நான் பெருமாளை கிண்டல் செய்வேனா? சர்ச்சை பாடலுக்கு நடிகர் சந்தானம் கொடுத்த விளக்கம்
சென்னை: நடிகர் ஆர்யாவின் தயாரிப்பில் நடிகர் சந்தானம் நடித்த டிடி நெஸ்ட் லெவல் திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் கோவிந்தா கோவிந்தா என்ற ஒரு பாடல் இருக்கிறது. இது இந்துக்களின் மனதை கஷ்டப்படுத்துவதாக சிலர் புகார் கொடுத்து இருக்கின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் சந்தானம் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சந்தானத்தின் டெவில் டபுள் நெக்ஸ்ட் லெவல் (டிடி நெஸ்ட் லெவல்) திரைப்படத்தில் கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவன் மேனன், நிழல்கள் ரவி, ராஜேந்திரன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் வரும் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் பிரமோஷனில் நடிகர் சந்தானம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

டிடி நெஸ்ட் லெவல் பாடல்
இந்த படத்திற்கு ஆரோ என்பவர் இசையமைத்துள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் கிசா 47 பாடல் சிலருடைய எதிர்ப்பை சந்தித்து இருக்கிறது. பாடலின் முதல் வரிகள் சீனிவாச கோவிந்தா.. ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா.. என்று ஆரம்பித்த நிலையில் இந்த வரிகள் பெருமாளை கிண்டல் செய்யும் வகையில் இருக்கிறது என்று வழக்கறிஞர்கள் புகார் கொடுத்து இருக்கிறார்கள்.
நடிகர் சந்தானம் விளக்கம்
இதுகுறித்து நடிகர் சந்தானம் பேசும்போது அது கிண்டல் கிடையாது. பாடலை பார்க்கிறவங்க இது சரியில்லை அது சரியில்லை என நிறைய சொல்லுவாங்க. அவங்க சொல்றதை எடுத்துக் கொள்ள முடியாது. அப்படி வாழவும் முடியாது. நீதிமன்றம் என்ன சொல்கிறது, சென்சார் போர்டு என்ன சொல்கிறது இதை வைத்துதான் தமிழ் சினிமாவில் எதுவாக இருந்தாலும் பண்ண முடியும். போற வர்றவங்க சொல்றதை எல்லாம் செய்ய முடியாது.
சர்ச்சை பாடல்
வருஷா வருஷம் ஒரு படம் ரிலீஸ் ஆகும்போது திருப்பதிக்கு நான் செல்வேன். இந்த முறையும் போனேன். நான் பெருமாளுடைய பக்தன் அவருடைய பாட்டு முதலில் வரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை அதற்காகத்தான் பாடலை வைத்திருக்கிறேன். வேறு எதற்காகவும் இல்லை. நான் கடவுள் நம்பிக்கை உடையவன் அதனால் நான் கடவுளை கிண்டல் செய்ய மாட்டேன் என்பது எல்லாருக்குமே தெரியும்.
கோவிந்தா கோவிந்தா பாடல்
அந்த பாடல் என்னுடைய மன திருப்திக்காக வைத்தது. அதுவும் சரியான முறையில் தான் அந்த பாடலை பயன்படுத்தி இருக்கிறோம் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அதுபோல சிம்பு என் நண்பர் என்பதால் அவர் படத்தில் காமெடியனாக நடிக்கிறேன். அதுபோல் என்னை உதயநிதி அழைத்து சில விஷயங்களை கேட்டால் அவருக்காக வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்வேன் என்று கூறியிருக்கிறார்.

ஆர்யா பற்றி சந்தானம்
அதுபோல் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும் தன்னுடைய நண்பருமான ஆர்யா பற்றி பேசும்போது நானும் ஆர்யாவும் எப்போதும் தொடர்பில் இருப்போம். நான் ஒரு நாள் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது நீ காமெடியனாக இருக்கும் போது ஜாலியா இருப்ப, இப்பெல்லாம் அந்தப் ஃபன் இல்லையே என்று ஜாலியா கேட்டார். அதற்கு நான் எனக்கு இருக்கும் சில பிரச்சனைகள் குறித்து பேசிக் கொண்டிருந்தேன்.
டிடி நெஸ்ட் லெவல் உருவான விதம்
அப்போது அவர் டிடி நெஸ்ட் லெவல் படத்தில் முழுவதுமாக இறங்கி வேலை செய். பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னான். அப்படித்தான் இந்த படத்தை ஆரம்பித்து முடித்தோம். ஒரு நல்ல கதை திரைக்கதையை காமெடி ஆக்க்ஷன் என எல்லாம் இதில் இருக்கிறது. இந்த திரைப்படத்தில் இயக்குனர் பிரேம் தமிழ் சினிமா உலகில் கிறிஸ்டோபர் நோலன் என்று சொல்வேன். அவர் பண்ணும் கதை பல இளைஞர்களை கவரும். இந்த படத்தை அப்படித்தான் அற்புதமாக உருவாக்கி உள்ளார் என்று சந்தானம் கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications