கமல் எழுதிய கடிதத்தை லீக் செய்த சிவகார்த்திகேயன்.. ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் கமல்ஹாசன் உடன் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் நிலையில் அது அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது. அதே நேரத்தில் தான் இயக்கிய கொட்டுக்காளி திரைப்படத்தை பற்றி கமல்ஹாசன் எழுதிய கடிதத்தையும் சிவகார்த்திகேயன் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இது பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் அமரன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகர் சூரி "கொட்டுக்காளி" என்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த திரைப்படம் குறித்து சிவகார்த்திகேயனுக்கு கமல்ஹாசன் எழுதிய ஒரு கடிதத்தை சிவகார்த்திகேயன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

Television Sivakarthikeyan Soori

அந்த கடிதத்தில், "கொட்டுக்காளி" என்ற மத்திய அரசு சான்றிதழ் திரையில் தோன்றும் கணத்திலிருந்து ஆச்சரியங்கள் தொடங்குகின்றன. சான்றிதழில் 103 நிமிடங்கள் 44 செகண்டுகள் என்று குறிப்பை பார்த்ததுமே தமிழ் சினிமா ராக்குத்து யுகத்தில் இருந்து மீண்டும் நவீன கதை சொல்லி ஒருவனின் கதை களமாகிவிட்டது என்று புரிகிறது. தம்பி சூரியை தவிர எனக்கு தெரிந்த முகங்கள் இல்லை.

மூன்று நிமிடங்களுக்கு பிறகு அவரும் தெரியவில்லை, பாண்டியன் எனும் கதாபாத்திரம் தான் தெரிந்தார். காலில் கல்கட்டிய சேவல் ஒன்று விடியலுக்காக கூட கூவாமல் குழம்பி நிற்கிறது. மறுபுறம் நம் கண்ணுக்குத் தெரியாத கல் ஒன்று காலில் கட்டப்பட்ட பெண் ஒருத்தி அந்த சேவலையே வெறித்துப் பார்க்கிறாள். கொட்டுக்காளி டைட்டில் திரையில்...

Television Sivakarthikeyan Soori

கண் இமைக்கும் நேரத்தில் கால் கட்டை உதறிதப்பித்து சேவல், வெறித்துப் பார்த்த பெண்ணின் கண்ணில் சின்ன எதிர்பார்ப்பு பின் இரு உறவினர்கள் சேவலை துரத்தி பிடித்துக் கொண்டு போகிறார்கள். பெண்ணின் கண்ணில் நம்பிக்கை மங்குகிறது. இவள்தான் நாயகி... உலகத்தை தலைகீழாக அண்ணாந்து பார்த்தபடி அறிமுகம் ஆகிறான் பாண்டி. அவன் கழுத்தில் ஒரு வெண்சுண்ணாம்புக் கலியை தடவி விடுகிறாள் ஒரு பெண்.

பாண்டிக்கு தொண்டை கட்டாகவும் இருக்கலாம் அல்லது புற்றுநோயின் ஆரம்ப கட்டமாக கூட இருக்கலாம். ஒரு இளம் பெண்ணின் கல்லூரி காதலையும் கேன்சரையும் எந்த ஒரு புரிதலும் இல்லாத அணுகும் ஒரு கிராமத்துக் குடும்பம். கிராமம் என்றால் சிமெண்ட் சாலை, வாகன வசதி, செல்போன், டாஸ்மாக், சானிடரி நாப்கின் 24 மணி நேரம் மின்சாரம் என 21 நூற்றாண்டில் நவீன வசதிகள் நிறைந்த கிராமம் இருப்பினும் எங்க வீட்டுப் பிள்ளைக்கு பேய் பிடிச்சிருக்கு பேய் ஓட்ட கூட்டிட்டு போறேன்னு விசாரிப்பவர்களிடம் கூசாமல் சொல்கிறான் பாண்டியன், வழிமொழிகிறது குடும்பம்.

Television Sivakarthikeyan Soori

போகிற வழி எல்லாம் பிளாஸ்டிக் குடங்கள் விற்கும் வண்டி ஒன்று பேயாய் ஆடி செல்கிறது. கண்ணேறு தவிர்க்கும் அசுர முகங்கள் இன்னொரு வண்டியில் போயாடுகிறது. நடுவெளியில் டாஸ்மாக் பேய் என்று பல பேய்களின் ஆட்டம் தென்பட்டாலும் அவை பூசாரிகளால் விரட்ட முடியாத பேய்கள் என புரிந்து கொள்கிறோம். இது பேய் கதை தான் பேய் கதை நாயகியின் கண்ணில் பூமியின் பொறுமை தெரிகிறது.

பின்னணி இசை என்று எதுவும் இல்லை. டைட்டில் காட்டில் வரும் "இயற்கைக்கு நன்றி" என்ற வாசகத்தின் பொருள் ஒளிப்பதிவிலும், ஒலிப்பதிவிலும் தெரிகிறது. இயற்கை தான் படத்தின் இசை குலதெய்வ கோயிலை நெருங்குகையில் சிறுவன் கார்த்திக் வாயால் கொடுக்கும் சினிமா பாணி பின்னணி இசை தான் ஒரு சின்ன கிண்டலுடன் இந்த படத்தின் அவை இல்லை என்பதை நினைவுபடுத்துகிறது.

ஆணாதிக்கத்தின் குறியீடாக சேவல் சீறும் காலை பாண்டியன் பூசாரி என்று பல இருந்தாலும் அவற்றை நாயகி எதிர்கொள்ளும் விதம் காலம் மாறிவிட்டது என்பதை மற்ற கதாபாத்திரங்கள் புரிந்து கொள்ளாவிடினும் பார்வையாளராகிய நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது. கடைசியில் இயக்குனர் பாண்டியனையும் நம்மையும் பகுத்தறிவின் கரையோரமாகவும் மனிதனின் விளிம்பிலும் நிறுத்திவிட்டு தன்னுடைய கடமையை முடிந்த சந்தோஷத்தில் விளக்கை அணைத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பி விடுகிறார்.

இந்த காதல் கதையின் முடிவில் பாண்டியனை போல நாமும் உணர உந்தப்படுகிறோம். இது கொட்டுக்காளி படத்தின் விமர்சனம் அல்ல. இனி இது போன்ற நல்ல சினிமாக்களும் தமிழில் அடிக்கடி வரும் என கூறும் கட்டியம். ஒரு சிலருக்கு எச்சரிக்கை, ரசனை குறைபாடு உள்ளவர்கள் தம்மை விரைவில் மேம்படுத்திக் கொள்ளாவிடில் நவீன சினிமாவின் நீரோட்டத்தில் கலக்க முடியாது.

தரையிலேயே நின்றபடி தண்ணீரை அசுத்தப்படுத்தாமல் அவர்கள் தங்கள் தாகங்களை தீர்த்துக் கொள்ள வேண்டியதுதான். மொத்தத்தில் கொட்டுக்காளி குழுவினர் அழகான சினிமா மொழியில் அற்புதமான பகுத்தறிவு கதை ஒன்று சொல்லி இருக்கிறார்கள். அதற்காக இயற்கை மட்டுமல்ல திரு சிவகார்த்திகேயனுக்கு நன்றி. சாரளமல்லாத சிறையாக தமிழ் சினிமாவில் பழைய வர்த்தகர்கள் வைத்திருக்க முடியாது.

புதிய பார்வையாளர்களும் புதிய படைப்பாளர்களும் பல்கி விட்டார்கள் என்று கமல்ஹாசன் கடைசியில் அந்த கடிதத்தில் கையெழுத்தோடு முடித்து இருக்கிறார். இந்த புகைப்படங்களை சிவகார்த்திகேயன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு கொட்டுக்காளி பட குழுவோடு கமல்ஹாசன் எடுத்த புகைப்படத்தையும் சிவகார்த்திகேயன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இது பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+