Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவாஜி வீடு ஏலம்.. பிரபு எனக்கு போன் பண்ணி “அப்படி” சொல்லி அழுதார்! தயாரிப்பாளர் ராஜன் எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிவாஜி கணேசன் வாழ்ந்த அன்னை இல்லம் வீடு பற்றிய செய்திகள் தான் சில நாட்களாக இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி பலரையும் வருத்தமடைய செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இது பற்றி நடிகர் பிரபு தனக்கு போன் செய்து அழுததாக தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

நடிகர் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத கலைஞர். அவருடைய குடும்பத்தில் பலரும் நடிகர்களாக இருக்கிறார்கள். அதில் நடிகர் பிரபுவை எல்லோருக்குமே தெரிந்திருக்கும். இந்த நிலையில் சிவாஜி கணேசனின் குடும்ப பிரச்சனை அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

Prabhu Shivaji Ganesan Mother Home

சிவாஜி வீடு ஜப்தி

அதிலும் சிவாஜி கணேசன் வாழ்ந்த அன்னை இல்லம் வீடு அவருடைய மகன் வாங்கிய கடனுக்காக ஜப்தி செய்யப் போவதாக செய்திகள் வெளியானது. இது ரசிகர்களையும், பிரபலங்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. தமிழ் சினிமாவில் நல்லபடியாக வாழ்ந்து கம்பீரமாக இருந்த சிவாஜி கணேசன் வீட்டிற்கு இந்த நிலைமையா? என்பது பலருடைய கேள்வியாக இருந்தது.

தயாரிப்பாளர் கே ராஜன் பேட்டி

இந்த நிலையில் நேற்று "மாடன் கொடை விழா" என்ற திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர் கே. ராஜன் பேசியிருந்தார். அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் போன வாரம் ஒரு செய்தி திரை துறை உலகையே குலுங்க வைத்து, கதிகலங்க வைத்துவிட்டது என்று தான் சொல்லணும்.

சோகமான செய்தி

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீடு ஏலம் செய்தியை கேட்டு பத்திரிக்கை, டிவி எல்லாம் கதறிடிச்சு. தமிழகத்தை தமிழ் மக்களை நடிப்பின் மூலமாக உலக அளவில் கொண்டுபோய் சேர்த்தவர் சிவாஜி கணேசன். எப்படி திருக்குறள் நம் தமிழை உலகிற்கு கொண்டு போய் சேர்த்ததோ அப்படி நடிப்பு உலகில் தமிழகத்தை உலகளவில் கொண்டு போய் சேர்த்தவர் நடிகர் திலகம்.

பலருக்கும் வருத்தம் தான்

சிவாஜி கணேசன் அவர்கள் 250 படத்திற்கும் மேல் நடித்திருக்கிறார். அதிலும் கட்டபொம்மன் திருவிளையாடல் என்று விதவிதமான படங்களில் தமிழை அழகாக உலக அளவில் கொண்டு சேர்த்தார். அவரது நடையே நடிப்பு, கன்னத்தில் ஒரு நடிப்பு என சினிமாவை உயர்த்திய சிவாஜி கணேசனின் வீடு ஏலத்திற்கு வரப்போகிறது என்றதும் பலபேர் பதறிப் போனார்கள், கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

அழுத தயாரிப்பாளர் கே. ராஜன்

நானும் அழுது கொண்டிருந்தேன். சிவாஜி கணேசன் குடும்பத்திற்கு இந்த நிலைமையா? என்று நான் அழுதேன். இதை youtubeல் சிலர் போட்டு விட்டார்கள். அந்த வீடியோ வைரலாகிவிட்டது. அதை பார்த்துவிட்டு இன்றைக்கு காலையில் எனக்கு நடிகர் பிரபு போன் செய்தார். நடிகர் திலகத்தின் மகன் பிரபு என்னிடம் பேசும்போது அண்ணே உங்கள் பேச்சினை கேட்டு நான் அழுதுட்டேன் அண்ணே. அதில் பாதி தான் உண்மை அண்ணே என்றார்.

பிரபு சொன்ன வார்த்தை

அந்த வீடு அப்பா என் பெயரில் எழுதியிருக்கிறார் அண்ணே, அதை மாற்றி ஏதோ பண்ணியிருக்காங்க. அதெல்லாம் சொல்ல முடியல. குடும்பத்தில் ஏதோ தவறு நடந்திருக்கு. அதனால் நீங்கள் எல்லாம் வணங்குகிற சிவாஜி கணேசன் வீட்டை ஏலம் போக விடமாட்டேன் என்று நல்ல செய்தியை சொன்னார். அதைக் கேட்டதும் எனக்கு சந்தோஷம் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

கே ராஜன் நெகிழ்ச்சி

அதை தொடர்ந்து ராஜன் பேசும்போது என்னுடைய மைத்துனர் ஐசரி கணேஷ் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்காக பூஜையை மிகப்பெரிய அளவில் நடத்தி இருக்கிறார். திரையுலகம் மறுபடியும் வளர்ச்சி அடைகிறது என்று எண்ணத்தை அங்கு போனதும் பார்த்து அறிந்து கொண்டேன். ஏனென்றால் அந்த விழா அவ்வளவு பிரமாண்டமாக இருந்துச்சு. எல்லா தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அங்கு வந்திருந்தார்கள். இப்படி பார்த்து ரொம்ப நாள் ஆச்சு என்று நெகிழ்ச்சியாக அந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ராஜன் பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+