வெற்றி கொடுத்ததால சம்பளத்தை கூட்ட மாட்டேன்.. காரணம் இதுதான்! சசிகுமாரின் நேர்மையான பேச்சு.. இந்த நல்ல மனசு, சூப்பர்
சென்னை: நடிகர் சசிகுமார் சில வருடங்களாக நடிக்கும் திரைப்படங்கள் அவருக்கு அடுத்தடுத்து ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் அவருக்கு பெரிய அளவில் ஹிட் கொடுத்து இருக்கிறது. இந்த திரைப்படம் அவருடைய எல்லா திரைப்படங்களையும் விடவும் அதிக வசூல் பெற்ற படம் என்று அவரே கூறியிருக்கிறார். அதோடு தன்னுடைய படங்கள் வெற்றி பெற்றாலும் தான் சம்பளத்தை கூட்ட போவது கிடையாது அதற்கு காரணம் இதுதான் என்று சசிகுமார் பேசி இருப்பது பலருடைய கவனத்தைப் பெற்று வருகிறது.

பொதுவாக ஒரு சில நடிகர்கள் அவர்களின் ஒரு படம் வெற்றி பெற்று விட்டாலே பிறகு சம்பளத்தை பல மடங்காக கூட்டி விடுகிறார்கள் என்று பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பேசுவதை பார்த்திருப்போம். ஆனால் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் இப்போது நான் என்னுடைய சம்பளத்தை கூட்டமாட்டேன். காரணம் புதியதாக வரும் இயக்குனர்களும் ஏற்கனவே தோல்வியை சந்தித்த இயக்குனர்களுக்கும் இந்த சினிமாவில் சாதிக்க இன்னும் இருக்கிறது என்று காட்ட வேண்டும்.
சம்பளம் அதிகரிக்கவில்லை
நடிகர் சம்பளத்தை கூட்டும் போது புதிய இயக்குனர்களால் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்க முடியாத சூழ்நிலை வந்துவிடும். இதனால் அவர்கள் அதிகமாக நெருக்கடிக்கு ஆளாவார்கள். அதனால் நான் எப்போதும் போல ஒரே சம்பளத்தை தான் வைத்திருக்கிறேன். ஒரு படம் வெற்றி பெற்றதும் சம்பளத்தை கூட்டிக்கொண்டு போனால் அது எல்லோருக்குமே கஷ்டம் தான். சில வருடங்களுக்கு முன்பு எனக்கு அதிகமான கடன் இருந்தது. அதனால் நான் எந்த பட வாய்ப்பு வந்தாலும் அதில் எல்லாம் நடித்துக் கொண்டு இருந்தேன்.
நேர்மையான பேச்சு
இப்போது அந்த கடனை எல்லாம் அடைத்துவிட்டேன். அதனால் நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறேன். அதை மக்கள் பாராட்டுகிறார்கள். மக்கள் ரசிக்கவில்லை என்றால் என்னால் வெற்றி கொடுக்க முடியாது. நாம என்னதான் நடித்தாலும் அது மக்களுக்கு பிடித்ததாக இருக்க வேண்டும். அதற்கு முக்கிய காரணம் இயக்குனர்கள் தான். அந்த இயக்குனர்களை கஷ்டப்படுத்தக் கூடாது என்பதுதான் என்னுடைய ஆசை என்று சொல்லி இருக்கும் சசிகுமார் ஆரம்பத்தில் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து எப்படியாவது படத்தில் நடிக்க வேண்டும், இயக்குனராக வேண்டும் என்ற கனவில் இருந்தார்.
நல்ல நடிகர்
அவருக்கு சுப்பிரமணியபுரம் படம் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. முதல் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் அவரை பட்டி தொட்டி எல்லாம் பேச வைத்தது. அதன் பிறகு ஈசன் என்ற திரைப்படத்தை சசிகுமார் இயக்கி இருந்தார். ஆனால் அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. அதுபோல சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படம் சசிகுமாருக்கு ஒரு நல்ல நடிகர் என்று அடையாளத்தை கொடுத்தது.
அதிக வசூல் செய்த படம்
ஒரு சில திரைப்படங்கள் அவருக்கு பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை. இந்த நிலையில் தான் கடந்த மே ஒன்றாம் தேதி டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படத்தை 24 வயதான இயக்குனர் அபிஜன் ஜீவித் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். இது பற்றி சசிகுமார் பேசும்போது நான் நடித்த படங்களில் குட்டி புலி, சுந்தரபாண்டியன் ஆகிய படங்கள் தான் அதிக வசூல் பெற்றது.
சசிகுமாரின் ஆசை
ஆனால் டூரிஸ்ட் பேமிலி படம் அந்த வசூலை எல்லாம் தாண்டி விட்டது. நான் நடித்த படங்களிலே இந்த படம் அதிக வசூல் பெற்று இருக்கிறது. இதனால் நான் சம்பளத்தை கூட்ட மாட்டேன். இந்த வெற்றி பலருக்கும் நம்பிக்கையை கொடுக்கும் என்று நம்புகிறேன். நல்ல கதைகள் சின்ன பட்ஜெட்டில் வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை என்று மீண்டும் கூறியிருக்கிறார்.
-
அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய பாரதிராஜா.. தன்னம்பிக்கை மனிதனின் எழுச்சி! லீக்கான போட்டோஸ் -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
பிரதமர் நடித்த ஒரே படம் அமைதிப்படை தான்.. அதுவும் இந்த காட்சியை மறக்க முடியுமா? சத்யராஜ் சர்ச்சை பேச்சு -
அறந்தாங்கி நிஷா ஓபனாக சொன்ன ஒரு வார்த்தை.. அறிவே இல்லையா இப்படியா பேசுறது? மேடையிலேயே திட்டிய நடிகர் -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
Happy Raj OTT: ஓடிடிக்கு வரும் ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்... எந்த தளத்தில், எப்போ பார்க்கலாம்? லீக்கான தகவல் -
நடிகர் பிரகாஷ் ராஜின் அம்மா திடீர் இறப்பு.. இவ்வளவு பெரிய சோகங்களை கடந்து வந்தவரா அவர்! நெகிழ வைத்த கதை -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?












Click it and Unblock the Notifications