வீட்ல ராதிகாவுக்கும் மகனுக்கும் பிரச்சனை இருக்கு! ஆனால்.. குடும்ப ரகசியத்தை உடைத்த சரத்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகராகவும், அரசியல் பிரமுகராகவும் இருக்கும் சரத்குமாரை பார்த்தும் 90ஸ் கிட்ஸ்கள் மட்டுமல்லாமல் இப்போது உள்ள 2கே கிட்ஸ்களும் இவருக்கு வயசே ஆகாதா என்ற கேள்வியை தான் முதலில் கேட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு பார்ப்பவர்களை வியக்க வைக்கும் சரத்குமார் தன்னுடைய குடும்ப வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது சரத்குமார் நடிகை ராதிகாவை திருமணம் செய்திருந்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு ராகுல் என்ற ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் முதல் முறையாக தன்னுடைய மகன் குறித்தும் அவரோடு தங்களுக்கு உள்ள உறவு குறித்தும் சரத்குமார் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

Actor Sarathkumar broke the family secret Radhika and her son have a problem

தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என்ற பட்டத்தோடு பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம் வரும் சரத்குமார் 90ஸ் காலகட்டத்தில் கதாநாயகனாக தன்னுடைய பயணத்தை தொடங்கி இப்ப வரைக்கும் கதாநாயகனாகவும், குணசித்திர வேடங்களிலும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மிரள வைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் தன்னுடைய குடும்ப வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அந்த பேட்டியில் சரத்குமாரிடம் நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த கோபிநாத் பல கேள்விகளை கேட்டிருக்கிறார். அதில் உங்களுடைய மகன் பற்றி சொல்லுங்கள் என்று கேள்வி கேட்க, அதற்கு என்னுடைய மகன் இப்போது 19 வயதில் இருப்பதால் அவரிடம் நாம எதையும் பார்த்து தான் பழக வேண்டியது இருக்கு.

Actor Sarathkumar broke the family secret Radhika and her son have a problem

வீட்டில் ராதிகாவுக்கும் மகனுக்கும் அடிக்கடி சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். ராதிகா எப்போதும் பார்த்தீங்களா நான் சொல்றதை அவன் கேட்கல என்று சொல்வார். ஆனால் நானும் என்னுடைய மகனும் எப்போதும் ஃப்ரெண்ட் போல தான் இருக்கிறோம். அவர் என்கிட்ட எந்த விஷயத்தையும் மறைக்க மாட்டார் என்று நான் நம்புறேன்... அவர் இப்ப உள்ள ஜெனரேஷன் என்பதால் நிறைய விஷயங்களை கற்று வைத்து இருக்கிறார்.

Actor Sarathkumar broke the family secret Radhika and her son have a problem

இணையத்தில் தொடங்கி எல்லா விஷயங்களும் அவருக்கு தெரியும் என்று சொல்ற மாதிரி தான் அவருடைய செயல்பாடுகள் இருக்கும். நாம எந்த ஒரு விஷயத்தையும் அவரிடம் பேசும் போதும் அதற்கு சில தீர்வுகளையும் அவர் எதார்த்தமாக பேசுவதை பார்த்து நான் வியந்து போய் இருக்கிறேன். எனக்கு என்னுடைய அப்பா தான் எப்போதும் ஹீரோ... என்னுடைய அப்பாவிடம் நான் பேசும் போது அவ்வளவு பயந்து பயந்து பேசுவேன். ஆனால் என்னுடைய மகன் அப்படி இல்லை.

என்னிடம் அவர் ரொம்பவும் ஃப்ரெண்ட்லியாக இருக்கிறார். சில நேரங்களில் நானும் என்னுடைய மகனும் பேசிக்கொள்வதை பார்த்து கூட ராதிகா செல்லமாக கோபப்பட்டு இருக்கிறார் என்று அந்த வீடியோவில் சரத்குமார் பேசியிருக்கிறார். ஏற்கனவே சரத் குமாருக்கு 1984 ஆம் ஆண்டு சாயாதேவி என்பவரோடு திருமணம் முடிந்திருந்த நிலையில் சரத்குமாருக்கும் சாயாதேவிக்கும் பிறந்த மகள்தான் வரலட்சுமி

Actor Sarathkumar broke the family secret Radhika and her son have a problem

நடிகை வரலட்சுமி மட்டுமல்லாமல் அவருக்கு பூஜா என்ற இன்னொரு மகளும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சாயா தேவியை சரத்குமார் விவாகரத்து செய்த பிறகு 2001 ஆம் ஆண்டு ராதிகாவை சரத்குமார் திருமணம் செய்து இருந்த நிலையில் இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் வெளிநாட்டில் படித்து வரும் ராகுலோடு அடிக்கடி ராதிகா புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+