சிவகுமார் தலையில் அடிச்சிக்கிட்டாரு..சூர்யா, கார்த்தி கிசுகிசுக்கள்..ஜோதிகாவுக்கு புகழாரம்: பிரபலம்
சென்னை: ஆரம்பத்தில் சூர்யா - ஜோதிகா காதலை சிவக்குமார் சார் எதிர்த்தாலும் பிறகு சம்மதித்துவிட்டார்.. "நானே தேடியிருந்தாலும் இப்படி ஒரு பெண் எங்களுக்கு கிடைத்திருக்க மாட்டார். என்னுடைய மகள் போல ஜோதிகா" என்று ஒருமுறை நான் எடுத்த பேட்டியின்போது கூறினார் சிவக்குமார் சார்" புகழ்ந்து பேசியிருக்கிறார் பத்திரிகையாளர் சபிதா ஜோசப்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், "சிவக்குமார் சாரை பொறுத்தவரை, சினிமா சாராத பெண்ணையே மணம் முடித்தார்.. அதுபோலவே தங்கள் மகன்களுக்கும் சினிமா சாராத பெண்ணையே மருமகளாக கொண்டு வர ஆசைப்பட்டார்..

தன்னுடைய சொந்த பந்தம், உறவுகள், பாரம்பரியம் விட்டுவிடக்கூடாது என்பதால்தான், தன்னுடைய மண்ணை சார்ந்த பெண்ணையே மகன்களுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தார்..
ஜோதிகா - சூர்யா
ஆனால் ஜோதிகா சூர்யா இருவரின் காதலும் வலுவாகி கொண்டே வந்தது. பத்திரிகைகளில் இந்த விஷயம் கசிந்ததுமே, சூர்யாவுக்கும், சிவக்குமார் சாருக்கும் இது கோபத்தை ஏற்படுத்தியது. இதெல்லாம் ஏன் வெளிப்படுத்தணும் என்ற கோபம் அவர்களுக்கு வந்தது. பிறகு, தன்னுடைய சமூகத்திலேயே திருமணம் செய்யலாம் என்று சூர்யாவிடம் எவ்வளவோ சொல்லி பார்த்தார் சிவக்குமார் சார்.
ஆனாலும் சூர்யாவின் காதல் தீவிரமானதாக இருந்தது. எனவே, நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த், உள்ளிட்ட சிலரிடம் இந்த விஷயத்தை கொண்டு சென்று, மகனுக்கு அறிவுறுத்துமாறு கோரினார் சிவக்குமார்.. சூர்யா, ஜோதிகாவின் ரசிகர்களே இந்த காதலை வரவேற்றனர்.. இந்த ஜோடி பொருத்தமான ஜோடி என்பதால, இருவரும் கல்யாணம் செய்தால் நன்றாக இருக்கும் என்று வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
பெருமையாக பேசிய சிவக்குமார்
ஒருகட்டத்துக்கு மேலே, சிவக்குமார் சாரால் எதுவும் செய்ய முடியவில்லை.. பிறகு திருமணத்துக்கு சம்மதித்துவிட்டார்.. தன்னுடைய பேரன், பேத்திகளிடம் மிகவும் பாசமாகவும், அன்பாகவும் நடந்து கொண்டார்..
"நானே தேடியிருந்தாலும் இப்படி ஒரு பெண் எங்களுக்கு கிடைத்திருக்க மாட்டார். என்னுடைய மகள் போல ஜோதிகா" என்று ஒருமுறை நான் எடுத்த பேட்டியின்போது கூறினார் சிவக்குமார் சார்.
அதேபோல, கார்த்திக்கு தமன்னாவுடன் காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கள் வெளியே வந்தன.. அதற்குள் சிவக்குமார் சார், கார்த்திக்கை கண்டித்திருக்கிறார்.. பிறகு கோவையை சேர்ந்த வசதியான வீட்டை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தார்.. அந்த பெண் மிகவும் அன்பானவர்.. அதற்கு பிறகு எந்த காதல் கிசுகிசுவிலும் கார்த்தி சிக்கவில்லை. ஆனால் அதற்குள் நாலஞ்சு காதல் தமன்னாவுக்கு வந்துபோய்விட்டது.
சினிமா நடிகைகள்
சினிமா நடிகைகளை திருமணம் செய்ய வேண்டாம் என்று சிவக்குமார் நினைக்க பெரிதாக எந்த காரணமுமில்லை.. தன்னுடைய சமூகத்தை சேர்ந்த, பெண் மருமகளாக வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தாரே தவிர, நடிகைகள் மீதான கோபம் எதுவும் இல்லை.. அதுமட்டுமல்ல, நடிகைகளை திருமணம் செய்தால் மீண்டும் சினிமாவில் நடிக்க செல்வார்கள், அதனால் தேவையில்லாத சலசலப்புகளும் வரும் என்று நினைத்தார்..
இப்போது அவர் நினைத்தபடியே ஜோதிகா மீண்டும் சினிமாவில் நடிக்க சென்றுள்ளார்.. ஜோதிகாவுக்கு ஏற்கனவே ரூ.150 கோடிக்கு சொத்து இருக்கிறது. சூர்யாவுக்கும் சொத்து உள்ளது.. இருப்பதை கொண்டு நன்றாக இருக்கலாமே? ஏன் மீண்டும் நடிக்க செல்ல வேண்டுமா? என்றுதான் நினைத்தார்"என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications