ராதிகாவுக்கும், வரலட்சுமிக்கும் பிரச்சனை.. ஆனால் முதல் மனைவி! முதல் முறை மனம் திறந்த சரத்குமார்
சென்னை: நடிகர் சரத்குமார் தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் தன்னுடைய முதல் மனைவி குறித்து பல வருடங்கள் கழித்து பல தகவல்களை சரத்குமார் பேசியிருக்கிறார். அதோடு வரலட்சுமி மற்றும் ராதிகாவுக்கு இடையே ஏற்பட்ட சின்ன சின்ன பிரச்சனைகள் குறித்தும் பேசி இருக்கிறார்.
சரத்குமார் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து இருந்த நிலையில் தற்போது தன்னுடைய குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது பற்றி சரத்குமார் வெளிப்படையாக பேசி இருக்கும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என்ற பட்டத்தோடு பல ஆண்டுகால முன்னணி நடிகராக சரத்குமார் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் 90ஸ் கிட்ஸ்களில் பேவரைட் கதாநாயகனாக தன்னுடைய பயணத்தை தொடங்கி இப்ப வரைக்கும் கதாநாயகனாகவும் குணசித்திர வேடங்களிலும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார்.
அதோடு இவருக்கு வயது ஆனாலும் இவருடைய இளமை மட்டும் குறைய வில்லையே என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருவதால், சமீபத்தில் கூட சரத்குமார் தான் 150 வருடங்கள் இளமையோடு இருப்பேன். அதற்கான ரகசியத்தை சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் என்னை தேர்தலில் ஜெயிக்க வைத்து முதல்வர் ஆக்குங்கள் என்று பேசி இருந்ததும் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு இப்போது தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் தன்னுடைய குடும்ப வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். 1984 ஆம் ஆண்டு சாயாதேவி என்பவரை திருமணம் செய்து கொண்ட சரத் குமாருக்கும் சாயா தேவிக்கும் பிறந்த மகள் தான் வரலட்சுமி வரலட்சுமி. வரலட்சுமி மட்டுமல்லாமல் அவருக்கு பூஜா என்ற இன்னொரு மகளும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களுடைய திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் பிறகு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து இருந்த நிலையில் 2000ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து விட்டனர். அதற்குப் பிறகு சாயாதேவி தன்னுடைய மகள்களோடு தனியாக வசித்து வருகிறார்.
சரத்குமார் நடிகை ராதிகாவை 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் சரத்குமார் இப்போது கொடுத்த பேட்டியில் தன்னுடைய முதல் மனைவி குறித்தும் வரலட்சுமி குறித்தும் பேசியிருக்கிறார். அதில் உண்மையில் கடவுள் எங்கள் குடும்பத்தின் மீது கருணையாக இருக்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன்.

ஏன்னா வரலட்சுமியின் அம்மாவை நான் விவாகரத்து செய்த பிறகும் அவர் எங்களோடு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். அதுபோல வரலட்சுமி இடமும் நீ உன் அப்பாவிடம் பேசக்கூடாது என்றெல்லாம் அவர் தடுத்துதே கிடையாது.
சில காரணங்களால் எங்களுக்குள்ளான பாதைகளை நாங்கள் தனித்தனியாக தேர்ந்தெடுத்து போய்க் கொண்டிருக்கிறோம்.
மற்றபடி எங்களுக்குள்ள எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. நாங்கள் இப்போ நல்ல நண்பர்களாக தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அது போல என்னுடைய முதல் மனைவி, என்னுடைய குழந்தைகளும் இப்போது ராதிகாவோடு சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள். அதை பார்ப்பதற்கு எனது சந்தோஷமாகத்தான் இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் ஆரம்பத்தில் வரலட்சுமியும் ராதிகாவும் பழகும் போது சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது இருவரும் புரிந்து கொண்டார்கள் நண்பர்களாக மாறிவிட்டார்கள் என்று சரத்குமார் கூறி இருக்கிறார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications