அஜித் நேரா வீட்டுக்கே வந்துட்டாரு.. கோபமா கேட்ட அந்த கேள்வி.. பழைய பிரச்சனையை உடைத்த சரத்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சரத்குமார் 90ஸ் காலகட்டத்தில் தொடங்கி இப்ப வரைக்கும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுபோல அஜித்தும் ஆரம்பத்தில் பல போராட்டங்களுக்குப் பிறகு கதாநாயகனாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி இப்போது யாரும் எதிர்பார்க்காத இடத்தில் இருக்கிறார்.

அதோடு அஜித் குமாருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அஜித் குமார் நடிகராக மட்டுமல்லாமல் கார் ரேஸ், பைக் ரேஸ், ரைபில் சுடுதல், ட்ரோன் பயிற்சியாளர் என பல்வேறு திறமைகளை கொண்ட ஒரு அற்புத கலைஞர் ஆக இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் இவர் நடிகர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர் என்று அனைவரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Actor Sarathkumar has spoken about actor Ajith fight

அதற்கு காரணம் அஜித் மற்ற நடிகர்கள் போல கலை நிகழ்ச்சிகளிலும் திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை இது தனக்கு பிடிக்கவில்லை என்று வெளிப்படையாகவே அஜித் சொல்லி இருக்கிறார். இந்த நிலையில்தான் நடிகர் அஜித் குறித்து நடிகர் சரத்குமார் சில தகவல்களை பேசி இருக்கிறார். அதுதான் இப்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

சரத்குமார் தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். அதில் அஜித் குமார் பற்றி அவரிடம் கேள்வி கேட்டபோது அஜித்குமார் எனக்கு ரொம்பவே பிடித்த நபர். அவர் ஒரு வித்தியாசமான கேரக்டர் உள்ளவர். ஆரம்பத்தில் அஜித் குமாருக்கு ராதிகா ரொம்பவே ஹெல்ப் பண்ணிருக்காங்க. அதை பற்றி அஜித்குமாரே என்னிடம் பெருமையாக பேசி இருக்கிறார்.

அதுபோல அஜித்குமாருக்கு ஏதாவது குழப்பம் இருந்தால் எனக்கு போன் பண்ணி நீங்க எங்க இருக்கீங்கன்னு கேப்பாரு. நான் வீட்லதான் இருக்கேன்னு சொன்னா உங்களை நேர்ல பாக்கணும்னு சொல்லுவாரு. நானும் வாங்கன்னு சொன்னதும் அவரே நேரா என் வீட்டுக்கே வந்திடுவாரு. வீட்டில் இருந்து அவருடைய குழப்பத்தை என்னிடம் பேசுவார் நானும் என்னுடைய அனுபவத்தை சொல்லி இருக்கிறேன்.

அப்படி பலமுறை நடந்திருக்கு. ஆனால் ஒருமுறை திடீர்னு ஒரு நாள் எனக்கு போன் பண்ணுனாரு. நானும் என்ன என்று விசாரிக்கும் போது தான் என்னுடைய படத்திற்கு உங்க கட்சியில் இருந்து ஒருவர் போராட்டம் பண்ணுறாரு. உங்க கட்சியில் உள்ளவர் என்றால் நீங்களும் அதற்கு உடந்தையா என்று என்னிடம் கேட்டார். நான் அதற்கு நீங்க சொல்ற அந்த நபர் என்னுடைய கட்சியிலேயே இப்போ இல்லையே, அவரை நான் அப்பவே தூக்கிட்டேன் என்று சொன்னேன் என்று அந்த பேட்டியில் தனக்கும் அஜித்குமாருக்கும் ஏற்பட்ட மனகசப்பு குறித்து வெளிப்படையாக சரத்குமார் பேசியிருக்கிறார்.

அதுபோல சரத்குமார் விஜய்க்கும் நெருங்கிய நண்பராக இருக்கிறார். விஜய்யோடு தலைவா திரைப்படத்தில் அவர் நடித்த பிறகு விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லி இருந்ததும் பெரிய அளவில் பிரச்சனையை ஏற்படுத்தியது. சரத்குமார் போகிற போக்கில் விஜயை குறித்து சூப்பர் ஸ்டார் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். அவர் மனதில் தோன்றியதை சொல்லி இருந்தாலும் சூப்பர் ஸ்டார் பட்டத்தோடு இருக்கும் ரஜினிகாந்தின் ரசிகர்கள் பெரிய அளவில் விஜய் மீது கோபப்பட்டனர்.

அதோடு அந்த நேரத்தில் சரத்குமார் மீதும் ரஜினியின் ரசிகர்கள் தங்களுடைய கோபத்தை இணையத்தில் தெரிவித்து வந்தனர். ஆனால் அது குறித்த விளக்கத்தை சரத்குமார் ரஜினிகாந்திடமே கூறி இருந்தாராம். அதற்கு ரஜினிகாந்த்தும் நான் எதுவும் தப்பாக நினைக்கவில்லை என்று சொன்னதாகவும் சரத்குமார் பேசியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+