Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாலியை அடகு வைத்து ஆபரேஷன்.. நடிகர் சேது ராமன் செய்த செயல்! நெகிழ்ந்த மனைவி! இப்படியும் ஒருவரா? கிரேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் பலருக்கும் பிரபலமான நடிகர் சேதுராமன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காலமானார். அவர் ஒரு மருத்துவர் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் அவர் இறப்பதற்கு முன்பு தன்னுடைய மருத்துவமனையில் ஆபரேஷன் செய்து கொண்ட ஒருவருக்காக செய்த செயல் குறித்து சேதுராமன் மனைவி நெகிழ்ந்து பேசி இருக்கிறார்.

சில வருடங்களாகவே சினிமாவில் பலருக்கும் பிரபலமான நடிகர்கள் அடுத்தடுத்து இறந்து வருகிறார்கள். இவருக்கா இந்த நிலைமை என்று சொல்வது போல தான் ஒரு சில நடிகர்களின் திடீர் மரணம் இருக்கிறது. அது அவருடைய குடும்பத்தினரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் வருத்தம் அடைய வைக்கிறது. நெருங்கிய உறவினர்கள் ஒருவரின் இழப்பு எவ்வளவு வலியை ஏற்படுத்துமோ அதுபோல தமக்கு பிடித்த நடிகர்களின் மரணமும் பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

Sethuraman

டாக்டரும் நடிகரும்

சில நடிகர்கள் மறைந்த பிறகு திரைப்படங்களில் அவர்களை மீண்டும் பார்க்கும்போது பலரும் பீல் பண்ணி வருகிறார்கள். அதுபோல பலரையும் சிரிக்க வைத்த நடிகர் சேதுராமனின் மறைவு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேதுராமன் டாக்டராக இருந்து வந்தார். அதே நேரத்தில் நடிகராக வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருந்தது.

மனைவி கர்ப்பம்

கடந்த 2020ல் மார்ச் மாதத்தில் தான் திடீரென காலமானார். நடிகர் சேதுராமன் மரணம் அடையும்போது அவருடைய மனைவி ஐந்து மாதம் கர்ப்பமாக இருந்தார். இது அனைவரையும் பீல் பண்ண வைத்தது. அதுபோல சேதுராமன் மரணமடைந்த பிறகு அவருடைய மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது தன்னுடைய கணவரே தனக்கு மகனாக பிறந்து விட்டார் என்று சேதுராமனின் மனைவி உமா சோசியல் மீடியா பக்கங்களில் பதிவு வெளியிட்டிருந்தார்.

நடிகர் சேதுராமன் மருத்துவமனை

அதுபோல சேதுராமன் வாலிப ராஜா, சக்க போடு போடு, கண்ணா லட்டு தின்ன ஆசையா போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். சேதுராமன் சர்ம நிபுணர் dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்து இருந்தார். 2016 ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு தோல் நோய் மருத்துவமனையை திறந்து வைத்தார்.

சேதுராமன் மனைவி போஸ்ட்

அதைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு அண்ணா நகரில் தன்னுடைய இரண்டாவது மருத்துவமனையை திறந்து வைத்திருந்தார். சேது ராமனுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் உமா என்பவரோடு திருமணம் நடைபெற்றது. தன்னுடைய கணவர் சேதுராமன் மறைந்த பிறகு சேதுராமன் குறித்தும் அவருடைய கனவு மருத்துவமனை குறித்து உமா சேதுராமன் அடிக்கடி சோசியல் மீடியா பக்கங்களில் பதிவு வெளியிட்டு வருகிறார்.

தாலியை அடகு வைத்த மனைவி

இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய கணவர் குறித்து அவர் பேசி இருக்கிறார். அதில் என்னுடைய கணவர் சேதுராமனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய செயல்கள் ஒவ்வொரு இடத்திலும் அவர் மீது எனக்கு மரியாதையை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. ஒரு முறை எங்கள் ஹாஸ்பிட்டலில் ஒருவருக்கு ஆபரேஷன் நடைபெற்றது.

பெருந்தன்மை

அப்போது அவருடைய மனைவி அவர் போட்டிருந்த தாலி செயினை அடகு வைத்து மருத்துவமனை பீஸ் கட்டி இருக்கிறார். இது சேதுராமனுக்கு பிறகு தான் தெரிய வந்தது. அப்போது அந்த பணத்தை வேண்டாம் என்று சொல்லி அந்த பெண்ணின் கையில் கொடுத்து நீங்கள் தாலி செயினை திருப்பி கழுத்தில் போடுங்கள் மருத்துவமனைக்கு பீஸ் கட்ட வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதை பார்க்கும்போது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.

Sethuraman

வியக்க வைத்த செயல்

சேதுராமன் பலருக்கு உதவிகள் செய்து இருக்கிறார் அவரை போல ஒருவரை பார்க்கவே முடியாது. அவர் கிளினிக் போகும்போதெல்லாம் என்னையும் கூடவே கூட்டிட்டு போவார். மருத்துவராக மட்டுமல்லாமல் சேவை மனப்பான்மையோடு அவர் இருப்பது எனக்கு வியக்க வைத்தது என்று எமோஷனலாக தெரிவித்து இருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கா இந்த நிலைமை வரவேண்டும் என்று ரசிகர்கள் பீல் பண்ணி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+