்போல் ஒருவன் என பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் ஜனகராஜ் உடன் போலீஸ்சாக இவரும் நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற "தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க" என்று இவர் ஜனகராஜை புகழ்ந்து பேசும் வசனம் பெரிய அளவில் பிரபலமானது. அது மட்டுமல்லாமல் இப்போது உள்ள பல நடிகர்களோடும் ஆர் எஸ் சிவாஜி நடித்திருக்கிறார். நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா, சாய் பல்லவியுடன் கார்க்கி போன்ற பல முன்னணி நடிகைகளுக்கு அப்பாவாகவும் ,குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.
இவற்றையெல்லாம் விடவும் நடிகர் யோகி பாபுவின் நடிப்பில் நேற்று வெளியான லக்கி மேன் திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார். பழம்பெறும் துணை நடிகரும் தயாரிப்பாளர் சந்தானத்தின் மகனான இவர் நடிக்கரும், இயக்குனரமாக இருக்கும் சந்தான பாரதியின் உடன் பிறந்த சகோதரர்தான். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ஆர் எஸ் சிவாஜிக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசிய வீடியோ கிளிப்ஸ்கள் இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
அதில் எங்களைப் போன்ற சின்ன சின்ன நடிகர்கள் பலருக்கும் இது போன்ற பெரிய மேடைகளில் யாரும் விருது வழங்கி கௌரவிப்பது கிடையாது. இப்படி கௌரவிப்பது இனிவரும் காலத்திலும் தொடர வேண்டும். பல பெரிய நடிகர்களுக்கு மட்டும்தான் இங்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எங்களை போன்ற சின்ன சின்ன நடிகர்களும் திரைப்படத்தில் அதிகமாக உழைத்திருக்கோம்.
அவர்களுக்கானா அங்கீகாரம் பெரிய மேடைகளில் கிடைப்பதில்லை. ஆனால் இப்போது எனக்கு கிடைத்திருக்கும் இந்த அவார்டை என்னை முதன் முதலில் திரையில் அறிமுகப்படுத்திய இயக்குனருக்கும், என்னுடைய அம்மாவிற்கும் இதை சமர்ப்பிக்கிறேன் என்று கூறி இருக்கிறார். அதோடு தனக்கு உதவி செய்த பலருடைய பெயரையும் அந்த மேடையில் ஆர் எஸ் சிவாஜி கூறி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அன்பே சிவம் திரைப்படத்தில் ஆர்எஸ் சிவாஜி டூ டூ டூ என்கிற ஒரு டயலாக் சொல்லி இருப்பார். அது குறித்த அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த குரோஷி நீங்கள் இந்த டயலாக்கை பேசி அன்றே கணித்து விட்டீர்களா? இப்படி ஒரு படம் பிறகு வரப்போகிறது என்று, இப்போ நீங்கள் அன்று பேசிய டயலாக் தான் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் டூ டூட்டு டூ என்கிற பாடல் வெளியாகி இருந்தது தெரியுமா? என்று கேட்க, இது நான் கணிக்கவில்லை.
இதற்கு வசனம் எழுதியவர் தான் கணித்து எழுதி இருக்கிறார் என்று வெகுளியாக அந்த மேடையில் பேசியிருக்கிறார். இந்த நிலையில் இன்று இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். ஆர்எஸ்எஸ் சிவாஜி சினிமாவில் மட்டுமல்லாமல் குலவிளக்கு, எத்தனை கோணம் எத்தனை பார்வை, அன்புள்ள சினேகிதியே, மருதாணி, வல்லமை தாராயோ என்ற பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் இவர் வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications