Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவுண்டமணியுடன் மீண்டும் நடிப்பீங்களா? கேள்விக்கு செந்தில் ஒரே வார்த்தையில் சொன்ன நச் பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் செந்தில் நேற்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவெற்றியூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் சாமி தரிசனம் செய்திருந்த போது செய்தியாளர்கள் சந்திப்பின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார். அப்போது நீங்கள் மீண்டும் கவுண்டமணியுடன் சேர்ந்து நடிப்பீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு செந்தில் கொடுத்த பதில் தான் இப்போது கருத்துக்களை பெற்று வருகிறது.

கவுண்டமணி, செந்தில் காமெடி பல வருடங்கள் கழித்தாலும் இப்போதும் நிலைத்து நிற்கிறது. இவர்களுடைய காமெடி இப்போதும் பலருடைய மனதில் இருக்கும் கவலைகளை தீர்த்து வருகிறது. ஒரு காலத்தில் இவர்கள் இருவருடைய கால் சீட்டுக்காக காத்திருந்த நடிகர்கள் ஏராளம். முன்னணி கதாநாயகர்களுக்கு இணையாக இவர்களும் சம்பளம் வாங்கி வந்தனர். இவர்கள் இருவரும் ஒரு திரைப்படத்தில் இருந்தால் அந்த திரைப்படம் நிச்சயம் ஹிட் என்று சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கி இருந்தார்கள்.

Television Tamil Cinema Actor Senthil

ஆரம்பத்தில் செந்திலை கவுண்டமணி தான் சினிமாவில் அறிமுகப்படுத்தியது. கவுண்டமணி கூத்துப்பட்டறையில் இருந்து சினிமாவில் நடிக்க தொடங்கியதும் செந்திலுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்து. அதோடு அப்படி நடி.. இப்படி நடி.. என்று சொல்லி நடிக்க வைத்து இவர்களில் ஒருவர் இல்லை என்றால் நன்றாக இருக்காது என்று சொல்லும் அளவிற்கு இவர்கள் இருவருடைய கூட்டணி பலருக்கும் ஃபேவரைட் ஆகிவிட்டது.

ஆனால் இவர்கள் இருவருக்கும் சில கருத்து வேறுபாடு கூட இருந்தவர்களாலே உருவாகி விட்டது. அதனாலேயே ஒரு கட்டத்தில் செந்தில் மற்றும் கவுண்டமணி இருவரும் தனித்தனியாக நடித்து வந்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த வாழைப்பழ காமெடி இப்போது பலருக்கு புரியவில்லை... பார்க்கும்போதெல்லாம் சிரிப்பும் வந்துவிடும். அதுபோல பெட்டர் மாஸ் லைட் காமெடி போற்ற பல காமெடி சொல்லிக்கொண்டே போகலாம்.

Television Tamil Cinema Actor Senthil

அதுவும் செந்தில் பல அறிவுப்பூர்வமான மற்றும் யாராலும் தீர்த்து வைக்க முடியாத கேள்விகள் தோற்றுவதும் அதற்கு கவுண்டமணி ரியாக்ஷனும் அது வேற லெவலில் இருக்கும். ஆனால் இவர்கள் இருவரும் பல்வேறு திரைப்படங்களில் தனித்தனியாக நடிக்க தொடங்கியதும் அது ரசிகர்களுக்கு பெரிய அளவில் திருப்தியை கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் இருவரும் சினிமாவை விட்டு விலகி இருந்தனர். இப்போது மீண்டும் தங்களுடைய பயணத்தை தொடங்கி இருக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவெற்றியூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் செந்தில் தன்னுடைய குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்திருந்தார். அப்போது அங்கு செய்தியாளர்கள் சந்திப்பின்போது நீங்கள் கவுண்டமணியுடன் சேர்ந்து மீண்டும் நடிப்பீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு கவுண்டமணி இது என்ன கேள்வி..? வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.. என்று சொல்லி இருக்கிறார். இதனால் மீண்டும் இவர்கள் இருவருடைய கூட்டணி அமைந்தால் ரசிகர்களுக்கு இனி கொண்டாட்டம் தான். பழைய கரகாட்டக்காரன் காமெடி போல இப்போது புதியதாக இவர்களுடைய காமெடி விரைவில் வரவேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+