அம்மாவோடு புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன் மகள்.. விஷயம் இதுதானா? குவியுது வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் மகளான ஆராதனா அவருடைய அம்மாவோடு எடுத்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. குழந்தையாக பார்த்த ஆராதனா இப்போது குட்டி ஹீரோயினியாக மாறி இருக்கும் புகைப்படம் இணையத்தில் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஒரு சில நடிகைகளும், நடிகர்களும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் விஜய் டிவியில் போட்டியாளராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பிறகு தொகுப்பாளராக மாறி இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறிக்கொண்டிருக்கிறார்.

sivakarthikeyan vijay tv

அடுத்த தளபதி இவர்தான் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள் அதை நிரூபிக்கும் வகையில் தான் சமீபத்தில் வெளியான கோட் திரைப்படத்தில் கூட நடிகர் விஜய் எனக்கு வேறு வேலை இருக்கிறது, இனி நீ இதை பாத்துக்கோ என்று துப்பாக்கியை கையில் கொடுத்து ரசிகர்களுக்கு மறைமுகமான ஒரு தகவலையும் கொடுத்திருக்கிறார். காரணம் விஜய் தான் விரைவில் சினிமாவை விட்டு விலகி முழுமையாக அரசியலில் ஈடுபட போகிறேன் என்று அறிவிப்பு ஏற்கனவே கொடுத்திருந்தது தான்.

sivakarthikeyan vijay tv

அதுபோல சின்னத்திரையாக இருந்தாலும் சரி வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி நடிப்பு வேறு தன்னுடைய குடும்பம் வேறு என்று இரண்டையும் கவனித்துக் கொள்ளும் சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் தான் மூன்றாவது ஆண் குழந்தை பிறந்தது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

சிவகார்த்திகேயன் மூத்த மகள் ஆராதனா சிவகார்த்திகேயனோடு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். கனா படத்தில் "வாயாடி பெத்த புள்ள" பாடலை பாடிய ஆராதனா அந்த நேரத்தில் குட்டி குழந்தையாக இருப்பார். ஆனால் இப்போது அவருக்கு 11 வயது ஆகிவிட்டது. தன்னுடைய பிறந்த நாளை நேற்று எளிமையாக கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

sivakarthikeyan vijay tv

அதில் ஆராதனா அப்படியே அவருடைய அம்மா ஆர்த்தியை உரித்து வைத்தது போல இருக்கிறார். அம்மாவும் பொண்ணும் க்யூட் ஆக இருக்கும் புகைப்படங்களை பார்த்ததும் ரசிகர்கள் கமெண்ட்களை தெறிக்க விடுகிறார்கள். கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா திரைப்படம் தன்னுடைய நண்பருக்காக சிவகார்த்திகேயனே தயாரித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பார். அது மட்டுமல்லாமல் அந்த படத்தின் மூலமாக தமிழ் பாடகியாக ஆராதனா களம் இறங்கும்போது அவருக்கு ஐந்து வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+