கவுண்டமணி இதனால் தான் பேட்டி கொடுக்கிறது இல்ல! ரகசியத்தை உடைத்த சத்யராஜ்.. இப்படி ஒரு காரணமா?
சென்னை: நடிகர் சத்யராஜ் பேட்டி ஒன்றில் கவுண்டமணி எதற்காக இன்டர்வியூ கொடுப்பது கிடையாது என்ற கேள்விக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அது பலரையும் வியக்க வைத்திருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் பலரையும் வியக்க வைத்த காமெடி மற்றும் குணசித்திர நடிகராக கவுண்டமணி இருந்து வருகிறார். அதிலும் கவுண்டமணி மற்றும் சத்யராஜ் காம்போ வேற லெவலில் வெற்றியடைந்திருக்கிறது. சத்யராஜ் உடன் அதிகமான திரைப்படங்களில் நடிகர் கவுண்டமணி நடித்திருக்கிறார்.

இருவருடைய நக்கலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்று சொல்லும் அளவிற்கு இருந்ததாலேயே இவர்களைப் பார்த்து பலரும் இதுபோல நக்கல் நையாண்டித்தனத்தோடு பேசி வருவதையும் பார்க்க முடிகிறது. அது போல பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கூட சத்யராஜ் மற்றும் கவுண்டமணியை காப்பி செய்து பலர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும் சினிமாவில் கவுண்டமணி தக் லைஃப் கொடுத்து எல்லோரையும் சிரிக்க வைத்தாலும் நிஜ வாழ்க்கையில் அவருடைய சில கொள்கைகள் எல்லோரையும் வியக்க வைத்திருக்கிறது. அதில் ஒன்றுதான் எந்த இன்டர்வியூவில் நான் பேச மாட்டேன் என்று கவுண்டமணி முடிவெடுத்து இருந்தது. கவுண்டமணி அதிகமாக இன்டர்வியூ கொடுக்காமல் இருக்கிறார். அதற்கு காரணம் என்ன என்பது பற்றி சத்தியராஜ் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் சத்யராஜ் பேசுகையில், கவுண்டமணியிடம் அண்ணே நீங்க ஏன் இன்டர்வியூ கொடுக்கிறது இல்ல என்று கேட்டால் என்னுடைய பேட்டி நாட்டுக்கு தேவையில்லாத விஷயம். நீ என்னுடைய நடிப்பை பார்க்க வரியா..? பாரு... சிரிக்கிறதா இருந்தா சிரி, இல்லாட்டி போ அவ்வளவுதான்.. என்ன பற்றி வேற என்ன நீ தெரிஞ்சுக்கணும்? என்று சொல்லிவிடுவார்.
ஒருமுறை ஒரு பிரஸ்மீட் நடந்துட்டு இருந்தது. அப்போது ஒரு ரிப்போர்ட்டர் கவுண்டமணியிடம் சார் உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சி என்றால் என்ன சார் என்று கேட்க, அதற்கு கவுண்டமணி நீ இன்னைக்கு காலையில் என்ன சாப்பிட்ட? என்று கேட்க அந்த ரிப்போர்ட்டர் சொல்ல முடியாமல் யோசித்துக் கொண்டிருக்கும் போது அதுவே உனக்கு மறந்து போச்சுல்ல, எனக்கு வாழ்க்கையில் என்ன நடந்துச்சுன்னு மறந்து போச்சு உன் வேலையை போய் பாரு என்று சொல்லிட்டாரு.
அதுபோல என்கிட்ட நிறைய பேரு கவுண்டமணி ஏன் பேட்டி கொடுக்கிறது இல்லைன்னு கேட்டிருக்காங்க. நாங்க ரெண்டு பேரும் ஆரம்பத்துல இருந்தே நட்பா இருக்கிறதால எல்லாரும் என்கிட்ட கேப்பாங்க அது பற்றி நான் அவரிடம் அண்ணே இப்படி கேக்குறாங்கன்னு சொன்னா, நீங்க வேற அவங்க காசு சம்பாதிக்கிறதுக்கு நாம ஏன் பழியாகணும்னு சொல்லுவாரு.
கவுண்டமணி அண்ணனை பொறுத்த வரைக்கும் நடிகன்கிறது ஸ்கிரீன்ல நீ வாங்குற டிக்கெட்டுக்கு நான் உன்ன எப்படி சிரிக்க வைக்கிறேன் என்பதுதான் விஷயம் அதை தாண்டி என்னை பற்றி நீ தெரிஞ்சுக்க வேண்டியது ஒன்றுமே இல்லை என்று சொல்லிடுவாரு என்று அந்த பேட்டியில் சத்யராஜ் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications