சின்னத்திரையில் சரத்குமாரின் அக்கா.. என் கணவர் இறந்த பிறகு தம்பி செய்த செயல்.. எமோஷனலான வார்த்தை
சென்னை: நடிகர் சரத்குமாரின் அக்கா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மகா சங்கத்தில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தன்னுடைய தம்பி சரத்குமார் தன்னுடைய கணவர் இறந்த சமயத்தில் தனக்கு செய்த உதவி குறித்து கண்கலங்க பேசியிருக்கிறார்.
நடிகர் சரத்குமாருக்கு அறிமுகமே தேவையில்லை. 80ஸ் காலகட்டத்தின் இறுதியில் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் 90ஸ் காலகட்டத்தில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வந்த சரத்குமார் இப்போதும் கதாநாயகனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிகாட்டி கொண்டிருக்கும் சரத்குமார் நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சரத்குமார் குடும்பம்
அதற்கு முன்பு நடிகை சாயாவை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு நடிகை வரலட்சுமி மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். முதல் மனைவியோடு விவாகரத்து ஏற்பட்ட பிறகு ராதிகாவை திருமணம் செய்திருந்த நிலையில் அவருக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறார். சமீபத்தில் தன்னுடைய மூத்த மகள் வரலட்சுமியின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி வைத்திருந்தார்.

சரத்குமார் வைத்த விருந்து
அதுபோல வரலட்சுமி முதல் முறையாக சின்னத்திரையில் நடுவராக கலந்து கொண்டிருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜோடி ரீலோடட் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பஞ்சமியின் டான்ஸை பார்த்து வியந்து அவரை தன்னுடைய வீட்டிற்கு விருந்துக்கு அழைத்திருந்தார்.

ஜீ தமிழ் மகா சங்கமம்
அப்போது சரத்குமார் மற்றும் ராதிகா எல்லோருமே பஞ்சமி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு உபசரிப்பு கொடுத்து இருந்தனர். இந்த வீடியோக்கள் இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் இந்த வாரம் டான்ஸ் ஜோடி டான்ஸ் மற்றும் சரிகமப நிகழ்ச்சியின் மகா சங்கமம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் கலந்து கொண்டார்.

சரத்குமார் டான்ஸ்
அப்போது நட்சத்திர ஜன்னலில் பாடலுக்கு தன்னுடைய மகள் வரலட்சுமி மற்றும் மருமகனுடன் டான்ஸ் ஆடி இருந்தார். அதுபோல சலக்கு சலக்கு பாடலுக்கு போட்டியாளரான பஞ்சமி, சினேகா, மணிமேகலை போன்ற பலருடனும் டான்ஸ் ஆடி இருந்தார். பிறகு பஞ்சமி தங்களுடைய தோட்டத்தில் தான் விளைவித்த காய்கறிகளை கொண்டு வந்து கொடுத்திருந்தார். பிறகு சரிகமப போட்டியாளரான திவினேஷ் பாடலை சரத்குமார் வியந்து பாராட்டி இருந்தார்.
சின்னத்திரையில் சரத்குமார் அக்கா
அதோடு திவினிஷ் உடன் சேர்ந்து சரத்குமார் பாடலும் பாடியிருந்தார். ஆரம்பத்தில் ஆட்டம் பாட்டம் என்று மகிழ்ச்சியாக இருந்த சரத்குமாரை கடைசியில் அழ வைத்து விட்டனர். அதாவது சரத்குமார் உடைய அக்கா பேசிய ஒரு வீடியோவை போட்டு காட்டி இருந்தனர். அதில் "ஹாய் சரத் நான் யாரு பேசுறேன்னு தெரியுதா? நீ என்னுடைய பாசமிகு தம்பி.." என்று சொல்ல, சரத்குமார் இன்ப அதிர்ச்சி அடைந்தார். அதுபோல வரலட்சுமி சிரித்துக் கொண்டிருந்தார்.

சரத்குமார் அக்கா பேச்சு
அப்போது சரத்குமார் மற்றும் அவருடைய அக்கா இளமை பருவத்தில் எடுத்த புகைப்படங்கள் அந்த வீடியோவில் காட்டப்பட்டது. அதில் சரத்குமார் அக்கா பேசும்போது "நீ முதல் முதலில் சினிமாவுக்கு நடிக்க போறேன் என்பதை கூட என்கிட்ட தான் முதலில் சொன்ன. அப்புறம் அத்தான் இறந்த பிறகு கூட நீ கூட்டிட்டு வந்து எனக்கு ஒரு பீஸ் ஃபுல்லான வாழ்க்கையை கொடுத்திருக்க. நான் உடைந்து போன நேரத்தில் எல்லாம் நீ தான் என் கூட இருந்த. அதுக்கு எல்லாம் நன்றி" என்று பேசி இருக்கிறார்.
கண்ணீர் விட்ட சரத்குமார்
அதைத் தொடர்ந்து சரத்குமார் மேடையில் பேசும்போது நான் இவ்வளவு நேரம் ஜாலியா டான்ஸ் பாடல் எல்லாம் கேட்டுட்டு இருந்தேன். எனக்கு கண்ணீரை வர வைத்தவர்களுக்கு ரொம்ப நன்றி. என்னுடைய அக்கா எப்போதுமே எனக்கு லாட் ஆப் எமோஷனல். மை ஹார்ட்னு சொல்லுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அவருடைய அக்கா மேடையில் அங்கு வந்து நிற்கிறார்.

க்யூட்டான ப்ரோமோ
அக்காவை பார்த்ததும் அவரை கட்டிப்பிடித்துக் கொள்ள, சரத்குமாரின் அக்கா சரத்குமாருக்கு முத்தம் கொடுத்து இருக்கிறார். பிறகு சரத்குமாரும் தன்னுடைய அக்காவிற்கு முத்தம் கொடுத்து தன்னுடைய அன்பை வெளிக்காட்டி இருக்கிறார். இந்த கியூட்டான ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சரத்குமாரின் அக்காவை பார்க்கும் பலர் இவர் நடிகை மஞ்சுளா மாதிரி இருக்காங்க என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications