மறைந்த மாரிமுத்துவின் கடைசி ஆசையை நிறைவேற்றுவார்களா சிவக்குமார், சூர்யா? குடும்பத்தினர் எமோஷனல்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்த மாரிமுத்து கடந்த வருடத்தில் காலமானார். அவர் ஆசையாக கட்டி வந்த வீட்டின் வேலை முடிவடைந்திருக்கும் நிலையில் மாரிமுத்துவின் கடைசி ஆசையை நடிகர் சிவகுமார் மற்றும் அவருடைய மகன் சூர்யா, இருவரும் இணைந்து செய்வார்களா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இயக்குனராகவும், நடிகராகவும் பலருக்கும் பரீட்சையமான மாரிமுத்து பல திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தாலும் அவருக்கு பெரிய அளவில் பெயரையும் புகழையும் வாங்கி கொடுத்தது எதிர்நீச்சல் சீரியல் தான். அந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வந்தார்.

ஆனால் ஆரம்பத்தில் எவ்வளவோ கஷ்டங்களை தாண்டி புகழின் உச்சத்தை அடைந்ததும் அவருடைய வாழ்க்கையும் முடிந்து போய்விட்டது. எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பணியில் இருக்கும் போது மாரிமுத்துவிற்கு உடல்நிலை பிரச்சனை ஏற்பட அவரே தனியாக காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு போயிருந்த நிலையில் அங்கு மாரடைப்பால் அவருடைய உயிர் பிரிந்தது.
அந்த செய்தி அவருடைய குடும்பத்தினரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் பெரிய அளவில் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. இப்ப வரைக்கும் அந்த சீரியலில் குணசேகரனாக மாரிமுத்துவின் நடிப்பை பல ரசிகர்கள் மிஸ் பண்ணி வருகிறார்கள். அதோடு கட்டி வரும் வீடு குறித்து பெருமையாக பேசிக்கொண்டு இருப்பார். தான் பல வருடங்களாக வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் இப்போது தன்னுடைய சொந்த வருமானத்தில் பிரம்மாண்டமாக ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன்.
அந்த வீட்டில் ஒவ்வொரு பொருள்களும் பார்த்து பார்த்து வாங்கி பொருத்தி கொண்டு இருக்கிறேன் என்று பல பேட்டிகளிலும் அவருடைய நண்பர்களிடம் பெருமையாக மாரிமுத்து சொல்லிக் கொண்டிருப்பார். இந்த நிலையில் மாரிமுத்துவின் மரணத்திற்கு பிறகு அவர் கட்டி வந்த வீட்டு வேலைகளை அவருடைய மனைவி மற்றும் மகன் செய்து முடித்திருப்பதாக சமீபத்தில் முடிவடைந்த அன்னையர் தினத்தில் கூறியிருந்தனர்.
அதோடு வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அந்த வீட்டின் புதுமனை புகுவிழா நடைபெற இருக்கிறது என்றும் கூறியிருந்தனர். அதே நேரத்தில் மாரிமுத்து மறைவிற்கு முன்பு எதிர்நீச்சல் சீரியலில் இப்போது குணசேகரனாக நடித்து வரும் நடிகர் வேலராமமூர்த்தி இடம் தன்னுடைய வீட்டு வேலை முடிவடைந்ததும் கிரகப்பிரவேசத்திற்கு நடிகர் சிவக்குமார் மற்றும் அவருடைய மகன் சூர்யா வைத்து தான் வீட்டின் திறப்பு விழா வைப்பேன் என்று கூறியிருந்தாராம்
தான் ஆரம்பத்தில் கஷ்டப்படும் போது சூர்யா மற்றும் சிவக்குமார் தனக்கு பல உதவிகளை செய்து இருப்பதாக தன்னிடம் கூறியதாக ராமமூர்த்தி ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் இப்போது மாரிமுத்து வீட்டு வேலை முடிவடைந்திருக்கும் நிலையில் அவர் ஆசைப்பட்ட கனவை நடிகர் சூர்யா மற்றும் சிவக்குமார் நிறைவேற்றுவார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications