பட்டினியாக இருந்த "சிவாஜி”.. எம்ஜிஆர் செய்த உதவி.. காலம் கொடுத்த மாற்றம்.. கண் கலங்க வச்சுட்டாங்களே!
சென்னை: ஆரம்ப காலத்தில் தான் பட்டினியாக இருந்தபோது சாப்பாடு போட்ட அண்ணன் எம்ஜிஆரை கடைசி வரை மறக்காத சிவாஜியின் நன்றி உணர்வும், பதிலுக்கு அவர் எம்ஜிஆருக்கு செய்த கைமாறு போன்ற பல நிகழ்ச்சிகளை பிரபலம் ஒருவர் பகிர்ந்து இருக்கிறார்.
நடிகர் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் இருவருக்கும் இருந்த ஆழமான நட்பு வெளியே வந்திருக்கிறது.
இருவருடைய ரசிகர்கள் என்னதான் அடித்துக் கொண்டாலும் நிஜத்தில் இருவரும் "மாமேதைகள்" என்பதை நிரூபித்து இருக்கிறார்கள்.

அக்கால கட்டத்தில் சினிமாவில் நுழைய வேண்டும் என்றால் அதற்கு நுழைவு வாசல் நாடக கம்பெனிகள் தான். அப்படி 'மங்கள காண சபா'என்ற ஒரு நாடக கம்பெனியில் தான் ஆரம்பத்தில் சிவாஜி சிறு சிறு வேடங்களில் நடித்து வந்து கொண்டிருந்திருக்கிறார்.அந்த நேரத்தில் சரிவர நிகழ்ச்சிகள் கிடைக்காததால் அந்த நாடகக் குழு மிகவும் கஷ்டத்தில் இருந்துள்ளது.
குழுவில் உள்ளவர்கள் சரிவர சாப்பிட கூட காசு இல்லாமல் பட்டினியாக இருந்துள்ளனர். இதை அறிந்த என் எஸ் கிருஷ்ணன் மங்கள காண சபா நாடக குழுவை தானே வாங்கி சென்னை வால்டேக்ஸ் ரோட்டில் ஒரு மண்டபத்தில் தங்க வைத்து தன்னால் முடிந்த உதவியை செய்து வந்துள்ளார். அதே ரோட்டில் இவர்கள் தங்கி இருந்த மண்டபத்திற்கு எதிராக தான் எம்ஜிஆர் தங்கி இருந்திருக்கிறார்.
அப்பொழுது எம்.ஜி.ஆர் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து கொண்டிருந்திருக்கிறார். (17 ஆண்டுகள் போராடிய பின்பு தான் எம்ஜிஆருக்கு சினிமாவில் கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது) அந்த சமயத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் எம்ஜிஆர்-க்கு சிவாஜியை அறிமுகப்படுத்தி வைத்திருந்திருக்கிறார்.சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எம் ஜி ஆர் ஷூட்டிங் முடிந்து வந்ததும் சரிவர சாப்பிடாமல் பட்டினியாய் இருக்கும் சிவாஜியை கூட்டிக்கொண்டு சென்று சாப்பாடு வாங்கித் தருவாராம்.
பல நாட்கள் சிவாஜியும் அண்ணன் எம்ஜிஆர் வருவார் சாப்பாடு வாங்கி தருவார் என்று காத்திருப்பதும் உண்டாம்.சில வருடங்களில் எம்ஜிஆரின் சில படங்கள் சரி வர போகாத நிலையில் சிவாஜியின் பராசக்தி படம் வந்து தமிழ் சினிமாவை ஒரு புரட்டு புரட்டி சிவாஜியை மிகப்பெரிய ஹீரோவாக ஆக்கியிருந்தது. பராசக்தி வந்த பிறகு அதே வருடத்தில் சிவாஜி 10 புதிய படங்களில் நடிப்பதற்கு புக் ஆகி இருக்கிறார்.
ஆனால் அந்த நேரத்தில் எம்ஜிஆர் க்கு ஒரு படம் கூட இல்லையாம். இதனை அறிந்து வேதனை அடைந்த சிவாஜி தன்னிடம் வந்த மலைக்கள்ளன் பட வாய்ப்பை அண்ணன் எம்ஜிஆர் க்கு இந்தக் கதை செட்டாகும் அண்ணனை வைத்து இந்த படத்தை எடுங்கள் என்று பரிந்துரை செய்துள்ளார். எம்ஜிஆரையும் தொடர்பு கொண்டு அண்ணே உங்களுக்கு இந்த படம் நன்றாக இருக்கும் நீங்கள் இந்த படத்தில் அடியுங்கள் சிறப்பாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த மலைக்கள்ளன் படம் தான் எம்ஜிஆரின் சினிமா வாழ்க்கைக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.அந்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்தக் காலத்தை போன்று அந்த காலத்திலும் இருவருக்கும் இடையே தொழில் போட்டி ஏற்பட அவரவர் ரசிகர்கள் தான் முக்கிய காரணமாக இருந்துள்ளனர். கணேசனுடன் இணைந்து நடிப்பதற்கு எனக்கு ஒரு ரூபாய் சம்பளம் கொடுத்தால் மட்டும் போதும் என்று கூண்டுக்கிளி படத்தில் சிவாஜியுடன் இணைந்து நடிக்கும் போது கூறுமளவிற்கு இவர்களது நட்பு இருந்திருக்கிறது.
நடிக்கும் பொழுது என்னதான் தொழில் போட்டியிருந்தாலும் அது இவர்களது நட்பை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அடிக்கடி எம்ஜிஆர் சிவாஜி இல்லத்திற்கு சென்று மீன் குழம்பு விரும்பி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். முதலமைச்சர் ஆன பின்பும் எம்ஜிஆர் சிவாஜி கிடையே இருந்த அண்ணன் தம்பி பாசம் அப்படியேதான் இருந்திருக்கிறது. சினிமா துறையில் இந்த இரு பெரும் நடிகர்கள் போன்று நட்பு பாராட்ட அவர்கள் தான் மீண்டும் பிறந்து வர வேண்டும் என்று பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications