நாளைக்கு தீபாவளி.. சரத்குமார் இன்று குடும்பத்தோடு வெளியிட்ட போஸ்ட்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகர் சரத்குமார் குடும்பத்தோடு தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமாருக்கு இது தலை தீபாவளி என்பதால் ஸ்பெஷலாக இவர்கள் வீட்டில் கொண்டாட்டம் நடக்கிறது.
நாளை தீபாவளி பண்டிகை தமிழக மக்களால் பிரம்மாண்டமாக கொண்டாட இருக்கிறது. இந்த பண்டிகைக்காக பல மாதங்களாக பட்டாசு தொழிற்சாலைகளில் மக்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஒரு நாள் பண்டிகைக்காக பலர் பல நாட்களாகவே காத்திருக்கிறார்கள்.

வெவ்வேறு ஊர்களில் வேலைக்கு சென்று இருக்கும் நபர்கள் கூட தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு படை எடுத்து கிளம்பி கொண்டிருக்கிறார்கள். சென்னை, கோயம்புத்தூர் போன்ற பெரும் நகரங்களில் இன்று மாலை போக்குவரத்து பெரும் கஷ்டமாகத்தான் இருக்கப் போகிறது.
நாளை காலை எல்லோரும் வீட்டில் இருக்க வேண்டும் சொந்த பந்தங்களோடு தீபாவளியை பிரமாண்டமாக கொண்டாட வேண்டும் என்று பல கனவுகளோடு எல்லோரும் இருக்கும் நேரத்தில் நடிகர் சரத்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். அதுவும் அவருடைய குடும்பத்தோடு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
சரத்குமாருக்கு ஏற்கனவே சாயா என்ற மனைவி இருக்கும் நிலையில் அவருக்கு வரலட்சுமி, பூஜா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். பிறகு சாயாவை விவாகரத்து செய்துவிட்டு நடிகை ராதிகாவை சரத்குமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த விஷயங்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் சரத்குமார் அவருடைய இரண்டு குடும்பத்தையும் ஒன்றாகவே கவனித்து வருகிறார்.
அடிக்கடி இரண்டு குடும்பங்களோடு டூர் செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவையும் வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் இன்று இரண்டு குடும்பத்தோடு எடுத்த புகைப்படத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
சரத்குமாரின் மகளான வரலட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டார். இது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. வரலட்சுமியின் கணவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அவருக்கு 18 வயதில் மகள் இருக்கும் நிலையில் வரலட்சுமி அவரை திருமணம் செய்தது குறித்து பலரும் விமர்சித்து வந்தாலும் அதையெல்லாம் வரலட்சுமியும் அவருடைய குடும்பத்தினரும் கண்டுகொள்ளவில்லை.
வரலட்சுமி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தற்போது வரலட்சுமிக்கு அவருடைய கணவர் நிக்கோலுக்கும் தலை தீபாவளி என்பதால் சரத்குமார் வீட்டில் அவருடைய முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி ராதிகா என ஒட்டு மொத்த குடும்பமும் சேர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.
இது குறித்து சரத்குமார் வெளியிட்ட பதிவில் "என் உயிரிலும் உணர்விலும் கலந்த அன்பு சொந்தங்களே! சமத்துவ பண்டிகையான ஒளிர்மிகு தீப ஒளி திருநாளில் இல்லங்களில் உள்ளங்களிலும் வண்ண மத்தாப்புகள் பூத்துக் குலுங்கிட.. உறவுகளோடும், நண்பர்களோடும் இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து மகிழ்வோடு தீபாவளியை கொண்டாடிட என் குடும்பத்தார் சார்பாக அன்புள்ளம் கொண்ட மக்களுக்கு இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications