3வது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகரின் மனைவி.. ஆனால் இப்படி ஒரு போஸ்ட் எதிர்பார்க்கல!
சென்னை: விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி போன்ற பல சேனல்களில் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சத்யா ராஜா தன்னுடைய மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை வித்தியாசமாக போட்டோ சூட் எடுத்து ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
பொதுவாகவே திரைப்பட நடிகர்களை விடவும் சீரியல் நடிகர்கள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைந்து விடுகிறார்கள். திரைப்படங்களை பார்ப்பவர்கள் குறைவு என்றே சொல்லலாம். அதிலும் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களின் திரைப்படங்கள் வருடத்திற்கு அல்லது பல வருடங்களுக்கு ஒருமுறைதான் அவர்களுடைய படம் வெளியாகிறது.

ஆனால் சீரியலில் நடிக்கும் சின்ன சின்ன நடிகர்களை கூட தினமும் வீட்டில் பார்ப்பதால் அதிகமான குடும்பத்தினருக்கு பரிச்சயமான முகமாக மாறிவிடுகிறார்கள். அதிலும் சீரியலில் சில விஷயங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த நடிகரை திட்டி தீர்த்து விடுகிறார்கள். அவர் சீரியலில் நடிக்கிறார் என்பதையே பலர் மறந்து போய் அவருடைய நிஜக் கேரக்டர் இப்படித்தான் இருக்கும் என்றும் திட்டி வருகிறார்கள்.
ஆனால் சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி அதில் நடிப்பவர்களின் கேரக்டர் அப்படியே இருப்பதில்லை என்பது பலருக்கு மறந்து போய்விடுகிறது. ஒரு சிலர் எதார்த்தத்தை புரிந்து குறிப்பிட்ட நடிகர்களை எங்கேயாவது பார்க்கும்போது கூட அவர்களிடம் அவர்களுடைய நடிப்பை பாராட்டுகிறார்கள்.
சிலர் நடிகர்கள் நடித்த கேரக்டரை சொல்லி திட்டியும் இருக்கிறார்கள். இப்படி பலருடைய திட்டல் வாங்கும் நடிகர்களில் ஒருவர்தான் சத்யா ராஜா. இவர் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதிலும் சொல்ல வேண்டும் என்றால் இவர் பெயரை சொன்னதும் நினைவிற்கு வரும் சீரியலில் ஒன்று நாம் ஒருவர் நமக்கு இருவர்.
இந்த சீரியலில் முத்துராஜ் கேரக்டரில் நடித்திருப்பார். அந்த சீரியலில் முத்துராஜ்க்கும் காயத்ரி யுவராஜ்க்கும் எங்கேஜ்மென்ட் நடைபெற்று இருக்கும். அதற்குப் பிறகு முத்துராஜை கொலை செய்தது யார் என்று பெரும் பரபரப்பான காட்சிகள் வந்தது. அந்த சீரியலை போலவே தற்போது ஜீ தமிழில் மௌனம் பேசியதே சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சத்யா நடிக்கும் அதிகமான சீரியலில் இவர் நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதால் இவரை ரசிகர்கள் திட்டி வருகிறார்கள். இது நடிப்பாக இருந்தாலும் அவருடைய நிஜ வாழ்க்கையில் இப்போது சந்தோஷமான நிகழ்வு ஒன்று நடந்திருக்கிறது. அதை தன்னுடைய ரசிகர்களிடம் பகிர்ந்திருக்கிறார்.

அதாவது சத்யா ராஜாவிற்கு கல்யாணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இப்போது அவருடைய மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். அதை வித்தியாசமாக போட்டோ சூட் எடுத்திருக்கிறார்கள். அதில் ரவுண்டு ஒன்று, ரவுண்டு 2 என்று இரண்டு குழந்தைகளும் தங்களுடைய கையில் சிலைடு ஒன்றை பிடித்திருக்கிறார்கள்.
கெட்டிமேளம் சீரியல்: விபத்தில் பறிபோன இரட்டை உயிர்.. நிறுத்தப்படும் துளசி கல்யாணம்! ஹீரோ செய்த செயல்
அவருடைய சத்யாவின் மனைவி ரவுண்டு 3 என்று ஸ்லைடு வைத்திருக்கிறார். சத்யா பைனல் ரவுண்டு என்று ஒரு ஸ்லைடு வைத்திருக்கிறார். அதுபோல சத்யாவை அவருடைய மனைவி நாக் அவுட்டு செய்வது போலவும் புகைப்படங்கள் எடுத்து இருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பலருடைய கவனத்தை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications