கண்ணு முன்னாடி சாவை பார்த்தேன்.. கே.எஸ் ரவிக்குமாரால் வந்த வினை.. சரத்குமார் சொன்ன பகீர்
சென்னை: நடிகர் சரத்குமார் தனக்கு சமுத்திரம் திரைப்படம் சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் கர்நாடகாவில் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தன்னை சுற்றி 2000 பேர் அருவால், கம்போடு வந்து இருந்த நிலையில் தான் எப்படி அங்கிருந்து தப்பித்து உயிரோடு வெளியே வந்தேன் என்பது பற்றிய திகில் அனுபவத்தை அந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
சமுத்திரம் திரைப்படத்தில் கர்நாடகாவில் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கே எஸ் ரவிக்குமாருக்கு அங்கிருந்த ஒரு சிலரிடம் ஏற்பட்ட தகராறால் ஏற்பட்ட பிரச்சினையால் தன்னுடைய குடும்பத்தினர் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்பது பற்றியும் அதில் சரத்குமார் பேசியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

நடிகர் சரத்குமாருக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. 90ஸ் காலகட்டத்தில் தொடங்கி இப்ப வரைக்கும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சரத்குமார் அரசியல் பிரமுகராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் பிரபல சேனல் ஒன்றில் பேட்டி அளித்து கொண்டிருக்கிறார். அதில் நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த கோபிநாத் தான் அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து சரத்குமார் இடம் கேள்வி கேட்டிருக்கிறார்.
டாப் 10 தமிழ் சீரியல்கள்: கடைசிக்கு வந்த முக்கிய சீரியல்.. முன்னேறிய விஜய் டிவி பிரபல சீரியல்
அப்போது சரத்குமார் பேசிக் கொண்டிருக்கையில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த இக்கட்டான சூழ்நிலை குறித்து அதில் பேசியிருக்கிறார். அதாவது தனக்கு சமுத்திரம் திரைப்படத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் மறக்க முடியாத ஒரு அனுபவம் நடந்தது, என்னுடைய வாழ்க்கையில் அது இப்போது நினைத்தாலும் திகில் அனுபவம் தான் என்று சொல்லி இருக்கிறார்.
அந்த அளவிற்கு சரத்குமார் சொல்வதற்கு காரணம் இருக்கிறது.. அதாவது சும்மாவே சொல்வார்கள் மரண பயத்தை காட்டிட்டாங்கங்கனு அந்த மாதிரி ஒரு மரண பயத்தை தாண்டி தான் சரத்குமார் வந்திருக்கிறார். என்னன்னா ஒருமுறை சரத்குமார் சமுத்திரம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது கர்நாடகாவில் வைத்து சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்திருக்கிறது. அந்த சூட்டிங் ஸ்பாட்க்கு வரலட்சுமியும் அவருடைய சகோதரியும் சூட்டிங் பார்ப்பதற்காக சென்றிருந்தார்களாம்.
அப்போது குட்டியான உடையோடு வரலட்சுமியும் அவருடைய தங்கையும் சுற்றிக் கொண்டிருக்க அதை பார்த்து சரத்குமாருக்கு ஏதோ இது சரிப்பட்டு வராது என்கிற மாதிரி தோன்றுகிறது. உடனே நான் சூட்டிங் முடிச்சுட்டு வரேன் நீங்க அதுவரைக்கும் வெளியே வர வேண்டாம் காரில் இருங்க என்று காரில் இருக்க வைத்திருக்கிறார். பிறகு சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் கேஎஸ் ரவிக்குமார் சரத்குமாரை தாண்டி விறுவிறுவென்று வேகமாக பின்னாடி போயிருக்கிறார்.
அங்கு பின்னாடி டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த ஒரு மூன்று நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். திடீர்னு அவர்களை கே எஸ் ரவிக்குமார் அடித்ததும் அங்கிருந்த 150 பேரும் சேர்ந்து அந்த மூன்று பேரை அடித்திருக்கிறார்கள். அப்போது என்ன பிரச்சனை என்று சரத்குமாருக்கு தெரியாதாம். பிறகு சரத்குமார் சென்று அங்கு தடுத்து நிறுத்தி எதற்காக இப்படி அடிக்கிறீங்கன்னு பேசிட்டு இருந்திருக்கிறார்.
அதற்குள்ள அந்த ஊர்க்காரங்களுக்கு சம்பவம் தெரிஞ்சு இருக்கிறது. கர்நாடககாரனை தமிழர்கள் வந்து கொன்னு போட்டுட்டாங்க என்ற மாதிரி செய்தி ஊருக்குள்ள பரவி விட்டதாம். உடனே கர்நாடகக்காரர்கள் இவர்கள் சூட்டிங் ஸ்பாட்டை மொத்தமும் சுற்று போட தொடங்கி விட்டார்களாம். இவர்கள் சூட்டிங் நடந்து கொண்டு இருந்ததே ஒரு குறிப்பிட்ட கிராமம் தானாம்.
அந்த கிராமத்திலிருந்து மெயின் ரோட்டுக்கு போவதற்கு ஒரே பாதை மட்டும் தானாம். அந்த பாதையில் தான் போக வேண்டுமாம் ஆனால் கர்நாடகக்காரர்கள் எல்லோரும் அந்த பாதையை மறைத்து விட்டார்களாம். என்ன நடந்தது என்று யோசித்து முடிவதற்குள் இவர்களுடைய கார்களை கூட அங்கு கமத்தி போட்டு கலவரம் பண்ணி விட்டார்களாம். உடனே இதை எப்படியாவது சமாளிக்க வேண்டும் என்று சரத்குமார் அவர்களிடம் கன்னடத்தில் பேசி இருக்கிறார்.
என்னுடைய குழந்தைகள் மனைவியை நான் இங்கிருந்து அனுப்பி வைக்கிறேன். பிறகு உங்களிடம் பேசுகிறேன் என்று சொல்லி இருக்கிறார். முதலில் அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லையாம். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் அருவால், கம்பி, கத்தியோடு இவர்களை சுற்றி வந்திருக்கிறார்கள்.
பிறகு அந்த இடத்தில் நம்முடைய உடல் பலத்தையோ திமிரோ காட்டக்கூடாது என்று அடிபணிந்து தான் நாங்கள் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தோம்.
அவர்கள் ஒரு கட்டத்தில் சரி என்று சம்மதித்த பிறகு அங்கு இருந்த மணிவண்ணன் உட்பட எல்லா நடிகர் நடிகைகள் குழந்தைகள் என எல்லாரையும் அனுப்பி வைத்துவிட்டு பிறகு நடந்த விஷயத்தை சொல்லி அவர்களுக்கு புரிய வைத்து அங்கிருந்து கிளம்பி வெளியே வந்தோம் என்று அந்த திகில் கதையை சரத்குமார் சொல்லி இருக்கிறார்.
அதோடு ஒரு இடத்தில் நாம் கோபமாக இருந்தாலும் எப்படி காட்டணும் என்கிற ஒரு வரைமுறை இருக்கு. என்ன ஏதுன்னு தெரியாம நம்ம காட்டிட்டா பிறகு பெரிய அளவில் பின் விளைவுகள் வரும் என்பதற்கு எனக்கு அந்த ஒரு சம்பவம் மறக்க முடியாது என்று சரத்குமார் பேசியிருக்கிறார்.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications