நண்பனுக்காக நடு ரோட்டில் ரவுடிகளிடம் அடி வாங்கிய நடிகர் சஞ்சீவ்.. ரத்தம் சொட்ட போலீஸ் கம்ப்ளைன்ட்
சென்னை: சீரியல் நடிகர் சஞ்சீவ் தன்னுடைய நண்பர் சீரியல் நடிகர் ஸ்ரீ குமாருக்காக அடி வாங்கியது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வானத்தைப்போல சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் ஸ்ரீ குமாரும் நடிகர் சஞ்சீவ்வும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ஸ்ரீகுமாரை சில மர்ம நபர்கள் ஆயுதங்களால் தாக்கும் போது அதைக் கேள்விப்பட்ட நடிகர் சஞ்சீவ் வந்து தடுத்து அவர்களோடு சண்டை இட்டு இருக்கிறார். அப்போது உடம்பெல்லாம் அடிபட்டு இருவரும் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தது குறித்து நடிகர் ஸ்ரீ சமீபத்தில் பேட்டியில் பேசி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது நடிகர் சஞ்சீவ் நடிகர் விஜய்யை காப்பி அடித்து மேனலிசம் காட்டிக் கொண்டிருக்கிறார் என்று அதிகமான நெட்டிசன்கள் அவரை கலாய்த்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதைப் பற்றி கண்டுகொள்ளாத சஞ்சீவ் தன்னுடைய அடுத்தடுத்த வேலைகளில் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் வீரசிங்கம் என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து இப்போது சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் லட்சுமி என்ற சீரியலிலும் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படியான நிலையில் நடிகர் சஞ்சீவ் மற்றும் சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் இருவரும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கின்றனர். அப்போது ஸ்ரீகுமார் சஞ்சீவ் பற்றி பல விஷயங்களை வெளிப்படையாக பேசுகிறார்.
அதில் நானும் சஞ்சீவும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். நானும் சஞ்சீவும் மட்டுமல்லாமல் என்னுடைய அக்காவும் அவருடைய அக்காவும், என்னுடைய அம்மாவும் அவனுடைய அம்மாவும், என்னுடைய அப்பாவும் அவருடைய அப்பாவும் என்று எங்கள் இருவருடைய குடும்பமும் நண்பர்கள். அதனால் நாங்கள் எப்போதும் ஒன்றாக தான் சுற்றிக் கொண்டிருப்போம். அதுவும் காலேஜ் படிக்கிற வாலிப வயதில் நாங்கள் ஒன்றாக சுற்றிக் கொகொண்டிருக்கும்போது நடந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியாது என்று ஸ்ரீ பேசி இருக்கிறார்.
அதாவது ஒருமுறை என்னை சில அடியாட்கள் அடிக்க சுற்று போட்டு விட்டார்கள். நான் ஒரு ஆளாக இருந்தேன். ஆனால் அவர்கள் அங்கு 20க்கும் மேற்பட்டோர் இருந்தனர் எல்லோரும் சுற்றி என்னை தாக்க தொடங்கி விட்டார்கள். ஒரு ஆளுக்கு ஒரு ஆள் அல்லது ரெண்டு ஆளு என்றால் தாக்குபிடிக்கலாம். 20 ஆள் என்றால் எப்படி தாக்கு பிடிக்க முடியும். நான் முடிந்த வரைக்கும் போராடிக் கொண்டிருந்தேன். அப்போது இந்த விஷயம் சஞ்சீவுக்கு தெரிய வந்திருக்கிறது.
நடு ரோட்டில் நான் சண்டையிட்டு கொண்டிருப்பதை பார்த்து ஓடி வந்த சஞ்சீவ் அவர்களிடம் சண்டை இட்டான் அப்போது இருவருக்குமே அதிகமாக அடிபட்டுவிட்டது. அவர்கள் அருவாள் கம்பு என்று எல்லாம் வைத்திருந்தார்கள். எங்களிடம் எதுவும் கிடையாது அங்கிருந்தவர்கள் எல்லாரும் சூழ்ந்ததும் அந்த ரவுடிகள் ஓடி விட்டார்கள். அதற்கு பிறகு நாங்கள் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தோம் என்று அந்த பேட்டியில் தன்னுடைய நண்பன் பற்றி பேசி இருக்கிறார்.
அதுபோல பள்ளி படிக்கிற வரைக்கும் சஞ்சீவ் மற்றும் ஸ்ரீ இருவரும் ஒன்றாக படித்திருக்கிறார்கள். ஆனால் சஞ்சீவ் நன்றாக படிக்கிற பையனாம் ஆனால் ஸ்ரீ கடைசி பெஞ்சு பையனாம். ஆனாலும் இவர்கள் இருவருடைய நட்பு மட்டும் தொடர்ந்து இருக்கிறது. அதுபோல சஞ்சீவ்க்கு கல்லூரியில் தான் விஜய்யின் நட்பு கிடைத்திருக்கிறது. நடிகர் விஜய்யோடு கல்லூரியில் ஒன்றாக படித்தது கொஞ்ச நாட்கள் என்றாலும் இப்ப வரைக்கும் இவர்கள் இருவருடைய நட்பும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று சஞ்சீவ் பல பேட்டிகளில் பேசியிருக்கிறார்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய்யின் 'நவீன் பட்நாயக் மாடல்' ஆட்சி.. அதிகாரிகளுக்கு தரப்பட்ட ஃப்ரீ ஹேண்ட்.. இதுதான் இனி ஸ்டைல்! -
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு -
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
Mayor பிரியா - தவெக MLA பல்லவி மோதல்.. மேயர் vs எம்எல்ஏவில் பெரியவர் யார்? சட்டம் சொல்வது என்ன? -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய்












Click it and Unblock the Notifications