கேன்சரால் பட்டப்பாடு.. கே. பாலச்சந்தர் இப்படி பண்ணுவார்னு நினைக்கல.. நடிகர் சாய்ராம் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்த பிரபலமான நடிகர் சாய்ராம் தன்னுடைய வாழ்க்கையில் தான் சந்தித்த சோகங்கள் மற்றும் தான் கடந்து வந்த பாதை குறித்து உருக்கமாக பேசி இருக்கிறார். அதில் தான் எவ்வளவு தான் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் கேன்சரால் பட்ட கஷ்டங்கள் பிறகு அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பது பற்றியும் பேசி இருக்கிறார்.

அதோடு இயக்குனர் கே பாலச்சந்தர் உடன் தனக்கு எப்படி உறவு இருந்தது என்பது பற்றியும் அவரை வைத்து தான் இயக்கியது குறித்தும் அந்த பேட்டியில் சாய்ராம் பேசி இருக்கிறார் அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

actor Sairam talked about how he recovered from cancer despite his popularity

அந்த வகையில் சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி அதில் நடிக்கும் நடிகர்கள் நிஜ வாழ்க்கை நாம் திரையில் பார்ப்பது போல அவ்வளவு எளிதாக இருப்பதில்லை என்பதை நடிகர் சாய்ராம் இப்போது வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். இவர் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்திருக்கிறார். அதிலும் கடைசியாக ஜீ தமிழில் ஒளிபரப்பான நீதானே என்தன் பொன்வசந்தம் என்ற சீரியலில் கதாநாயகியின் அப்பாவாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் சாய் ராமுக்கு கணையத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார். பிறகு அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வெளியே வந்திருக்கிறார். அது பற்றி ரசிகர்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் 2012ல் என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப மோசமான காலம். ஏன்னா எனக்கு அப்போதான் கணையத்தில் புற்றுநோய் இருக்கும் விஷயமே தெரியவந்தது.

அந்த விஷயம் தெரிஞ்சதும் என்னுடைய நண்பர்கள், மருத்துவர்கள் எல்லோருமே எனக்கு கொடுத்த ஊக்கத்தினால் தான் இன்னைக்கு நான் நல்லா இருக்கிறேன். அந்த சமயத்தில் நான் கிரியா யோகா ரெகுலரா பண்ணிக் கொண்டிருந்தேன். அதுவும் எனக்கு கொஞ்சம் மாறுதலை கொடுத்தது. இப்ப நான் கேன்சல் சர்வைவர் தான் ஆனால் கண்டிப்பாக நிம்மதியாக இருக்கிறேன் என்று சொல்லலாம்.

ஒரு சில வியாதிக்கு பெயர் சொன்னாலே மக்கள் பயப்படுற அளவுக்கு சிலர் பயமுறுத்தி வச்சிருக்காங்க. ஆனா உண்மையில் அப்படி எல்லாம் கிடையாது. சீக்கிரம் பிரச்சனை என்னன்னு தெரிந்து கொண்டால் அதை நாம் சரி பண்ணி விடலாம். புற்றுநோய் பாதிக்கப்படும் போது நான் 80 கிலோவில் இருந்தேன், பிறகு 40 கிலோவுக்கு வந்து விட்டேன். அதுபோல எனக்கு அந்த நேரத்தில் பக்கபலமாகவும் மோட்டிவேஷனல் கொடுத்தது என்னுடைய தோழியான நித்யா என்பவரும் தான்.

அது மட்டும் அல்லாமல் நான் என்னுடைய கேரியரை தொடங்கும் போது பாடகராகத்தான் தொடங்கினேன். ஒரு காலகட்டத்தில் கச்சேரியில் நான் ரொம்ப பிசியாக இருந்தேன். அப்ப எல்லாம் எனக்கு சினிமாவிலோ, சீரியலிலோ நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எல்லாம் கிடையாது. அதற்கு பிறகு நடிகர் பாஸ்கி என்னுடைய பிரண்டு. அவர் மூலமாக சீரியல் வாய்ப்புகள் வர சரி நடித்து தான் பார்ப்போமே என்று தான் நானும் சின்னத்திரையில் வந்தேன்.

அந்த காலகட்டத்தில் எனக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை என்பதால் அந்த நாளில் மட்டும் சூட்டிங் இருக்கிற மாதிரி சீரியல் டீம் செய்தார்கள். அதுபோல கே. பாலச்சந்திரன் சார் எனக்கு தேய்வம் மாதிரி. அவருடைய இயக்கத்தில் எல்லாம் நான் நடிப்பேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. ஆனால் அதுவும் எனக்கு ஒரு முறை கிடைச்சிடுச்சு. நினைத்தாலே இனிக்கும் என்ற நிகழ்ச்சியை அவரை வைத்து நான் தனியா பண்ணுனேன். அது எனக்கு ஆஸ்கார் அவார்டு கிடைச்ச மாதிரி சந்தோஷமா இருந்துச்சு என்று உருக்கமாக சாய்ராம் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+