“கொட்டுகாளி” வெற்றியானால் இதைத்தான் செய்வேன்.. சிவகார்த்திகேயன் சொன்ன வார்த்தை.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் கொட்டுகாளி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்ற போது சிவகார்த்திகேயன் கொட்டுகாளி திரைப்படம் வெற்றி பெற்றால் தான் செய்யப்போவது என்ன என்பது பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார். இது பலருடைய பாராட்டை பெற்று வருகிறது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் கலக்கி கொண்டிருப்பவர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் ஏற்கனவே அவதாரம் எடுத்து இருக்கிறார். இந்த நிலையில் அவர் நடிகர் சூரி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் கொட்டுகாளி திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி இருக்கிறது.

அதோடு இந்த திரைப்படம் வரும் 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் வினோத் என்பவர் இயக்கியிருக்கிறார். ஏற்கனவே வினோத் இயக்கிய இந்த திரைப்படம் பல நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்டு பாராட்டு பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார்.
அப்போது கொட்டுகாளி படம் ஹிட்டாகி என்னுடைய முதலீட்டை விட லாபம் வந்தால் அதை இயக்குனர் வினோத்துக்கு அடுத்த படத்திற்காக முன் பணமாக கொடுப்பேன். அதிகமாக லாபம் வந்தால் வினோத் போன்ற இரண்டு இளம் இயக்குனர்களுக்கு முன்பணமாக கொடுப்பேன். எனக்கு வாழ்க்கை கொடுத்த இந்த சினிமாவிற்கு என்னால் முடிந்த சிறு உதவி இது என்று சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார்.
அதோடு நான் வினோத்தை சந்தித்தது மறக்க முடியாத ஒரு சம்பவம் தான். பொதுவாக எனக்கு தமிழ் சினிமாவை தவிர மற்ற மொழி சினிமா பற்றி எதுவும் தெரியாது. ஒரு சில விருதுகள் பற்றி தான் எனக்கு தெரியும் சினிமாவில் நான் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தாலும் எனக்கு பெரிய அளவில் தெரியாது. இந்த நிலையில் தான் ஒரு முறை வினோத், அருண் உட்பட சிலர் பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது அருண் வினோத்தை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். அவர் வாங்கிய விருதுகள் பற்றி சொன்னதும் எனக்கு முதலில் பெரியதாக எதுவும் தெரியவில்லை. அதற்கு பிறகு தான் அருண், கூழாங்கல் திரைப்படத்திற்காக பன்னாட்டு திரைப்பட விழாவில் வினோத்திற்கு விருதுகள் வழங்கியது பற்றி சொன்னபோது நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அப்போது அவரிடம் பேசும்போது நான் மதுரை பக்கத்தில் உள்ள ஒரு சின்ன ஊர்காரர் தான் என்று சொன்னார்.
இப்படி சின்ன இடத்தில் இருந்து வளர்ந்து வந்த வினோத் செய்த சாதனை ஏன் தமிழ் ரசிகர்கள் யாருக்குமே தெரியவில்லை என்று எனக்கு கஷ்டமாக இருந்தது. உடனே நான் அவரிடம் வினோத் நீங்க ஒரு கதையை ரெடி பண்ணிட்டு வாங்க அந்த படத்தை நான்தான் தயாரிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அதற்குப் பிறகு வினோத் கதையை ரெடி செய்து விட்டு வந்து என்னிடம் சொல்ல வந்தார் நான் தயவு செய்து என்னிடம் கதை சொல்ல வேண்டாம், என்னிடம் சொன்னால் என்னை அறியாமல் அதை மாற்றலாம் இதை மாற்றலாம் என்று சொன்னால் அது சிக்கல் ஆகிவிடும்.
ஒன்றுமே வேண்டாம் நீங்கள் ஆகவே படத்தை எடுங்கள் அதைப் பற்றி ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லிவிட்டேன் படமும் இப்போது முடிந்து விட்டது. வினோத் உடைய திறமை பலருக்கு தெரிய வேண்டும் என்று நான் முடிவு செய்தேன் அவ்வளவுதான்.. என்னை உருவாக்கிய தமிழ் சினிமாவில் இதுபோல துடிப்பாக இருக்கும் பலர் வெளியே தெரிய வேண்டும் என்று அந்த பேட்டியில் சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications