விஜய்க்கும் எனக்கும் இதனால் தான் சண்டை வந்தது! கோபத்தில் கேட்ட அந்த வார்த்தை..நடிகர் சஞ்சீவ் எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சஞ்சீவ் நடிகர் விஜயின் நெருங்கிய நண்பராக இருக்கும் நிலையில் தனக்கும் தன்னுடைய நண்பர் விஜய்க்கும் எதனால் சண்டை ஏற்பட்டது என்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் சஞ்சீவ் சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய நண்பர் விஜய் தன்னுடைய நண்பர்கள் அனைவரும் முன்பும் தன்னிடம் காட்டிய கோபம் இப்போதும் என்னால் மறக்க முடியாது என்று உருக்கமாக பேசியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Actor Sanjeev open up friend Actor Vijay had a fight

அந்த வகையில் நடிகர் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் நிலையில் அவர் இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று கூறியிருக்கும் நிலையில் இது அவருடைய ரசிகர்களை அதிகமாக பாதித்திருக்கிறது. தொடர்ச்சியாக விஜய் சினிமாக்களிலும் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

ஆனால் அது குறித்து உறுதியாக எந்த தகவலையும் விஜய் தெரிவிக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பராக இருக்கும் சஞ்சீவ் விஜய் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் எனக்கும் விஜய்க்கும் நடந்த சண்டையை மறக்கவே முடியாது. ஏன்னா ஒருநாள் நாங்க பிரண்ட்ஸ் எல்லாரும் சந்தித்து இருந்தோம்.

பொதுவா நாங்க அடிக்கடி சந்திக்கிறது கிடையாது. ஆரம்பத்தில் அடிக்கடி சந்தித்தோம் ஆனால் இப்போ எல்லாரும் அவங்க அவங்க வேலையில் பிஸியாக இருப்பதால் எப்பவாவது ஒருமுறை சந்திப்போம். அப்படி ஒரு முறை சந்தித்து இருக்கும்போது விஜய் என்னிடம் நீ என்னடா எப்ப பார்த்தாலும் என்னை இமிடெட் பண்ற, உன்னோட ஸ்டைலில் நீ நடி. நான் திரையில் வருஷத்துக்கு ஒரு முறையோ ரெண்டு முறையோ தான் வருகிறேன்.

ஆனால் நீ சீரியல் மூலமா அடிக்கடி திரையில் வருகிற அப்போதும் நீ என்ன மாதிரியே சிரிக்கிற, என்னை மாதிரியே பேசுற, இத கொஞ்சம் குறைச்சுக்க... மக்களுக்கு நீ என்னை மாதிரி பண்ணுறியா அல்லது நான் உன்னை மாதிரி பண்ணுறனா என்று சந்தேகம் வந்துவிடும் என்று சொன்னான். அதற்கு நான் கோபப்பட்டு விட்டேன். நானும் விஜய்யும் 25 வருடங்களாக நண்பர்களாக இருக்கிறோம்.

போதுவா ஒருத்தங்களை பிடித்துவிட்டால் அவர்களை மாதிரி இயல்பா சில விஷயங்கள் நமக்கு வந்துவிடும். அந்த மாதிரி தான் எனக்கு வந்திருக்கிறது. தவிர நான் விஜய்யை போலவே செய்ய வேண்டும் என்று எந்த இடத்திலும் நினைத்து செய்தது கிடையாது. ஆனால் நான் கோபப்பட்டதும் விஜய் அன்று டக் என்று கோபத்தில் சரி நான் போறேன் என்று கிளம்பி போய் விட்டார். அது எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது.

விஜய்க்கு கோபம் வந்தால் எதுவுமே பேச மாட்டான். அந்த இடத்தில் இருந்து டக்கென்று கிளம்பி போய்விடுவான். அது அவனுடைய இயல்பு. பிறகு சில வருடங்களா நாங்க பேசவே இல்ல. அப்புறமாதான் பேசிக்கிட்டோம் என்று அந்த பேட்டியில் சஞ்சீவ் பேசி இருக்கிறார். ஏற்கனவே நடிகர் சஞ்சீவ் சீரியல்களில் நடிக்கும் பொழுதாக இருந்தாலும் சரி எந்த இடத்தில் பேசுவதாக இருந்தாலும் சரி விஜய் போலவே காப்பி அடிக்கிறாரே என்று பலர் கலாய்த்து வருகிறார்கள்.

அதன் காரணமாகவே கூட விஜய் தன்னுடைய நண்பரிடம் வெளிப்படையாக என்னை மாதிரி நீ செய்யாதே என்று வார்னிங் கொடுத்து இருக்கலாம். ஆனால் அதை நடிகர் சஞ்சீவ் இயல்பாக எடுத்துக் கொண்டதும் இவர்களுடைய நட்புக்கு சான்று தான். ஆனால் இது இணையத்தில் இப்போது வைரலாகி வரும் நிலையில் சஞ்சீவ்வை அதிகமாக ரசிகர்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

அதோடு அவர் இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் முக்கியமான கேரக்டரில்
போலீசாக நடித்து வரும் நிலையிலும் இவர் விஜயை போலவே காப்பி அடித்துக் கொண்டிருக்கிறாரே என்று ரசிகர்கள் கலாய்ப்பதை பார்க்க முடிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+